Facebook Twitter RSS

Tuesday, January 24, 2012

Widgets

மோடி பிரதமரானால் என்ன நடக்கும்!

JAN 24: கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே.

கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல்  சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.

இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால்  இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும்.

ஒரு கூட்டம் கலவரங்களை நடத்துவதற்கென்றே சதி திட்டங்களை  தீட்டி செயல்படுத்துகிறது என்றால்  உங்களால் நம்பமுடிகிறதா? தானாக உருவாகினால்  அதன் பெயர் கலவரம் ஆனால் அதையே திட்டம் போட்டு  உருவாக்கினால் அது  பயங்கரவாதம். இந்த பயங்கரவாத செயலைத்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் செய்து வருகின்றன.

விநாயகர் ஊர்வலங்களிளின் போது விநாயகரை கடலில் கரைக்க பலவழிகள் இருந்தாலும்  வேண்டும் என்றே சிறுபான்மையினரின் வணக்க தளங்கள்  வழியாக ஊர்வலங்களை கொண்டு சொல்வோம் என்று அடம் பிடிப்பது. அப்படியே இவர்கள் போக அனுமதிக்கப்படும் போது வேண்டுமென்றே தொழுகை நேரம் வரும்வரை ஊர்வலத்தை தாமதப்படுத்துவது. பின்னர் ஊர்வலத்தில் "பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு" போன்ற பல  கீழ்த்தரமான வார்த்தை பிரோயோகங்களை செய்வது.

இஸ்லாமியர்கள் தொழுகைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பள்ளிவாசல்கள் முன்பு  வெடிவெடித்து, கூக்குரலிட்டு  ஆர்ப்பாட்டம் செய்வது.  ஊர்வலத்தின் மீது இவர்களே செருப்புகளை தூக்கி வீசிவிட்டு கலவரம்  நடத்துவது. சிறுபான்மையினரின் கடைகளை தீவைத்து கொளுத்துவது, உடைத்து நாசம் செய்வது. பள்ளிவாசல்களில் பன்றி தலைகளை போடுவது, கோவில்களில் இவர்களே மாட்டு தலைகளை போட்டுவிட்டு அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று சொல்வது.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரவோடு இரவாக சிலைகளை வைப்பது. பின்னர் அதை கோவில் என்று சொல்லி எடுக்க மறுத்து அதை கொண்டு கலவரம் நடத்துவது இதுபோன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் ஓவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. RSS மற்றும் அதன் சங்கபரிவாரங்கள் 'சாகா' மற்றும் ஆயுத பயிற்ச்சிகளை  எடுத்து  கலவரங்களை உண்டாக்கி மக்களை பிளவுபடுத்துகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளை இவர்களே நடத்தி விட்டு அந்த பலியை சிறுபான்மை மக்கள் தலையில் போட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். பாபர் மசூதி இருந்த  இடத்தில் ராமர் பிறந்தார் என்று சொல்லி அதை உடைத்து கலவரம் உண்டாக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வந்த நல்லவர்கள்தான் இவர்கள். ரத யாத்திரை ஒன்றை நடத்தி அது போகும் வழியெல்லாம் சிறுபான்மை மக்களின் ரத்தங்களை ஓட்டியதும் இவர்களே.

மும்பை, பகல்பூர், பீவாண்டி, நெல்லி, குஜராத், கோவை, இப்படி திரும்பிய திசை எங்கும் கலவரங்களை நடத்தி சிறுபான்மையினரின் உயிர்களை குடித்த வஞ்சகர்களும் இவர்களே.  இதன் உச்ச கட்டம்தான் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் அரசு அலுவலங்களில்  பாகிஸ்தான் கொடியை ஏற்றியது. இதை சிறுபான்மையினர் செய்தார்கள் என்று சொல்லி பெரும் கலவரத்தை நடத்த ஆயுதங்களுடன் எதிர்பார்த்து இருந்தது இப்படி இவர்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே  போகலாம்.

இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான ஹிந்துத்துவா அமைப்புகளின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. இவர்கள்தான் தற்போது மோடியை இந்தியாவின் பிரதமராக்க  வேண்டும் என்று ஒரு கோசத்தை எழுப்பி  வருகின்றனர்.  குஜராத் முதல்வராக இருந்து இவர் எப்படி ஒரு கலவரத்தை  நடத்தினாரோ அதுபோல் இந்தியாவுக்கு பிரதமராகி இந்தியா முழுவதும் கலவரக்காடாக்க திட்டமா? வர்ணாசிரம சங்கபரிவார் சாத்தானை இந்தியாவின் முதல்வராக்கினால் இந்தியா இடுகாடாகும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது.
*மலர்விழி*    

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets