Monday, July 30, 2012
ஜிஹாத் - மேற்குலகின் பிரச்சாரமும், உண்மை நிலையும்
ஜிஹாத் - மேற்குலகின் பிரச்சாரமும், உண்மை நிலையும்
கடந்த பல தசாப்தங்களாக மேற்குலகைப் பொருத்தவரையில் ஜிஹாத்
என்பது ஒரு வாதப்பொருளாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் உண்மையான
சக்தியினை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணர்ந்ததாலேயே, மேற்குலகு,
ஜிஹாத் என்ற சொல்லிற்கு அஞ்சுகிறது. எனவே அதனது உண்மை அர்த்தத்தினை திரிக்க
அவர்கள் முயற்சிப்பது ஒன்றும் முஸ்லிம்களுக்கு புதிதானது அல்ல.
முஸ்லிம் உம்மத்திற்கு எதிராக சிலுவைப்போர் மேற்கொள்ளப்படும்
போதெல்லாம், ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தம் திரிக்கப்படுகிறது என்பதனை நாம்
வரலாறு நெடுகிலும் காண்கின்றோம். ஆனால்; அதன் வடிவங்கள் வேறுபடக்கூடும்.
உதாரணமாக, டோனி பிளயெரின் கூற்றில் ‘இஸ்லாம் ஒரு சமாதானத்திற்கான
மார்க்கம்" என்பதாகவும், மேற்குலகை ஆதரிக்கும் இஸ்லாமியவாதிகளின்
அர்த்தத்தில், "ஒருவர் தமது மனோ இச்சைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு
விஷயம்" என்பதாகவும் இருக்கலாம்.
முகப்பு செய்திகள் » விமர்சனங்கள் தொடர்கள் » கட்டுரைகள் » மற்றவை » எங்களைப் பற்றி தொடர்புக்கு சுவனத்தில் வாசல்கள் திறக்கின்றன!
“உங்கள்
இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும்
செலுத்தி வாருங்கள். வளமான மேன்மையான நகரமும் உண்டு; இன்னும் (அவன்)
மன்னிப்பளிக்கும் இறைவன்” (சூரா ஸபா:15-வது வசனம்)
சிறந்த மனிதர், சிறந்த சமூகம், சிறந்த
தேசம், கருணையான இறைவன் என்ற இஸ்லாத்தின் சித்தாந்தத்தை விவரிக்கும்
திருக்குர்ஆன் வசனத்தை தான் மேலே கண்டோம்.
சிறந்த மனிதர்களை உருவாக்குவதுதான்
இஸ்லாமிய மார்க்க பாடங்களின் சாராம்சம். மனிதனை சுத்திகரித்து வாழ்க்கையை
பரிசுத்தப்படுத்தும் விதமாகவே இஸ்லாத்தில் நம்பிக்கையும், கோட்பாடுகளும்,
வணக்க வழிபாடுகளும் அமைந்துள்ளன.
Friday, July 20, 2012
வளைகுடா நாடுகளில் புனித ரமலான் மாதம் துவங்கியது! இனி சூடேறிய பாலைவன பூமியில் ரமலானின் நன்மைகளின் வசந்த மழை
துபாய்:இனி சூடேறிய பாலைவன பூமியில் ரமலானின் நன்மைகளின் வசந்த மழை பொழியப் போகிறது. வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் எகிப்து, ஜோர்டான் நாடுகளிலும் வெள்ளிக்கிழமை புனித ரமலான் மாதம் துவங்கியது.
முஸ்லிம்களுக்கு ஒரு மாத காலம் இறையச்ச பயிற்சியை அளிக்கும் பாவங்களின் இலையுதிர்காலமாகவும், நன்மைகளின் பொற்காலமாகவும் திகழும் மாதம்தான் புனித ரமலான். ரமலானில் அதிகாலையில் இருந்து மாலை சூரிய அஸ்தமிக்கும் வரை நோன்பு நோற்றல், புனித திருக்குர்ஆனை ஓதுதல், இரவு சிறப்பு தொழுகை, பாவ மன்னிப்புக்கோரல், இறைவனிடம் தேவைகளை கேட்டல், தான தர்மங்களை வணங்குதல், பொறுமை, பச்சாதாபம், நல்லிணக்கம், ரமலானின் கடைசி இரவுகளில் வரும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் இரவை அடைவதற்காக இஃதிகாப்(மஸ்ஜிதில் தனித்திருத்தல்) போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ளல் என நன்மைகளின் வசந்தகாலமாக ரமலான் திகழுகிறது.
முர்ஸியுடன் ஃபலஸ்தீன் அதிபர் சந்திப்பு!
கெய்ரோ:எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸியுடன் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஃபலஸ்தீன்-எகிப்து உறவு, ஃபலஸ்தீன் நல்லிணக்கம், சுதந்திர ஃபலஸ்தீன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அதிபர் தேர்தலில் அமோக வெற்றியை பெற்ற முஹம்மது முர்ஸிக்கு வாழ்த்து தெரிவித்த மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலுக்கு எதிராக எகிப்தின் பரிபூரண ஆதரவு தங்களுக்கு தேவை என்பதை அவரிடம் தெரிவித்தார். முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் இஸ்ரேல் விவகாரத்தில் தனது நிலைப்பாடு இருக்கும் என முர்ஸி தன்னிடம் உறுதி அளித்ததாக அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
Thursday, July 19, 2012
ரமலானை வரவேற்போம்!!!
(அறிவிப்பாளர்:இப்னு மஸ்வூத்(ரலி) –ஆதாரம்: முஸ்லிம்)
புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர்.
ஹமீதா குதுப் மரணம்!
பாரிஸ்:ஷஹீத் செய்யத் குதுபின் சகோதரியும் பிரபல முஸ்லிம் பெண் மார்க்க அறிஞருமான ஹமீதா குதுப் மரணமடைந்தார். அவருக்கு வயது75. பிரான்சு தலைநகர் பாரிஸில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. பாரிஸில் முஸ்லிம் பெண்களுக்காக மார்க்க உரை நிகழ்த்த வந்த வேளையில் அவரது மரணம் நிகழ்ந்தது.
இஃவானுல் முஸ்லிமீனுக்கும், எகிப்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து 25 -வது வயதில் ஹமீதா குதுபிற்கு 1965-ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
Wednesday, July 11, 2012
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரி நாடுதழுவிய பிரச்சாரம்
புதுடெல்லி:எவ்வித குற்றமும் நிரூபணமாகாமல் நாடு முழுவதும் பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ள இருக்கின்றது. கடந்த ஜூன் 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை உற்று நோக்கும் போது இந்தியாவில் பல சிறைச்சாலைகளில் பல முஸ்லிம் இளைஞர்கள் பல வருடங்களாக விசாரணை கைதிகளாகவே இருந்து வருகின்றனர். மேலும் அவர்களது வழக்குகள் தொடர்பான் விசாரணைகள் காலம் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
முஸ்லிம் வேட்டை:கண்ணீரும், கண்டனங்களும் நிறைந்த அரங்காக மாறிய பொதுக்கூட்டம்!
புதுடெல்லி:மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், காட்கோபர் குண்டுவெடிப்புகள், பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர், கத்தீல் சித்திக்கியின் படுகொலை, ஃபஸீஹ் மஹ்மூதின் மர்மமான கைது… தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பாதுகாப்பு ஏஜன்சிகள் குறி வைத்து வேட்டையாடிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஏற்பாடுச்செய்த பொதுக்கூட்டத்தில் கண்ணீர் கதைகளை கேட்டு அரசு மீது கோபக்கனல் வீசியது.
உள்ளத்தில் அடக்கி வைத்த எதிர்ப்புகளையும், கவலைகளையும் கான்ஸ்ட்யூஸன் அஸெம்ப்ளி க்ளப்பில் டெபுட்டி ஸ்பீக்கர் ஹாலில் திரண்டிருந்த மக்களிடம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இன்று உலக மக்கள் தினம்!
புதுடெல்லி:”அனைவருக்கும் ஆரோக்கியமான மகப்பேறு” என்ற தொனிப்பொருளுடன் இன்று உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11-ஆம் தேதி உலக மக்கள் தொகைதினமாக கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்ட ஆளுகை கவுன்சில் தீர்மானித்தது.
மக்கள் தொகைப் பெருக்கத்தினால் உருவாகும் பிரச்சனைகள், குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், அன்னையரின் ஆரோக்கியம், பால் சமத்துவம் உள்ளிட்ட காரியங்களில் கவனம் செலுத்த உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்திற்கு அல்ல! இஸ்லாத்தின் எழுச்சியை கண்டு! – ஈரான்!
டெஹ்ரான்:எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்தை கண்டு அல்ல என்றும் இஸ்லாத்தின் வளர்ச்சியே அவர்களின் அச்சத்திற்கு காரணம் என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஸஈத் ஜலீலி கூறியுள்ளார்.
மேற்காசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்திய இஸ்லாமிய எழுச்சிக்கு துனீசியாவின் புரட்சியே வழி காட்டியது. இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் சமூகம் முன்னேறுமானால் சுதந்திர ஃபலஸ்தீன், அல்குத்ஸ் உள்ளிட்ட தங்களது அனைத்து லட்சியங்களையும் அவர்களால் அடைய முடியும் என்று அவர் கூறினார்.
எகிப்து:நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து பாராளுமன்றம் கூடியது!
கெய்ரோ:உச்ச அரசியல் சாசன நீதிமன்றம் மற்றும் ராணுவ கவுன்சிலின் உத்தரவுகளை புறக்கணித்துவிட்டு எகிப்து பாராளுமன்றம் நேற்று கூடியது.
சபாநாயகர் ஸஅத் அல் கதாதனியின் தலைமையில் கூடிய பாராளுமன்றம் சிறிது நேரமே நீடித்தது. பாராளுமன்றத்தை கலைத்த நடவடிக்கையை குறித்து மதிப்பீடு செய்து மாற்று வழியைக் குறித்து ஆலோசிப்பதே பாராளுமன்ற கூட்டத்தின் நோக்கம் என சபாநாயகர் தெரிவித்தார். பாராளுமன்றம் கூடியது நீதிமன்றத்தை மீறும் நடவடிக்கை அல்ல என்றும், மாறாக தீர்ப்பை எவ்வாறு அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காகும் என்று கதாதனி தெரிவித்தார். இதற்காக அப்பீல் நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவேண்டும் என்ற சபாநாயகரின் தீர்மானத்தை அங்கீகரித்த பிறகு பாராளுமன்றம் கலைந்தது.
Monday, July 09, 2012
அரேபிய புரட்சிக்கு பின்னரான அந்நாடுகளின் பெண்களின் நிலை!
அரேபிய புரட்சிக்கு பின்னரான அந்நாடுகளின் பெண்களின் நிலை!
உலகின் பாரம்பரியமிக்க ஆய்வு நிறுவனமான Gallup, அரேபிய புரட்சிக்கு பின்னரான அந்நாடுகளின் பெண்களின் நிலை குறித்த ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது (எகிப்து, லிபியா, துனிசியா உள்ளிட்ட ஆறு அரேபிய நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது). அதிலிருந்து சில தகவல்கள்...
1. தங்கள் நாட்டு சட்டத்தில் ஷரியாவின் பங்கு இருக்கவேண்டும் என்று கூறும் அரேபிய பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை ஒத்தே இருக்கின்றது.
சிரியா அமைதி முயற்சி தோல்வி – கோஃபி அன்னன்!
ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியாக சிரியாவிற்கு சென்று அங்கு நிலவும் பிரச்சனைகளை தீர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் தோல்வியை தழுவியுள்ளதாக கோஃபின் அன்னன் தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகளில் இருந்து கரையேற தான் சமர்ப்பித்த திட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டும் மீதமுள்ளதாக அன்னன் கூறுகிறார்.
“சிரியா நெருக்கடி துவங்கி 16 மாதங்கள் கழிந்துவிட்டன. மூன்று மாதங்கள் முன்பு நாங்கள் தலையிடத் துவங்கினோம். அமைதியான அரசியல் மூலமாக இதற்கு தீர்வு காண முடிந்த வரை முயற்சித்து விட்டோம். ஆனால் வெற்றிப்பெற முடியவில்லை என்பது தெளிவானது. மேலும் வெற்றிப் பெறுவோம் என்ற அறிகுறியும் இல்லை.”- என்று கோஃபி அன்னன் கூறியதாக பிரான்சு நாட்டுப் பத்திரிகை கூறுகிறது.
எகிப்து அதிபருக்கு சவூதி மன்னர் அழைப்பு!
ரியாத்:புனித தலங்களின் காப்பாளரான சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் அழைப்பை ஏற்று எகிப்தின் புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி புதன்கிழமை சவூதி அரேபியா செல்ல உள்ளார். இத்தகவலை சவூதிக்கான எகிப்திய தூதர் அஹ்மது கத்தான் தெரிவித்துள்ளார்.
சவூதி சுற்றுப் பயணத்தில் முர்ஸி, மன்னர் அப்துல்லாஹ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திப்பார். மேலும் புனித உம்ராவை நிறைவேற்றுவார். முர்ஸியின் சுற்றுப் பயணத்தின் போது சவூதி-எகிப்து இடையேயான உறவை மேலும் வலுப்பெறும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நடவடிக்கையை ரத்துச் செய்தார் முர்ஸி!
கெய்ரோ:எகிப்தில் ராணுவ அரசால் சட்டவிரோதம் என கூறி பாராளுமன்றத்தை கலைத்த நடவடிக்கையை ரத்துச்செய்து உத்தரவிட்டுள்ளார் புதிய அதிபரான முஹம்மது முர்ஸி.
அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடக்கும் வரை பாராளுமன்ற கூட்டம் நடைபெறவேண்டியது கட்டாயம் என்பதால் பழைய பாராளுமன்றம் அமலில் இருக்கும் என முர்ஸி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு வாடைக்குக் கூட வீடுகள் இல்லை – தலைநகர் டெல்லியில் அவலம்!
டெல்லி இந்தியாவின் தலைநகரமாம் டெல்லியில் வீடு வாடகைக்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் வேளையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை என்று ஹிந்து நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடு தர மறுக்கின்ற அவலம் தொடர்கிறது என்று ஹிந்து பத்திரிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற அவலங்கள் படித்தவர்கள் அதிகம் வசிக்கக் கூடிய நியூ பிரண்ட்ஸ் காலனி, வசந்த் கன்ஜ், ஜன்க்புரா மற்றும் ரோகினி ஆகிய பகுதிகளில் நடந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நியூ பிரண்ட்ஸ் காலனியிலுள்ள குடியிருப்புகளின் ஏஜென்ட் ஒருவரோ இங்கு “இந்தியர்களுக்கு மட்டுமே இடமுண்டு முஸ்லிம்களுக்கு அல்ல” என்று கூறியுள்ளார். இதே காலனியில் இன்னொரு முஸ்லிம் நபருக்கும் இதேப்போன்று அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவர் முஸ்லிம் என்பதால் அவரிடம் வீடு வாடகைக்கு எடுக்க அனைத்து வசதிகள் இருந்தும் வீட்டின் உரிமையாளர்கள் வீடு தர மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்து நிருபர்கள் புதுமணத் தம்பதிகள் போன்று வேடமிட்டு ரோஹினியின் செக்டார் 8-ல் வீடு வாடகைக்கு கேட்டனர். ஆனால் அதன் உரிமையாளர்களோ இங்கு ஹிந்துக்கள் வசிப்பதால் முஸ்லிம்களுக்கு தர முடியாது என்றதுடன். இந்தப் பகுதியில் எங்கும் முஸ்லிம்களுக்கு வீடு கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
அதுவும் தனியாக வாழும் பெண்கள் என்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஹிந்து நாளிதழின் நிரூபர் கணவன் இல்லாத பெண்ணாக வீடு கேட்டபோது கணவன் இல்லாதவள் என்று முதலில் கரிசனம் காட்டிய தரகர்கள் பின்னர் முஸ்லிம் என்றவுடன் வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று மழுப்பியுள்ளனர்.
இதனை உற்று கவனிக்கும் போது மத ரீதியாக பிளவுகளை ஏற்படுத்த அதிகாரமற்ற குழு ஒன்று டெல்லியில் இயங்கி வருவதை அறியமுடிகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு கஷ்மீரிகள் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் அகதிகள் தங்கும் இடத்தின் அருகில் வீடுகளை கட்டுவது டெல்லியில் வழக்கமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் பேராசிரியரான ரிஸ்வான், கைசர் சகட் மற்றும் முனிர்கா ஆகிய பகுதிகளில் வீடு கிடைப்பதில் தமது பெயர் பெரிய இடைஞ்சலாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற செயல்கள் குறித்து வழக்கறிஞர் அசோக் அகர்வால் கூறுகையில்; இதுபோன்ற செயல்கள் சட்டப்படி தவறு என்றாலும் சமூகத்தில் இதுபோன்ற செயல்களை அடையாளம் காணுவது கடினம் என்று கூறினார். மேலும் அரசு இதனை சரி செய்வது இயலாத காரியம் என்றும் கூறினார்.
மேலும் வீட்டு விவகாரங்களில் மலாய், சைனீஸ் மற்றும் இந்திய மக்களிடையே பொது ஒதுக்கீடை அமுல்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை உதாரணமாகக் கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் தலித்துகளே இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். ஆனால் அவர்களின் பெயரின் மூலம் உடனடியாக அவர்களின் ஜாதி தெரியவராது என்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் குறைவு என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sunday, July 08, 2012
தோழர்கள் - 4 - ஆஸிம் இப்னு தாபித் (عَاصِمَ بْنَ ثَابِتِ بْنِ أَبِي الْأَقْلَحِ) வரலாறு - தோழர்கள்
பத்ருப் போரில் ஏற்பட்ட படுதோல்வியும் தம் பெருந்தலைவர்களது உயிரிழப்பும் மக்கத்துக் குரைஷிகளை அளவற்ற ஆத்திரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியிருந்தன. உயிர் பிழைக்கத் தப்பித்து மதீனாவுக்கு ஓடியது மட்டுமல்லாமல் அரசாங்கம் ஒன்றை நிறுவும் அளவிற்கு வளர்ந்துவிட்ட முஹம்மதை எப்படியாவது கொன்றொழித்தால்தான் பட்ட அவமானத்திற்கும் அடைந்த துன்பத்திற்கும் ஒரு தீர்வு என்ற நிலையிலிருந்தார்கள் அவர்கள்.
பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்பதே மூச்சாகிப் போயிருந்தது அவர்களுக்கு. ஹிஜ்ரீ 3ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் பெரும்படையொன்று திரட்டப்பட்டு, அது மதீனாவை நோக்கி முன்னேறியது.
பெரியவர், சிறியவர், செல்வந்தன், ஏழை என்றெல்லாம் பார்க்காமல் அனைவரும் சேர்ந்து கொண்ட படை. தவிர, உயர்குடியாளர்களின் மனைவியரும் பெண்மக்களுங்கூட படையில் இருந்தனர். அவர்களது பங்கு, படையில் வீரர்களை ஊக்குவித்துத் தூண்டிவிடுவது. போரில் அவர்கள் தளர்ச்சியுற்றாலோ, பயந்துபோய் பின்வாங்கினாலோ அவர்களின் விலாவில் குத்தி, வீரம் தூண்டி அனுப்புவதற்கு அப்பெண்கள். இன்றைய விளையாட்டுப் போட்டிகளில் பார்க்கிறோமே, ஊக்க மங்கைகள், ஏறக்குறைய அதுபோல.
மெட்ரோ ரெயில்:நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜித் கண்டுபிடிப்பு!
புதுடெல்லி:டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜிதின் சிதிலங்கள் பூமிக்கடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அருகே மெட்ரோ ரெயிலுக்காக நிலத்தை தோண்டிய வேளையில் மஸ்ஜிதின் சுவரும், சிதிலங்களும் முகலாய மன்னர் ஷாஜஹானின் காலத்தில் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜித் என கருதுவதாக தொகுதி எம்.எல்.ஏ ஷுஐப் இக்பால் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் இன்று முதல் ஜனநாயக தேர்தல்!
திரிபோலி:முஅம்மர் கத்தாஃபியின் யுகம் முடிந்த பிறகு லிபியாவில் முதன் முதலாக இன்று(ஜூலை-7) ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு ஏற்பாடுகள் நடந்து வரவே, மோதல் சூழல் நிலவுவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
40 ஆண்டு காலம் லிபியாவில் நடந்த முஅம்மர் கத்தாஃபியின் ஏகாதிபத்திய ஆட்சி மக்கள் புரட்சியின் மூலமாக முடிவுக்கு வந்தபிறகு முதன் முதலாக சுதந்திரமான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
Saturday, July 07, 2012
உமர் பின் கத்தாப் – தொலைக்காட்சி தொடர் ரமலானில் ஒளிபரப்பாகிறது!
தோஹா:இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப் வரலாற்றை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி தொடர் வருகிற ரமலான் மாதம் முதல் ஒளிபரப்பாகும் என கத்தர் தொலைக்காட்சியின் இயக்குநர் முஹம்மது பின் அப்துற்றஹ்மான் அல்கவாரி அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய வரலாற்றில் பரிபூரண ஆளுமையான வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி தொடரை கத்தர் தொலைக்காட்சியும், எம்.பி.சி குழுமமும் இணைந்து தயாரித்துள்ளன.
ரமளானை வரவேற்போம்!
இந்த மாதம் எப்படி குர்ஆனின் மாதமோ அது போன்றே ஈகையின் மாதம். இம்மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் வறியவரின் அன்றாட கஷ்டங்களை நாம் உணர்கின்றோம். எனவே அதனைப் போக்கும் முகமாக இறைவன் நமக்கு வழங்கி இருக்கும் செல்வத்தை அவர்களுடன் பங்கு வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கொடுப்பது கொண்டு ஒரு போதும் நமது செல்வம் குறைந்துவிடுவதில்லை. மாறாக அதைவிட சிறப்பானதை இறைவன் நமக்கு நல்குவதாக வாக்களிக்கின்றான்.
நன்மைகளை
அள்ளித் தரும் புனித ரமளான், மீண்டும் ஒரு முறை நம்மை சந்திக்க
வருகின்றது. இது தொழுகை மற்றும் நோன்பின் மாதம். இறையச்சத்தை இதயத்தில்
ஏற்றும் மாதம். தேவை உடையோருக்கு ஈந்துதவி, இறை உவப்பை பெறும் மாதம்.
தன்னையே அழித்துக் கொள்ளும் பாவம் புரிந்தாலும் அதற்காக பச்சாதாபப்பட்டு
பாவமன்னிப்பைத் தேடி பெற்றுக் கொள்ளும் மாதம்.
தமிழக அரசு இஸ்லாமிய மாணவர்கலுக்கு கல்வி உதவி தொகை ஆறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)…. தமிழக அரசு
இஸ்லாமிய மாணவர்கலுக்கு கல்வி உதவி தொகை ஆறிவிப்பு தமிழ்நாட்டில் அரசு
பெறூம் மற்றூம் அங்கீகரிகபட்ட தனியார் கல்வி நீலையைங்களில் கல்வி பயிலும் சிறூபன்மை வகுப்பைச்
இஸ்லாமிய மாணவ/மாணவிகழுக்கு 2012-2013
ஆம்
ஆண்டிற்கன் பள்ளிபடிப்பு மற்றூம் மேற்படிப்பு (1-ஆம் வகுப்பிலிந்து கல்ழுரி படிப்பு வரை) உதவி தொகை. விண்ணப்பத்துடன் இனைக்க
வண்டிய ஆவணைங்கள் 1,கல்வி சான்றீதழ் 2,சாதிச் சான்றீதழ் 3,ரெஷன் கார்டு 4,பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ(மாணவ/மாணவி)-1
5,வங்கி கணக்கு புத்தகம் 6,வருமான சான்றீதழ்(2011-2012)அல்லது 10/பத்திரதில்
அச்சடித்து பெற்றோர்கல் தனது
வருமாத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்ய கடைசி நாட்கள் (1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை)15.08.2012 மற்றூம் (11,12,பாலிடெக்னிக் இளங்கலை மற்றூம் முதுகலை
பட்டப்படிப்புகள்) பூர்த்தி செய்ய
கடைசி நாட்கள் (31.09.20120) இவண் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா ,
சமுக பாட்டுத்துறை,
மஞ்சகொல்லை கிளை,
நாகப்பட்டினம் மாவட்டம்.
Subscribe to:
Posts (Atom)