
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம்
அன்சாரி (34) கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில் கைது
செய்யப்படுகிறார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ
ரகசியங்களைக் கடத்த முயன்றபோது அவரை கைது செய்ததாக க்யூ பிரிவு போலீசார்
செய்தி பரப்பினர். ஆதாரம் அவர் வைத்திருந்த செல்போனில் உள்ள குன்னூர் ராணுவ
பயிற்சிக் கல்லூரி மற்றும் அணுமின் நிலையங்களின் புகைப்படங்கள். இணையத்தை
திறந்தால் எளிதாக கிடைக்கும் இப்படங்களை ஒரு ஆள் வைத்து புகைப்படம்
எடுக்குமளவுக்கு ஐஎஸ்ஐ என்னமோ அர்ஜூன், விஜயகாந்த் படங்களில் வரும் காமடி
பீசாக காட்டுகின்றனர் தமிழக போலீசார்.