சென்னை: கூடங்குளத்தை கிட்டத்தட்ட சுற்றி வளைத்துவிட்டது போலீஸ். அணுஉலை உள்ள பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சுற்றுப் பகுதி மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போராட்டக்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அணு உலையை பிரச்சினையின்றித் திறக்க மத்திய மாநில அரசுகள் முயல்கின்றன.
இன்னுமொரு என்கவுன்டருக்குத் தயாராவது போன்ற முன்னேற்பாடுகளை கூடங்குளத்தில் செய்து வருகிறது போலீஸ் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்.
இதையொட்டி 4 தொண்டு நிறுவனங்களுக்கு வரக்கூடிய வெளிநாட்டு நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த தொண்டு நிறுவனங்களை தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
thanks to asiananban.blogsp
No comments:
Post a Comment