Facebook Twitter RSS

Sunday, July 07, 2013

Widgets

மேற்கின் அரசியலில் சிக்கி தவிக்கும் அராபிய அரசியல் - ஒரு முஸ்லீம் மூலம் முஸ்லீம்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் !?


   
கிப்தின் இடைக்கால அரசிற்கு  சவூதி மன்னர் அப்துல்லாஹ் வாழ்த்து தெரிவித்துள்ளார் . நிகழ்வுகளும் அங்கீகாரமும் திட்டமிட்டபடி நடந்துள்ளன . செக்கியுலரிசம்  வேசஸ் இஸ்லாம் என மக்கள் இரண்டு முகாம்களாக்கப் பட்டு மோத விடப்பட்ட நிலையில் மீண்டும் இராணுவம் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு இந்த ஆட்சி மாற்ற நாடகத்தை பக்குவமாக அரங்கேற்றியுள்ளது . இந்த இடத்தில ஆட்சிக்கடிவாளம் யாரின் கையில் இருந்திருக்கின்றது என்ற இரகசியம் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது .

   மார்க்கத்தை மதமாக்குதல் என்பதில் இருந்துதான் முர்சி தரப்பின் அரசியல் தளம் பரீட்சார்த்தமாக அரங்கேற அனுமதிக்கப் பட்டுள்ளது என்றே நிலமையை சந்தேகிக்க வேண்டியுள்ளது .அந்த வகையில் வாழ்வியலில்  இருந்து மார்க்கத்தை பிரித்து அது விகிதாசார அடிப்படையிலான மனித விருப்பு என்ற ஜனநாயக பாடத்தை பக்குவமாக மீண்டும்  செக்கி யு லாரிஸ்ட் தரப்பு நடத்திக் காட்டியுள்ளதா  !? அதன் மூலம்  ஜெஸ்மின் புரட்சியின் வெளித் தெரியாத சப் மிசன் அடையப்பட்டுள்ளதா  !? என்றே பல கேள்விகளை நாம் கேட்க வேண்டியுள்ளது .

  இஸ்லாத்தை வாழ்வியலாகவும் அது அல்லாததை குப்ர் என (ஜனநாயகம் உட்பட ) நேற்று பேசியவர்களை ஒரு அரசியல் குழப்பத்தை காரணம் காட்டி நிகழ்வு சித்தாந்த நடப்பை நம்பி  ஆட்சி ஏறுவதற்கான நியாயங்களை இஸ்லாத்தை ஒப்புக்கு காட்டி பேசவைத்து முஸ்லீம் உம்மாஹ் திசைதிருப்பப் பட்டது .அந்த வகையில் குப்ர் தரப்பு தனக்கெதிரான ஒரு சித்தாந்த அரசியலை காலத்துக்கு ஒவ்வாத செல்லாக் காசாக ஒரு இஸ்லாமிய இயக்கத்தை !?வைத்தே பக்குவமாக பேச வைத்ததே கடந்த ஒரு வருடமாகும் .( பல வருட உழைப்பை ஒரு வருடத்தில் ஊதாரித்தனம் பண்ணிய உதாரண புருஷர்களாக முர்சி தரப்பு மாறியதுதான் இங்கு மிச்சமாகும் .)

    1.  போராட்டத்தில் தோல்வி என்பது வேறு எதிர்தரப்பில் இருந்து தனக்கெதிராக தானே பாவிக்கப் படுவதென்பது வேறு,

   2.  முஸ்லிமிடம் இருந்து இஸ்லாத்தை வேறுபடுத்துவது 

                                       குப்பாரின் துல்லியமான இலக்கு இந்த இரண்டு அடைவுகளும் தான் . முபாரக்கை தூக்கி முர்சியை காட்டி இந்த இலக்குகள்  ஒரு படமாக ஒட்டப்பட்டது ;பின் அவரையும் தூக்கி அட்லி மன்சூர் இன்று அமர்த்தப் பட்டுள்ளார் . எப்போதும்  இஸ்ரேலோடு ' கேம் டேவிட் 'போன்ற ஒப்பந்தங்கள் பக்குவமாக  பேணப்படும் என்பது மட்டும் தான்  நிலையான எகிப்தின் அரசியலாக  இருக்க வேண்டும் என்பதே  'சியோனிசம் ' கருதும் அடைவு மட்டமாகும் 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets