Facebook Twitter RSS

Monday, January 16, 2012

Widgets

இந்தியாவின் சொர்க்கபுரியாக மாறும் கூடங்குளம்!

JAN 15: கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்த பிரச்னையை தீர்க்க நாடுதழுவிய போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அது குறித்து தினமலருக்கு  39 பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதி இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி அபுல்கலாம் கூறியுள்ளார். இவரது புரட்டு வாதங்களும் அதற்க்கு பதிலும்.

வாதம் 1: கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 50 முதல் 60 வரையிலான கிராமங்கள் பயன்பெறும் வகையில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான "புரா' (நகர வசதிகளை கிராமப் பகுதிகளுக்கு அளித்தல்).

பதில்: கல்பாக்கம் அணு மின்நிலையம் தொழிலாளர்கள் முதல் இந்தியா முழுவதும் உள்ள மற்றைய அணு மின்நிலையங்கள் வரை உள்ள தொழிலாளர்கள் நிலை அந்தோ பரிதாபம் என்று இருக்க இவர்கள் கூடங்குளத்தை சொர்க்க பூமியாக ஆக்க போகிறார்களாம்.

வாதம் 2:
கூடங்குளத்தை சுற்றி, 30 கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள கிராமங்களை நான்கு வழிச் சாலை மூலம் ஒன்றிணைத்து, அந்தச் சாலையை, திருநெல்வேலி - கன்னியாகுமரியை இணைக்கும் தங்க நாற்கரச் சாலையுடன் சேர்க்க வேண்டும்.

பதில்: இது ஒரு மாய்மாலம், தங்க கடற்கரை சாலையால் யாருக்கு லாபம், இதை கொண்டு பயன் பெறப்போவது எல்லாம் முதலாளிகளும், பெரும் வர்த்தக நிறுவனங்களுமே.

வாதம் 3: கூடங்குளத்தை சுற்றி, 30 முதல் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவி, அதில் குறைந்தது 10 ஆயிரம் பேருக்காவது நேரடி வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கு முன்வரும் தொழில்முனைவோருக்கு, 25 சதவீத மானிய வட்டியுடன் வங்கிக்கடன் வழங்க வேண்டும்.

பதில்: அட பாவிகளா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா! கல்பாக்கம் அணுமின் நிலையம் முதல் மற்றைய அணு மின்நிலையங்களின் தொழிலாளிகளை நிரந்தர தொழிலாளிகளாக ஆக்காமல் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்திருக்கும் நீங்களா? 10ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க போகிறீங்கள்.

அதிலும் தொழில் முனைவோருக்கு 25  சதவீதம் வட்டியில்லா கடனாம் முதலில் விவசாயிகளுக்கும், சிறு தொழில் பண்ணும் வணிகர்களுக்கும் கொடுங்கள். இந்த தொழில் முனைபவர்கள் யார்? பெரும் பணக்காரர்கள் செய்யப்போகும் ஆலை தொழிலுக்கு மானியம், உங்கள் அறிவை தூக்கி குப்பையில் போட.

வாதம் 4: கூடங்குளம் கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பசுமை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மீனவர்களுக்கு உதவும் வகையில், அதிவேகமாக செல்லும் படகுகள், கப்பல் இறங்கு தளம், மீன்பதப்படுத்தும் மையம், மீன்கள் இருப்பும் வைக்கும் மையம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பதில்: அது என்னையா பசுமை வீடுகள். ஐயா அபுல்கலாம் நீங்கள் சொல்ல சொல்ல அப்படியே மெய் சிலிர்கிறது. ஜாதுகோடாவில் யூரோனியம் வெட்டி எடுக்கும்  தொழிலாளிகளுக்கு  இந்த வசதிகள் எல்லாம் செய்து கொடுத்தீர்களா இல்லையே. ஏன் கூடன்குளம் மக்கள் மீது இவ்வளவு அக்கறை.

அணு சக்தி தயாரிக்கத்தேவையான யூரோநியத்தை வெட்டியெடுக்கும் தொழிலாளர்களுக்கு போதிய மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை ஆனால் கூடங்குளத்தை சொர்க்க பூமியாக மாத்த போறாராம் ஐயா அபுல் கலாம். நம்புங்கள் கூடங்குளத்தை சீக்கிரம் பட்டா போட்டு ஏதாவது ஒரு வெளிநாட்டு கம்பெனிக்கு விற்ப்பார்கள்.

வாதம் 5: கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு, தினமும் குறைந்தது ஒரு கோடி லிட்டர் கொள்ளளவில், சுத்திகரித்த குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பதில்: நல்ல குடிநீர்களை நாசமாக்கி விட்டு சுத்திகரித்த குடிநீர் வழங்க போகிறார்களாம். ஜார்கன்ட் மாநிலம் ஜாதுகோடா பகுதியில் இருந்துதான் பெரும் அளவில் அணு சக்தி தயாரிக்க தேவையான யூரோனியம் வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரோ, உணவோ கிடையாது ஆனால் அதில் பணி புரியும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு 45 கிலோமீட்டர் தொலைவில் இருந்து உணவும் தண்ணீரும் வருகின்றது. இப்படி பாட்ட நல்லவர்கள்தான் இந்திய அரசு துறையினரும், அணுசக்தி துறையினரும்.

வாதம் 6: தேவைப்பட்டால், கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியினருக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பேச்சிப்பாறையிலிருந்து குடிநீர் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

பதில்: முதலில் காவரியில் இருந்து தண்ணீர் கொடுங்கடா, முல்லை பெரியாரில் இருந்து தண்ணீர் கொடுங்கடா... பேச்சிப்பாறை தண்ணீரை கொண்டுவர எங்களுக்கு தெரியும்.

வாதம் 7: உலகத்தரம் வாய்ந்த 500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கூடங்குளம் பகுதியில் அமைக்க வேண்டும். பரிசோதனை கூட வசதிகள் கொண்ட இரண்டு நடமாடும் (மொபைல்) மருத்துவமனைகளையும் உருவாக்க வேண்டும்.

பதில்: முதலில் அணு சக்தி தாயரிக்க தேவையான மூலகூறான யூரோனியம் வெட்டி எடுக்கப்படும் பகுதிகளில் உள்ள தொழிலாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுங்கள் ஐயா அதற்க்கு அப்புறம் கூடங்குளத்தை பற்றி பேசலாம். அறிவை  மொத்த குத்தகை எடுத்த மன்மோகன் சிங்கும், அபுல்கலாமும் இந்தியாவை விட்டே ஓடி விடுங்கள்.  இல்லையில் மக்கள் உங்களை துரத்தி அடிப்பார்கள்.

வாதம் 8: கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமத்தின் குழந்தைகள் சிறந்த கல்வி பெற, விடுதிகளுடன் கூடிய மத்திய, மாநில அரசு பாடத்திட்டத்தில் இயங்கும் உயர்தர கல்வி தரும் பள்ளிக்கூடங்கள் அமைக்க வேண்டும்.

பதில்: ஏற்கனவே நீங்கள் கொடுத்த வாக்குகள் எல்லாம் அப்படியே நிறைவேற்றி கிளிச்சிடீன்கள். முதலில் போபால் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் அப்புறமா கூடங்குளம் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டி கொடுக்கலாம். நீயே உலக வங்கியிடம் பிட்சை எடுக்கிறே உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்.

வாதம் 9: அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் மற்றும் அகண்ட அலைவரிசை வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பதில்:  இந்த வசதிகள் யாருக்கு தேவை. அந்த மக்கள் தினம் தினம் கடலுக்கு போகி ஒரு வேலை சோற்றுக்கு மாரடிக்கிறார்கள் இவர்கள் என்ன வென்றால் பிராட் பேன்ட் வசதி செய்யப்போகிறாராம். யாருக்கு உங்கள் அந்நிய முதலாளிகளுக்கா.

வாதம் 10: ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் இளைஞர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, கூடங்குளம் நிலையத்தில் பணிபுரிவதற்கான பயிற்சிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு போதிய உயர் கல்வி அளித்து அவர்களை பணியில் அமர்த்திக் கொள்ள வேண்டும்.

பதில்:  ஐயா... சாமி போதும் நிறுத்துங்கள்!  உங்களது அன்பு மழையில் நினைந்து எங்களுக்கு எல்லாம் ஜலதோஷம் வந்திருச்சி. மக்களை கொன்று வல்லரசு பட்டம் பெற துடிக்கும் மூடர்களையும், மதவாதம் பேசி கலவரங்கள் உண்டாக்கும் வந்தேரிகளையும் , நாட்டை பொரளாதார மேன்படுத்த போகிறேன் என்று சொல்லி அந்நியர்களுக்கு கூறுபோட்டு கொடுக்க நினைக்கும் கயவர்களையும் இந்த நாட்டை விட்டே துரத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets