Latest News
Showing posts with label சிந்திக்கவும். Show all posts
Showing posts with label சிந்திக்கவும். Show all posts
Tuesday, October 08, 2013
டாலரை காக்கும் செளதி அரேபியா!!!
அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்தேன்.ஆனால், அதைச் செய்வது சாத்தியமா?கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.
Wednesday, October 02, 2013
கிலாபத்தின் வீழ்ச்சியே மனிதகுலத்தின் சாபக்கேடு!
முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாபா (இஸ்லாமிய அரசு) 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதியில் (28 ரஜப் மாதம் ஹிஜ்ரி 1342) முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் துருக்கிய தலைநகரான ஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு 2008ம் ஆண்டுடன் 84 வருடங்கள் கடந்துவிட்டன. கிலாபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும், முஸ்லிம் உலகிலே அவர்களின் கைம்பாவையாக தொழிற்பட்ட ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரியதொரு அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். இருபதாம் நு}ற்றாண்டு முழுவதும் முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டுமொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உம்மா பொருளாதார பலமற்ற, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிற்சிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மத் இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும், ஜனநாயக கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல், பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசமாக மாறிவிட்டது.
Tuesday, September 24, 2013
இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் பகுதி 3
புரட்சி - திருக்குர்ஆனின் வழியில்


மக்காவில் அருளப்பட்ட இறைவசனங்களின் மூலம் இறைவன் உலகுக்கு தந்த ஒளி மக்காவில் அருளப்பட்ட திருமறையின் இறைமொழிகள் ஒரு கேள்விக்கு தெளிவாகவும் தீர்க்கமாகவும் விடை தந்து கொண்டே இருந்தன. 13 ஆண்டுகளாக இந்த விடை கொண்டு அந்த மக்கள் அல்லாஹ்வின் வழிநோக்கி அழைக்கப்பட்டார்கள். இந்த 13 ஆண்டுகளிலும் இந்தக் கேள்விக்கு விடைதந்த இறைவசனங்களின் அடிப்படைத் தன்மைகள் மாறவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்கு விடைதந்த பாங்கும் பாணியும் மாறிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் திருக்குர்ஆன் இந்தக் கேள்விக்குப் பதில் தந்த பாங்கில், அந்தக் கேள்வி அன்று தான் புதிதாக எழுப்பப்பட்டது போலும், அன்று தான் அதற்கான பதில் அருளப்பட்டது போலும் இருந்தது. மக்கமா நகர் காலம் முழுவதும் இந்த அடிப்படைக் கேள்விக்கு தெளிவு தருவதில், அதைக் கொண்டு அந்த மக்களை இந்தப் பேரியக்கத்தில் பிணைத்திடுவதில் திருக்குர்ஆன் தன் முழுக் கவனத்தையும் செலுத்திற்று. புதமையும் புரட்சியும் நிறைந்த இந்த மார்க்கத்திற்கு இந்தக் கேள்விக்கான பதில்தான் அடித்தளம். இந்தக் கேள்வி அதன்பதில் இரண்டு முக்கியமான அடிப்படைகளைக் கொண்டது.

மக்காவில் அருளப்பட்ட இறைவசனங்களின் மூலம் இறைவன் உலகுக்கு தந்த ஒளி மக்காவில் அருளப்பட்ட திருமறையின் இறைமொழிகள் ஒரு கேள்விக்கு தெளிவாகவும் தீர்க்கமாகவும் விடை தந்து கொண்டே இருந்தன. 13 ஆண்டுகளாக இந்த விடை கொண்டு அந்த மக்கள் அல்லாஹ்வின் வழிநோக்கி அழைக்கப்பட்டார்கள். இந்த 13 ஆண்டுகளிலும் இந்தக் கேள்விக்கு விடைதந்த இறைவசனங்களின் அடிப்படைத் தன்மைகள் மாறவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்கு விடைதந்த பாங்கும் பாணியும் மாறிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் திருக்குர்ஆன் இந்தக் கேள்விக்குப் பதில் தந்த பாங்கில், அந்தக் கேள்வி அன்று தான் புதிதாக எழுப்பப்பட்டது போலும், அன்று தான் அதற்கான பதில் அருளப்பட்டது போலும் இருந்தது. மக்கமா நகர் காலம் முழுவதும் இந்த அடிப்படைக் கேள்விக்கு தெளிவு தருவதில், அதைக் கொண்டு அந்த மக்களை இந்தப் பேரியக்கத்தில் பிணைத்திடுவதில் திருக்குர்ஆன் தன் முழுக் கவனத்தையும் செலுத்திற்று. புதமையும் புரட்சியும் நிறைந்த இந்த மார்க்கத்திற்கு இந்தக் கேள்விக்கான பதில்தான் அடித்தளம். இந்தக் கேள்வி அதன்பதில் இரண்டு முக்கியமான அடிப்படைகளைக் கொண்டது.
Saturday, August 24, 2013
சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் சொல்லும் செய்திகள்
சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் பசர் அல் அசாத்தின் உண்மை நிலையை மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது . அத்தோடு மேற்கின் பக்குவமான முதலைக் கண்ணீரும் அதன் மீடியாக்களால் இதன் விடயத்தில் வடிக்கப் பட்ட நிலையில் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இராணுவ அரசியல் பற்றிய பார்வைகள் இதன் மூலம் மறைந்து போகின்றது .
“மெட்ராஸ் கபே” படத்தில் விடுதலைப் புலிகளை எப்படி காட்டுகிறார்கள் தெரியுமா?
Source:viruviruppu.com
தற்போது சர்ச்சைகளில் பலமாக அடிபடும் மெட்ராஸ் கபே படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா என்ற ஆவலை பலருக்கு ஏற்படுத்தியுள்ளன, அந்தப் படம் பற்றி வெளியாகும் செய்திகள். இந்தப் படம் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும. அதன் தலைவர் தலைவர் பிரபாகரனையும் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளது என்று கூறி படத்தை தடை செய்ய கோரியுள்ளன சில அமைப்புகள்.
இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 2
திருக்குர்ஆன் உருவாக்கிய ஒப்பற்ற சமுதாயம்
இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும். இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும் என் விழைவோர், ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும் முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் இந்தத் திருத்தூது இஸ்லாம் ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபிகள் பெருமான்(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம் தான். இந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு சமுதாயத்தை வரலாற்றின் பிந்தைய காலக்கட்டத்தில் ஏன் மனித வரலாற்றின் எந்தக் காலக்கட்த்திலும் நாம் சந்திக்கவில்லை.
