Wednesday, January 11, 2012
நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம்
நைஜீரியாவில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான மத அடிப்படையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டிலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வோலே ஷோயின்கா, நாடு ஒரு உள்நாட்டுப் போரை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது என்று எச்சரித்துள்ளார்.
பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில், நைஜீரியா ஒரு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
1960 களில் பியாஃப்ரா பகுதியில் கடைசியாக இடம்பெற்ற உள்நாட்டுப் போருக்கு முன்பு இருந்த நிலைக்கும்,தற்போது நைஜீரியாவில் இருக்கும் நிலைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என ஷோயின்கா பிபிசியின் ஆப்பிரிக்க சேவையின் ஆசிரியர் மார்டின் பிளவுட்டிடம் தெரிவித்துள்ளார்.
கிறுஸ்தவர்கள் வாழும் பகுதிகள், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் என இரு பகுதிகளிலும் கொலைகள் நடந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment