இந்த மாதம் எப்படி குர்ஆனின் மாதமோ அது போன்றே ஈகையின் மாதம். இம்மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் வறியவரின் அன்றாட கஷ்டங்களை நாம் உணர்கின்றோம். எனவே அதனைப் போக்கும் முகமாக இறைவன் நமக்கு வழங்கி இருக்கும் செல்வத்தை அவர்களுடன் பங்கு வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கொடுப்பது கொண்டு ஒரு போதும் நமது செல்வம் குறைந்துவிடுவதில்லை. மாறாக அதைவிட சிறப்பானதை இறைவன் நமக்கு நல்குவதாக வாக்களிக்கின்றான்.
நன்மைகளை
அள்ளித் தரும் புனித ரமளான், மீண்டும் ஒரு முறை நம்மை சந்திக்க
வருகின்றது. இது தொழுகை மற்றும் நோன்பின் மாதம். இறையச்சத்தை இதயத்தில்
ஏற்றும் மாதம். தேவை உடையோருக்கு ஈந்துதவி, இறை உவப்பை பெறும் மாதம்.
தன்னையே அழித்துக் கொள்ளும் பாவம் புரிந்தாலும் அதற்காக பச்சாதாபப்பட்டு
பாவமன்னிப்பைத் தேடி பெற்றுக் கொள்ளும் மாதம்.