Thursday, April 04, 2013
பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்
உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.
சிறு வயது வாழ்க்கை
16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.
Saturday, March 30, 2013
இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் ... பகுதி 1
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!
முஸ்லிம் உம்மத்தின் மறுமலர்ச்சிப்பாதை பற்றி 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூற்களில் அஷ்ஷஹீத் செய்யித் குத்ப் அவர்கள் இறுதியாக எழுதிய “இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்” என்ற நூல் முக்கியமானது. ஜமால் அப்துல் நாசரின் எகிப்து அரசாங்கம், அரசைக் கவிழ்க்க சதி செய்தார் என அவருக்கு எதிராக தயாரித்த குற்றப்பத்திரிகைக்கு இந்நூலிலிருந்தும் சான்றுகள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அவர் எகிப்து அரசினால் தூக்கிலிடப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார். ஒரு ஷஹீதின் இறுதி வார்த்தைகளான இந்நூலின் பகுதிகளை உம்மத்தின் மறுமலர்ச்சி நோக்கி இயங்கும் முஸ்லிம்களுக்காக இங்கே தருகிறோம்.
Friday, March 22, 2013
இஸ்லாம் கூறும் தண்ணீரின் தன்மைகள் .....

அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.27:60
Saturday, March 16, 2013
ஆண்களுக்கான விசேஷ உணவு :-
பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன.
Wednesday, March 13, 2013
சீர்திருத்தம் தேவை !
இன்றைய காலத்துக்கு மிகவும் தேவையான கட்டுரை
சீர்திருத்தம் செய்யுங்கள்!
இஹ்யா உலூமித்தீனிலிருந்து...
[ ஒரு காலம் வரும். அப்போதைய மக்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? சீர்திருத்தக்கூடிய மனிதனைவிட அவர்கள் செத்த கழுதையை மேலானது என்று கருதுவார்கள்.
''தவறு நடப்பதை கண்டு உங்கள் மனம் புண்படுகிறதா? அப்படியானால் அந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதே பொருள். உங்களை அந்த கூட்டத்தில் ஒருவராகக் கணக்கிட முடியாது. அதே சமயம் தவறு நடக்கும் இடத்தில் இல்லாத ஒருவன் அந்த தவறை மனத்தால் விரும்பி வரவேற்றால், அவன் அந்த கூட்டத்தில் ஒருவனாகக் கணிக்கப்படுகிறான்!'
அளவுக்கு மீறிய அட்டூழியம் நடந்த ஓர் ஊரை அழிக்குமாறு இறைவன் வானவர் ஒருவருக்கு செய்தியனுப்பினான். அந்த ஊரில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். அவரைச் சுட்டிக்காட்டி வானவர் இறைவனிடம் ''அவன் நல்ல மனிதன்; அவன் எந்த தவறும் செய்யவில்லையே!'' என்று கேட்டார். ''அவனையும் மற்றவர்களையும் சேர்த்து அழிக்கவே நான் கட்டளையிட்டேன். ஏனெனில் மக்கள் தவறு செய்வதை எண்ணிப்பார்த்து அவன் ஒருநாள் கூட வேதனைப் படவில்லை! என்று இறைவன் கூறினான் என்பதும் நபிமொழி.]
''மக்களை நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழு உங்களில் இருக்க வேண்டும்'' என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
''அவர்கள் நல்லதை வலியுறுத்துவார்கள்; தீயதை தடை செய்வார்கள். இவர்களே வெற்றியாளர்கள்'' இந்த திருவசனம் மற்ற அனைத்தையும் விடத் தெளிவான ஆதரவை நமக்குக் கொடுக்கீறது.. ''ஒரு குழு உங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும்'' எனும் வார்த்தைகள் சீர்திருத்த முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. இதே வார்த்தைகள் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் இந்த வழியில் இறங்க வேண்டியதில்லை - ஒரு சிலர் இறங்கினால் போதுமானது என்றும் தெளிவு படுத்துகின்றன.
எனவே சமுதாயத்தில் ஒருவர் அல்லது ஒரு குழு சீர்திருத்த முயற்சியில் இறங்க வேண்டியது கடமையாகும். இந்த கடமையை யாரும் செய்யவில்லை என்றால் சமுதாயத்த்ல் அத்தனை பேரும் குற்றவாளிகளாகிறார்கள்.
மற்றோர் இறை வசனத்தில் ''முஸ்லிம் ஆண்களும், முஸ்லிம் பெண்களும் சிலருக்குச் சிலர் நண்பர்கள்; அவர்கள் நன்மையை வலியுறுத்துவார்கள்; தீமையைத் தடை செய்கிறார்கள்; இறை வணக்கத்தை நிலைப்படுத்துவார்கள். சீர்திருத்த மனப்பான்மை உள்ளவர்களே உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியும் என்ற உண்மை இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. இதனை வெறுக்கிறவர்கள் சிறந்த முஸ்லிம்களாக இருக்க முடியாது. என்பது உட்கருத்து.
திருக்குர்ஆன் மீண்டும் பேசுகிறது; ''தமக்குக் கூறப்பட்டதை எல்லாம் அவர்கள் மறந்திருந்தபோது, தீமையைத் தடுத்து நிறுத்தியவர்களை நாம் காப்பாற்றினோம். அட்டூழியம் செய்தவர்களுக்கு நாம் கொடிய தண்டனை கொடுத்தோம். ஏனெனில், அவர்கள் தவறு செய்து கொண்டிருந்தார்கள்!''.
அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றவர்கள் சிலர், தமக்குக் கூறப்பட்ட எச்சரிக்கைகளை எல்லாம் மறந்துதான் வாழ்ந்தார்கள். இருந்தும் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்துவிட்டது. அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டான். ஏன் தெரியுமா? தீமைகளை விட்டு விலகி நின்றார்கள்; தீமையைச் செய்யக்கூடாது என மக்களுக்கு போதித்தார்கள்.
மற்றொரு இறைவசனம் இப்படி கருத்துத் தெரிவிக்கிறது; ''உங்கள் முன்னோரில் உறுதியுள்ள சிலர் நாட்டில் நடக்கும் தீய விளைவுகளைத் தடுத்துக் கொண்டிராவிட்டால் அவர்களில் பெரும்பாலோர் அழிந்து போயிருப்பார்கள்!'' அழிவுக்குக் காரணம் சீர்திருத்த முயற்சியின்மை என்னும் உண்மை இங்கு வெளியிடப்படுகிறது.
''முஸ்லிம்களில் இரு சாரார் போரிட்டுக் கொண்டால் அவர்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்'' என்று திருக்குர்ஆன் மற்றோர் இடத்தில் கூறுகிறது.
''முரண் வழியில் செல்லும் சாராரை எதிர்த்துப் போராடுங்கள்!'' என்று வேறொரிடத்தில் அது தீர்ப்பு கொடுக்கிறது.
அடுத்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் நடந்த விறுவிறுப்பான உரையாடலைப் பார்ப்போம்.
''ஒரு காலம் வரும். அப்போது பெண்கள் துரோகம் செய்வார்கள். ஆண்கள் நேர்மையை மறந்து குற்றம் புரிவார்கள். மனப்பயிற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.!'' என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
''அப்படியா நடந்து விடப்போகிறது?'' நண்பர்கள் திகைத்தார்கள்.
''நடக்காமல் என்ன! இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன், இதைவிட மோசமான சூழ்நிலை ஏற்படும்!''
''இதைவிட மோசமான சூழ்நிலையா!'' நண்பர்களின் திகைப்பு இன்னும் அதிகமானது.
''அப்போது மக்கள் நன்மையை எடுத்துக் கூறிச் சீர்திருத்தம் செய்ய மாட்டார்கள்; தீமையைத் தடுக்க மாட்டார்கள்!''
''அப்படியா!'' என்று மட்டுமே நபித்தோழர்களால் திகைப்பும் கவலையுமாக கேட்க முடிந்தது.
''அப்படியேதான்!'' என்றார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
தொடர்ந்து; ''அப்போது நீங்கள் உலகில் இருந்தால், நல்லதை கெட்டது என்று கருதுவீர்கள்; கெட்டதை நல்லது என்று நம்புவீர்கள்!' என்றார்கள் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
நபித்தோழர்களில் ஒருவர் கேட்டார், ''யா ரஸூலல்லாஹ்! அப்படியொரு காலம் வருமா என்ன?''
''நிச்சயமாக வரும். இதைவிட மோசமான விளைவு ஏற்படும். அப்போது நீங்கள் நல்லதை கெட்டது என்று கருதுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டீர்கள்; உங்கள் கருத்தை எடுத்துரைத்து மக்களைத் தூண்டுவீர்கள். இதே போன்று கெட்டதை நல்லது என்று எண்ணுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டீர்கள். அதை மக்களுக்கு கூறி அவர்களையும் கெடுப்பீர்கள். நன்மை நடந்தால் அதற்கு தடை விதிப்பீர்கள். தீமை நடந்தால் அதற்கு ஊக்கம் கொடுப்பீர்கள்!''
நண்பர்கள் எதுவும் பேசமுடியாமல் மவுனமானார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தொடர்ந்தார்கள்; ''இப்படியொரு காலம் ஏற்படத்தான் போகிறது! இதில் சிறிதும் சந்தேகமே இல்லை. சூழ்ந்து நிற்கும் துன்பங்களைப் பார்த்து பொறுமை சாலிகள் கதிகலங்கி நிற்பார்கள்!' -இந்த செய்தியை நமக்குக் கூறுபவர் அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
தம் சமுதாயத்தைப் பார்த்துப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீண்டும் பேசுகிறார்கள்: ''அநியாயமாக ஒரு மனிதனை மற்றொரு மனிதன் வதைக்கிறானா? அந்த இடத்தில் (வேடிக்கைப் பார்த்துக்கொண்டு) நிற்காதீர்கள். இந்த வேலையைத் தடை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இறைவனின் சினத்துக்கு இலக்காகிறார்கள். தடை செய்யும் துணிவு உங்களுக்கு இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள்!'
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த மற்றோர் செய்தி: ''உங்கள் நாவன்மையால் தீர்வு காண வேண்டிய பிரச்சனை எதிர்பட்டிருக்கும் போது வாயை மூடிக்கொண்டு இருக்காதீர்கள். உங்களுக்கு உரிமையுண்டு, துணிந்து தடை செய்யுங்கள். இதனால் உங்களுக்கு எவ்விதப் பாதகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை!'' -இந்த செய்தியை அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாவார்.
''தவறு நடப்பதை கண்டு உங்கள் மனம் புண்படுகிறதா? அப்படியானால் அந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதே பொருள். உங்களை அந்த கூட்டத்தில் ஒருவராகக் கணக்கிட முடியாது. அதே சமயம் தவறு நடக்கும் இடத்தில் இல்லாத ஒருவன் அந்த தவறை மனத்தால் விரும்பி வரவேற்றால், அவன் அந்த கூட்டத்தில் ஒருவனாகக் கணிக்கப்படுகிறான்!'
உலகில் தோன்றிய ஒவ்வொரு திருத்தூதர்களும் அவர்களது தோழர்களும் எப்படி செயலாற்றுகிறார்கள் என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்குகிறார்கள்;
''உலகில் தோன்றிய ஒவ்வொரு திருத்தூதருக்கும் குறிப்பிட்ட சில நண்பர்கள் இருப்பார்கள். திருத்தூதர் மக்களுக்கு மத்தியில் சிறிது காலம் தங்கியிருப்பார்; இறை வேதத்தை அடிப்படையாக வைத்து வாழ்க்கை நடத்துவார். வாழ்க்கையைச் சொல்லிக் கொடுப்பார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் இறந்து விடுவார்.
அதற்கப்புறம் அவர் நடந்து காட்டிய வழியில் அவரது நன்பர்கள் நடப்பார்கள். மக்களுக்கு வாழும் வழியைக் கற்றுக் கொடுப்பார்கள். தீயவற்றைத் தடுப்பார்கள். நல்லவற்றை எடுத்துரைத்துத் தூண்டுவார்கள். அவர்களும் சிறிது காலத்தில் இறந்து போய்விடுவார்கள்.
அதற்கப்புறம் மேடை ஏறிப் பிரச்சாரம் செய்யும் சிலர் சமுதாயத்தில் தோன்றுவார்கள். தமக்கு முன்னால் அறிவுரை கூறிய நபித் தோழர்களைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மேடையில் ஏறியதும் அவர்கள் தமக்குத்தெரிந்ததை மக்களுக்குக் கூறுவார்கள். தீயவற்றை ஒதுக்கி வைத்துத் தூய வழிட்யில் நடக்குமாறு போதனை செய்வார்கள். ஆனால், அவர்கள் மேடையை விட்டு இறங்கியதும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் செயலாற்றுவார்கள். நல்லதை ஒதுக்கித் தள்ளுவார்கள். தீயதை எடுத்து நடப்பார்கள்.
இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது உங்கள் சக்தி முழுவதையும், ஒன்று திரட்டிக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களை எதிர்த்து நீங்கள் போராட வேண்டும். இது உங்கள் கடமை. இது உங்களுக்கு சாத்தியமில்லாவிட்டால் உங்கள் நாவன்மையால் அவர்களை எதிர்த்து முறியடியுங்கள். இதுவும் அசாத்தியமாகத் தெரிந்தால் மனத்தலவிலாவது அவர்களை வெறுத்து ஒதுக்குங்கள்! இந்த அட்டூழியம் பரவினால் எங்கும் இஸ்லாம் இருக்காது' -இந்த செய்தியை அறிவிப்பவர் இப்னு மஸூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
''அளவுக்கு மீறிய அட்டூழியம் நடந்த ஓர் ஊரை அழிக்குமாறு இறைவன் வானவர் ஒருவருக்கு செய்தியனுப்பினான். அந்த ஊரில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். அவரைச் சுட்டிக்காட்டி வானவர் இறைவனிடம் ''அவன் நல்ல மனிதன்; அவன் எந்த தவறும் செய்யவில்லையே!'' என்று கேட்டார். ''அவனையும் மற்றவர்களையும் சேர்த்து அழிக்கவே நான் கட்டளையிட்டேன். ஏனெனில் மக்கள் தவறு செய்வதை எண்ணிப்பார்த்து அவன் ஒருநாள் கூட வேதனைப் படவில்லை!'' என்று இறைவன் கூறினான் என்பதும் நபிமொழி.
ஒரு காலம் வரும். அப்போதைய மக்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? சீர்திருத்தக்கூடிய மனிதனைவிட அவர்கள் செத்த கழுதையை மேலானது என்று கருதுவார்கள்.
ஒரு நபிக்கு இறைவன் செய்தியனுப்பினான்; ''உம்முடைய சமுதாயத்திலிருந்து 1,00,000 பேரை நான் அழிக்கப் போகிறேன். அவர்களில் கெட்டவர்கள் 60,000 பேர்; நல்லவர்கள் 40,000 பேர்!'' என்று.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்; 'இறைவனே! கெட்டவர்களைத் தான் அழிக்கிறாய். நல்லவர்களை ஏன் அழிக்க வேண்டும்?''
இறைவன் பதிலளித்தான்; ''தீமை நடக்கும்போது அவர்கள் சினமுற்று எழவில்லை!''
( - இஹ்யா உலூமித்தீனிலிருந்து... மொழியாக்கம்: மவ்லவி, எஸ். அப்துல் வஹ்ஹாப், பாகவி )
Monday, March 04, 2013
கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 89 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை
முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா (இஸ்லாமிய அரசு) ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம்3) ம் தேதியில் முஸ்தபா கமால் அதா துர்க்கினால் துருக்கிய தலைநகரான இஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு ஹிஜ்ரி 1431 ரஜப் 28 உடன் 87 வருடங்கள் கடந்துவிட்டன. 1924 மார்ச் 3 ம் தேதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாஃபத் உலகை விட்டும் அழிக்கபட்டது. இறுதியாக துருக்கியில் இஸ்லாமியசாம் ராஜியதின் கலீஃபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீஃபா அப்துல் மஜீத். இவர் கிலாஃபா அழிக்கபட்டு ஒரு மணி அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் .இந்த அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற துரோகி.முஸ்லிம் உம்மா அனாதையானது; மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது; முஸ்லிம் உம்மா துடி துடித்தது .அரசியல் அனாதையானது .ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்கவில்லை. மறுகணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறப்பட்டது. பயணம் மிகவும் நீண்டது. இன்றும் தொடர்கின்றது .
கிலாஃபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும்,முஸ்லிம் உலகிலே அவர்களின் கைப்பாவையான ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரிய அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டு மொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உலகம் பொருளாதார பலமற்றதாக, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிறுசிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மா இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும்,கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல்,பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசங்களாக மாறிவிட்டது.
முஸ்லிம்களும், அவர்களின் நிலங்களும் குஃப்பார்களின் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு இலக்காகியது. யூதர்கள்,பிரான்ஸியர்கள், பிரித்தானியர்கள், இந்துக்கள், இத்தாலியர்கள்,அமெரிக்கர்கள், செர்பியர்கள், ரஸ்யர்கள், சீனர்கள் என அனைவர்களும் முஸ்லிம்களின் அவலத்திற்கும், கண்ணீருக்கும் காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர். ஸ்திரமற்ற பொருளாதார நிலையினையும், உணவுக்கும், வாழ்விடத்திற்கும் அகதி முகாம்களில் தஞ்சம் புகும் அவலத்தையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும்,படுகாயமடைந்தும் இருக்கின்றனர். இந்த அவலத்தினை விளங்கிக்கொள்ள உங்கள் மனக்கண் முன் பலஸ்தீனம்,ஈராக்,ஆப்கானிஸ்தான், செச்னியா, காஷ்மீர், கொசோவா,பொஸ்னியா,அரிட்ரியா போன்ற பூமிகளின் கொடூரமான நிலவரத்தி னைநிலைநிறுத்திப் பாருங்கள். இந்த அகோர நிலை அமெரிக்கா,பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகள் பின்பற்றும் மிகக்கொடூரமான உலக ஒழுங்கினால் மென்மேலும் மோசமடைந்துள்ளது. உம்மத்தின் வளங்கள் அனைத்தும், குறிப்பாக எண்ணெய் வளம் முழுவதும் இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் போர் இயந்திரத்தினை பலப்படுத்த பயன்பட்டு வருகிறது. முழு முஸ்லிம் உம்மத்தினையும் தமது இரும்புச்சப்பாத்திற்குள் அடக்குவதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மனித இனத்திற்கு அருளாய் இருந்த பிரமாண்டமான சாம்ராஜ்யம் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தேசியவாதம் மிகவும் நுட்பமாக புகுத்தபட்டது. தேசியவாதத்தை பயன்படுத்தி மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உம்மத்தின் முதுகில் ஏறி ருத்ரதாண்டவம் ஆடுகிறது. அழிக்கபட்ட கிலாஃபா உலகில் மீண்டும் தலைமை கொண்டு எழும் என்பதை முஸ்லிம் உம்மா கட்டியம் கூறுகிறது.
‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ ‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” ஆல இம்றான்: 193
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய அரசு எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3) முஸ்தபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாஃபா வீழ்த்தப்பட்ட இந்த காலகட்டத்தில் கிலாஃபா அரசு பலகீனமடைந்திருந்ததுடன் சிந்தனைத்தரம் வலுவிழந்திருந்தது. முஸ்லிம் தேசத்தை ஆக்கிரமிப்பதற்காக முஸ்லிம்களின் படைகளுடன் போராடிப் போராடித் தோல்வி கண்டு களைத்துப் போயிருந்த காபிஃர்கள் இனிமேலும் இவர்களுடன் போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கத்தொடங்கியிருந்தபோது முஸ்லிம்களின் அடிப்படையான இஸ்லாமிய சிந்தனையினை பலகீனப்படுத்துவதற்கு இக்காலகட்டத்தில் கிலாஃபத்தில் காணப்பட்ட பலகீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
அவர்கள் தமது சிந்தனைகளையும் தமது கலாச்சாரங்ளையும் முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரப்டுத்தி இஸ்லாமிய அரசின் அடிப்படை பலமான இஸ்லாமிய சிந்தனையினை ஆட்டங்காண வைப்பதன் மூலம் அதனது அத்திவாரத்தினையே தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.
இதனை சாத்தியப்படுத்துவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பவதன் ஊடாகவும், தமது பாடசாலைகள்,வைத்தியசாலைகள் அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதன் ஊடாகவும் தமது கருத்துக்களை பிரச்சாரப்படுத்தியதுடன் சில இரகசிய ஸ்தாபனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள்ளும் ஊடுருவினர். இவற்றுள் அவர்கள் தந்திரமாக கல்வியியல் விடயங்களிலேயே தமது கவனத்தை அதிகமாகசெலுத்தினர். இத்தகைய முயற்சிகளினூடாக அவர்கள் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் புத்திஜீவிகள் போன்றோரை கவர்ந்தனர்.
வளர்ந்து வந்த இந்த சிந்தனைப்போக்கு மேற்குலகின் கலாச்சாரத்தையும், நீதிபரிபாலனத்தையும் தமக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கு முஸ்லிம்களை தூண்டியது. இவர்கள் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை கிளப்பியதுடன் அது தற்கால நவீன உலகிற்கு எந்தளவில் பொருத்தமுடையது என்பன போன்ற வினாக்களைத் தொடுத்தனர். இவர்கள் தாம் இஸ்லாத்தை பின்பற்றவதாக காட்டிக்கொண்டு மேற்குலகின் கவர்ச்சியை நோக்கியே இழுத்துச் செல்லப்பட்டனர். இதன் விளைவாக கிலாஃபத்தின் கட்டமைப்பும் அதன் அஸ்திவாரமும் ஆட்டம் காண ஆரம்பித்தது. இதனால் உலகில் இஸ்லாத்தின் தஃவா தடைபட்டது. காபிர்களுக்கு தமது சிந்தனைகளை இஸ்லாமிய தேசத்தினுள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது.
கிலாஃபத்தின் இந்த வீழ்ச்சியில் குஃப்ர் அரசுகள் குறிப்பாக பிரித்தானியா,பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராஜதந்திர மற்றும் ஏனைய உயர்மட்டங்கள் அதிகளவிலான பங்களிப்பினை செய்தன. கிலாஃபத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பலகீனமான நிலையை மிகவும் கச்சிதமாக அவதானித்த குஃப்ர் அரசுகள் கிலாஃபத்தின் எல்லைகளை பகுதி பகுதியாக ஆக்கிரமித்தனர்.
அனைத்து மேற்குலக நாடுகளும் பேராசையில் மிதக்க ஆரம்பதித்தனர்.பிரித்தானியாவுடனும் பிரான்சுடனும் சேர்ந்து தமது பங்கினையும் பெற்றுக்கொள்வதில் ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகள் முனைப்புடன் செயற்பட்டன. தமக்குள் காணப்பட்ட முரண்பாடுகளை கடந்து இஸ்லாத்தினையும், கிலாஃபத் ஆட்சினையும் அழிப்பதிலும் அவர்கள்ஒன்று திரண்டார்கள். அவர்கள் ஆட்சியிலும், அரசியல், சமூக விவகாரங்களிலும் இருந்து இஸ்லாத்தினை நீக்கி அதற்கு பகரமாக மேற்குலகின் நீதிபரிபாலனம், முதலாளித்துவம், ஜனநாயகம் போன்ற சிந்தனைகளை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை செலுத்த யோசித்தனர்.
இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் பெரியதொரு விடயமாக உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் வீழ்ச்சியும் நடந்தேறியது. இதனால் இந்த அழிவுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. முஸ்தபா கமால் அதாதுர்க் அதிகாரப் பூர்வமாக கிலாஃபத்தினை வீழ்த்தியபோது உம்மத்திலிருந்து வெளிவந்த எதிர்ப்பலைகளின் பலகீனம் இதனை மிகத்தெளிவாக காட்டுகிறது. அவன் இங்கிலாந்தின் அடிவருடி என்பதை சமூகம் அறிந்திருந்தபோதிலும் அவனது இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தி,மீண்டும் இஸ்லாத்தின் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. இதை விடக்கேவலமான விடயம் என்னவெனில் பிரித்தானியாவின் கிலாஃபத்திற்கெதிரான இந்த சதி முயற்சிக்கு அன்றைய ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஷரிஃப் ஹசைன்-( நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச்சேர்ந்தவன் என்று பொய்யாகக் கூறப்படுபவன்) என்பவன் உறுதுணையாக இருந்தான்
இவ்வாறு கிலாஃபத் வீழ்த்தப்பட்டு இஸ்லாம், முஸ்லிம் உம்மத்தின் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் அதனுள் திணிக்கப்பட்டு, இஸ்லாத்தின் பூமி பல பலகீனமான தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களையே இந்த தேசங்களின் தலைவர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தினை அழிக்கின்ற முயற்சியில் வெற்றிகண்டது. அவர்கள் உண்மையில் காஃபிர்களையே பிரதிநிதித்துவப்படுத்தினர். முஸ்லிம்களையல்ல. அவர்கள் கிலாஃபத்தினை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று செயற்பட்ட முஸ்லிம்களை கடுமையாக தண்டித்தனர்.
இவ்வாறாக காஃபிர்கள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தியதுடன் முஸ்லிம்கள் மேற்கத்திய சிந்தனைகளின் ஆளுகைக்குள் உட்பட்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களும் அவர்களின் நிலங்களும் மேற்குலகின் சிந்தனைகளையும் பொருட்களையும் உள்வாங்கிக் கொள்ளும் சிறந்த சந்தைகளாக மாற்றமடைந்தன. இந்த அவல நிலையை தொடர்ந்து பேணுவதற்காகவும் முஸ்லிம்கள் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் தடைக்கல்லாகவும் இஸ்ரேலை அரபுலகின் மையத்தில் இவர்கள் ஏற்படுத்தினார்கள்.
முஸ்லிம் உம்மத் பிறரின் ஆளுகைக்குட்பட்டிருப்பதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. எனவே இஸ்லாம் அனைத்து மேலாதிக்கங்களுக்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொள்ளவதை வலியுறுத்தவதால் இதனை நாம் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
விசுவாசிகளுக்கு மேலான எந்தவொரு (அதிகாரத்தையும்) வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான் . (4:141)
விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமதுபாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். (3:28)
விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம். (60:1)
விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமதுபாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். (3:28)
விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம். (60:1)
விசுவாசிகளே! உங்களையன்றி இறைநிராகரிப்போரை உங்களுடைய அந்தரங்க செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்கிக்கொள்ளவேண்டாம். (ஏனெனில்) அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. மேலும்,நீங்கள் துன்புறவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்ச்சொற்களிலிருந்தே (அவர்களுடைய கடுமையான வெறுப்பு திடமாக வெளிப்பட்டு விட்டது.) எனினும் அவர்களின் மனதில் மறைந்திருப்பது இதைவிட மிகவும் மோசமானதாகும். (3:118)
Saturday, February 23, 2013
இஸ்லாம் கொச்சைப் படுத்தப் படுகின்றது;முஸ்லிமே ! நீ எங்கே இருக்கிறாய் !?
முஹம்மத், அல்லாஹ்வின் தூதராவார் ;அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள் ;ருகூ செய்பவர்களாகவும் , சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் ; அல்லாஹ்விடம் இருந்து பேரருளையும் ,அவனுடைய பொருத்தத்தையும் மட்டுமே தேடுவார்கள் ; அவர்களுடைய அடையாளம் ,சிரம் பணிவதின் அடையாளத்தினால் அவர்களது முகங்களில் இருக்கும் ;இதுவே தவ்ராத்தில் உள்ள அவர்களது அடையாளமாகும் ; இன்னும் இன்ஜீளில் அவர்களுக்குள்ள உதாரணமாவது , ஒரு பயிரைப் போன்றதாகும் ; அது தனது முளையை வெளிப்படுத்தி ,பின்னர் அதை பலப்படுத்துகின்றது ; பின்னர் , அது (தடித்து ) கனமாகிறது . பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது ; விவசாயிகளை(யே) ஆச்சரியமடையச் செய்கின்றது .இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதட்காக (இவ்வாறு உதாரணம் கூறுகிறான் );அவர்களில் விசுவாசங்கொண்டு , நட்கருமங்களையும் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் ,மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான் .
(அல் குர் ஆன் மொழி பெயர்ப்பு - சூரா அல் பத்ஹ், வசனம் 29)
நிகழ்கால சூழ்நிலைகளில் முஸ்லீம்களாகிய எமது வாழ்வு ,நடத்தை என்பவற்றின் மீது கேள்வி எழுப்பும் ஒரு வசனமாகவும் , ஒரு முஸ்லிமின் நடத்தை இவ்வாறுதான் அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இந்த வசனம் அமைந்துள்ளது . ரசூல் (ஸல் ) அவர்களின் நடத்தை வழி ஆதாரத்தின் படி நிராகரிப்பாளர்களின் மீது கடுமை காட்டுதல் என்பதன் அர்த்தமாவது இஸ்லாம் அல்லாத சிந்தனா வாதத்தின் கடும் பிடியாளர்களோடு ,ரசூல் (ஸல்) பலத்தோடு இருந்த சந்தர்ப்பத்திலோ அல்லது எதிர்க்க பலமற்று இருந்த சந்தர்ப்பத்திலோ எவ்வாறு நடந்து கொண்டார்கள் ? என்ற விளக்கத்தை சுற்றியே எம்மை பார்க்கத் தூண்டவேண்டும். அதன்படி மனித நேயம் என்ற எல்லைக்குள் இஸ்லாமிய சிந்தனா வாதத்தை பரிகசிக்காத ,எதிர்க்காத மனிதர்கள் மீது ஒரு கண்ணியமான உறவை பேணுதல் என்பதும் இஸ்லாத்தின் கட்டளை என்பதை சுன்னா தெளிவாகவே எமக்கு காட்டி நிற்கும் .
ஆனால் இன்றைய சூழ்நிலைகளில் முஸ்லீம்களின் நடத்தை என்பது இந்த வஹி வழிகாட்டலுக்கு மாற்றமாக , தலைகீழாகவே அமைந்துள்ளது !! (அதே நேரம் அல்லாஹ்வின் உதவியையும் ,பொருத்தத்தையும் வேறு எதிர்பார்க்கிறார்கள் ! )அதாவது அந்த நடத்தை நிராகரிக்கும் சிந்தனா வாதத்தோடு சமரசம் செய்தல் , இணங்கிப் போதல் , அந்த 'குப்ரிய ' சிந்தனா வாதத்தின் எதிர்பார்ப்பிற்கு அமைந்த வாழ்வியல் வாதங்களுக்கு சார்பாக இஸ்லாத்தை திரித்துக் கூறுதல் ,பேசவேண்டிய தருணங்களில் மௌனம் காக்கத் தூண்டுதல் போன்ற நடத்தைகளின் ஊடாக 'குப்ரை' திருப்திப் படுத்துவதோடு , விரல் நீட்டி இந்த இயக்கத்தின் நடத்தை போல் எமது நடத்தை இல்லை , அந்த அமைப்புக்கு வெளிநாட்டு பணம் வருகிறது , இவர்கள் தீவிரவாதிகள் என காட்டிக் கொடுத்து குப்பார்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் தான் இனி வாழ்க்கை உள்ளது; என செயல்படவும் தொடங்கி விட்டார்கள் .
கீழே வரும் சம்பவங்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் போது , நிராகரிப்பவர்களின் அதிகாரத்தின் கீழ் விரும்பியோ விரும்பாமலோ வாழும் நிலை ஏற்பட்டால் ஒரு முஸ்லிமின் நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சிறந்த சான்றாக அமைகின்றது .
ரசூல் (ஸல் ) அவர்கள் ஒருமுறை குறைசிக் காபிர்களின் கடுமையான நக்கலுக்கும் ,நையாண்டிக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது . அப்போது அந்த காபிர்களின் முன் நின்று கோபப்பட்டவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) பின்வருமாறு கூறினார் ." குறைசிகளே ! நான் சொல்வதை சற்று கவனியுங்கள் . எனது உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக ! உங்களிடத்தில் நான் உங்களை அழிவிற்கு இட்டுவிடும் ஒரு முடிவை கொண்டே வந்துள்ளேன் . (அதாவது அதி விரைவாக உங்கள் கதை முடிந்து விடப் போகிறது )"என்ற இவரின் இந்த ஆவேசமான வார்த்தைகள் குறைசிகளை திடுக்கிட வைத்தது.
இதே போல இன்னொரு சம்பவம் இது உமர் (ரலி ) இஸ்லாத்தை தழுவிய நேரம் நடந்தது . அவர்கள் தான் இஸ்லாத்தை தழுவிய செய்தியை யாரிடம் சொன்னால் அது பகிரங்கமாகும் ? என விசாரித்ததில் 'ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜுமகி 'என அறிந்து அவனிடம் சொன்னார்கள் .அவன் மக்கள் மத்தியில் சென்று "ஓ குறைசிகளே !கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான் " என்று கத்தினான் . அவனோடு கூடச் சென்ற உமர் (ரலி ) " இல்லை இவன் பொய் கூறுகிறான் .நான் மதம் மாறவில்லை .மாறாக முஸ்லிமாகி விட்டேன் ." என்று கூறியவுடன் . காபிர்கள் ஓன்று கூடி அடிக்க ஆரம்பித்தார்கள் உமர் (ரலி )யும் அவர்களோடு சண்டையிட்டார்கள் .இறுதியில் அவர்கள் களைத்து சோர்ந்து விடும் நிலைக்கு வந்த போது கூறினார்கள் . "உங்களுக்கு முடிந்ததை செய்யுங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஓன்று மக்கா உங்களுக்கு அல்லது எங்களுக்கு என ஆகிவிடும் " என்று கூறினார்கள் .
இந்த சம்பவத்தின் பின்னர் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் ) வந்த உமர் (ரலி ) அல்லாஹ்வின் தூதரே ! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில் தானே இருக்கிறோம் ?" எனக் கேட்டார்கள் .அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் "ஆம் !எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக ! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில் தான் இருக்கிறீர்கள் " என்று கூறினார்கள் .அப்போது உமர் (ரலி )! "இனி நாம் ஏன் மறைவாக செயற்பட வேண்டும் ? இனி சத்தியத்தை வெளிப்படையாக கூறியே ஆகவேண்டும் " எனக் கூறியவராக இருந்த சொற்ப முஸ்லீம்களை இரண்டு அணியாக பிரித்து ஒரு அணிக்கு ஹம்சா (ரலி ) அவர்களை தலைமைதாங்க வைத்து மறு அணிக்கு தான் தலைமை தாங்கியவராக புழுதி பறக்க அணிநடை சென்று கவுபாவுக்குள் நுழைந்தார்கள் .(இதன் பின்னரே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) உண்மைக்கும் பொய்க்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் எனப் பொருள் படும் ' அல் பாரூக் ' என்ற பெயரை உமர் (ரலி )க்கு சூட்டினார்கள் .) காபிர்கள் கதிகலங்கிப் போனார்கள் .
இந்த சம்பவங்கள் எல்லாம் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருந்த நிலையில் தான் நிகழ்ந்தவை . இன்று காவி அணிந்த காழ்ப்புணர்ச்சிகள் குர் ஆணை மொழி பெயர்த்து எம்மீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேள்வி எழுப்புகின்றன !? 'அபூலஹபை விமர்சித்த சூராவைக் காட்டி இப்படி பேசும் ஒருவனுக்கு இறைவனாக இருக்க தகுதி இல்லை என ஒரு தரக்குறைவு தம்பட்டம் அடிக்கிறது !!.அஹ்லாக் ,அஹ்லாக் என ஆதாரம் காட்டி இஸ்லாத்தை ஒரு மதமாக முன்வைத்து அதன் சித்தாந்தப் பெறுமானம் பேசப்படாத குறையே இந்த குறைமதிகள் 'வஹியை இழுத்து கேலித்தனம் செய்ய காரணமாக ஆகிவிட்டது!!
இது இஸ்லாத்தை சாகடித்து ஒரு சிறுபான்மை வாழ்வு எமக்கு அவசியமா ? என சிந்திக்க வேண்டிய தருணம் .ஓ முஸ்லீம் உம்மத்தே ! எம்மிடம் மட்டுமே ஒரு தெட்டத் தெளிவான வாழ்வியல் வழிமுறை உண்டு என்பதே எமது அசைக்க முடியாத அகீதா . யாரும் வெறுக்கும் நிலையிலும் மறுக்கும் நிலையிலும் கிண்டலடிக்கும் நிலையிலும் இந்த சத்தியமே வெற்றியடையும் என்பதும் எமது அகீதா . அல்லாஹ்வுடைய அருள் என்பது அவன் எங்களுக்கு தந்திருக்கும் வாழ்க்கை முறைதான் . 'வாழ்ந்தால் இஸ்லாம் எனும் கண்ணியத்தோடு வாழ்வு அல்லது இஸ்லாத்தோடு மரணித்தல் 'என்பது எமது முடிவாக மாறும் பட்சத்தில் இஸ்லாம் சிறுபான்மை பெரும்பான்மை போன்ற எந்த நிலையிலும் கண்ணியத்தோடு வாழும் என்பது வரலாறு மட்டுமல்ல நாம் எதிர் கொள்ளும் நிதர்சன நியாயமும் ஆகும் ..
இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம்
இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம்
إن الحكم إلا للهஅல்லாஹ் தான் சட்டத்தை இயற்றுகின்றவன். அந்த அல்லாஹ்வினுடைய சட்டங்களே எங்களை ஆள வேண்டும் என்ற அகீதாவைச் சொல்லுங்கள். இதனை யாரும் அழுத்திச் சொன்னதாகத் தெரியவில்லை. இது அகீதாவிலே ஒரு விசயம். தவ்ஹீதிலே ஒரு முக்கியமான அங்கம். இதனை யாரும் மறைக்க முடியாது. மறுக்க முடியாது. இதைப் பற்றிப் பேசாமல் தவ்ஹீதைப் பற்றிப் பேச முடியாது சகோதரர்களே!! எப்படி அல்லாஹ் வணங்கப்படக் கூடியவனாக இருக்கின்றானோ! எப்படி அவன் உதவி செய்யக் கூடியவனாக இருக்கின்றானோ! அதே மாதிரி அல்லாஹ்! எங்களை வழிநடத்தக் கூடியவன். எங்களுக்கு சட்டங்களை வகுத்துத் தரக் கூடியவன். அவனது சட்டம் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எந்தக் காலத்திற்கும் ஒவ்வாதது அல்ல என்ற அந்தக் கருத்தை ஓங்கி நம்முடைய அழைப்பு பணியிலே முழங்குவோம்.ஏன் அதனை நாம் அழுத்திப் பேச வேண்டும் என்றால், அது தவ்ஹீதிலே ஒரு பகுதி. யூசுப் (அலை) அவர்களது வரலாற்றிலே நாம் இதனைப் பார்க்கின்றோம், சூரா யூசுப் - லே இறைவன் கூறுகின்றான் :إن الحكم إلا للهசட்டங்களை இயற்றுகின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது. அந்த சட்டம் வேறு மக்களுடைய கைகளிலே இருப்பதால் இந்த உலகத்திலே என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஹலால் ஹராமாக்கப்பட்டுள்ளது. ஹராம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளக் கூடிய மக்களாக நாம் இருக்கின்றோமே!! நிச்சயமாக இந்தக் கருத்துக்களை நாம் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்துவது இரண்டாவது விசயம். முதலில் கருத்து மாற்றம் அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். சிந்தனை மாற்றம் வர வேண்டும்.கருத்துப் புரட்சியை முடுக்கி விட வேண்டும். இந்தக் கருத்து எப்படிப் பேசப்பட வேண்டும், எப்படித் தாக்கம் விளைவிக்க வேண்டும் என்றால், தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு போகின்றார்கள் அல்லவா?! ஸலாம் சொன்னால் பதில் சொல்வதற்குக் கூட அவர்களுக்கு முடியாமல், அந்தக் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்கின்றார்கள் அல்லவா? அந்தளவுக்கு அந்தக் கிரிக்கெட் அவர்களது மூளையைத் தாக்கி இருக்கின்றது. அந்த மூளையை அந்த அளவு சலவை செய்திருக்கின்றதல்லவா? அந்த அளவுக்கு இந்த அடிப்படையான விசயங்கள் இந்த உலக மக்களிடையே பேசப்பட வைக்க வேண்டும். ஏன்? நம்மால் முடியவில்லை. அது தான் நம்மிடையே நிலவும் சில சூழ்நிலைகளினால் தாக்கமுற்று விடுகின்றோம். நம்முடைய அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம்.சமூகத்திலே மணமாகாத குமரிப் பெண்களுடைய விசயத்தைப் பற்றிப் பேசப்படும் பொழுது, எங்களது அடிப்படையான அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். வட்டியைப் பற்றிப் பேசும் பொழுது, அதற்கு அழுத்தம் கொடுத்து விட்டு, அடிப்படையான அகீதாவை மறந்து விடுகின்றோம். சமூகப் பிரச்னைகள் என்று வரும்பொழுது அதனைத் தீர்க்க ஓடுகின்றோம். அதனடியாகப் பின்பற்ற வேண்டிய அகீதாவை மறந்து விடுகின்றோம். அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். சகோதரர்களே! இது அழைப்புப் பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு அழகல்ல! உண்மையிலேயே அழைப்பாளர்கள் எந்தநிலையிலும் தங்களுடைய அடிப்படை விசயங்களிலிருந்து மாறிவிடக் கூடாது.அவர்கள் சமூக மாற்றத்தைக் கண்ணால் காணலாம். அல்லது காணாமலும் போகலாம்.ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய திருமறைக்கு விளக்கவுரையாக எழுதிய திருக்குர்ஆன் நிழலிலே என்னும் தப்ஸீரின் முன்னுரையிலே கூறுகின்றார்கள் - ஒரு அழைப்பாளன் தன்னுடைய ஆயுளால் இந்த அழைப்புப் பணியை வரையறுக்க முடியாது. எனது ஆயுளுக்குள் இஸ்லாமியக் கிலாபத்தைக் கண்டே ஆக வேண்டும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசை வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த ஆசை அனைவருக்கும் இருக்கத் தான் வேண்டும். அதனை நான் என்னுடைய வாழ்நாளிலே கண்டு தான் ஆக வேண்டும். இல்லை என்றால் அவற்றை நான் குறுக்கு வழியிலே கண்டு கொள்வேன் என்று நினைப்பதும், அதன் அடிப்படையில் செயல்படுவதும் கூடாது. எனவே இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த அடித்தளத்தைப் போடுவோம்.அந்த சுமையா, யாஸிர் தம்பதிகள் அவ்வாறு நினைத்தார்களா? இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? யாஸிர் (ரலி) அவர்களுக்கு அந்த இஸ்லாமிய ஆட்சியைக் காண முடிந்ததா? சகோதரர்களே! பத்ரிலும், உஹதிலும், அகழ் யுத்தத்திலும், ஷஹீதாகிப் போனார்களே! எத்தனையோ உத்தம ஸஹாபாக்கள்!! அவர்களெல்லாம் இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? சகோதரர்களே!! ஆனால், அவர்கள் அனைவரும் இந்த அடிப்படையான அகிதாவிலே நின்று கொண்டு. தங்களது ஆயுளிலே இந்த இஸ்லாமிய ஆட்சிக்கான, அந்த இஸ்லாமிய ஆட்சி உருவாகுவதற்கான தங்களது பங்களிப்பைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அத்தகைய பங்களிப்பை இந்த அழைப்புப் பணிக்கு வழங்கி விட்டுச் செல்வோம்.எனவே சகோதரர்களே! அரசியல் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக சேவை ரீதியாக, மாற்றம் வேண்டும் என்று யோசிக்கின்றவர்கள், எமது சமூகத்தைப் பீடித்திருக்கின்ற ஒழுக்கச் சீர்கேடுகள், நூதனங்கள், பித்அத்துக்களை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் - பித்அத்துக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே போன்று பொருளாதார மாற்றம் வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். ஒழுக்கம் மேம்பட வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். சமூகத்தில் ஏழை மக்களுடைய நிலமைகள், அவை தரமுயர்த்தப்பட வேண்டும். விரும்புகின்றோம். ஆனால், இதனை இந்த அடிப்படையை மறந்து விட்டு, அகீதாவை மறந்து விட்டு மனம் போன போக்கில் செல்வதையும், அகீதாவைப் புறக்கணித்து விட்டு நாங்களும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் தான் ஈடுபடுகின்றோம் என்று கூறப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அழைப்புப் பணியில் ஈடுபடுகின்ற நாம் ஒரு இறுதியான முடிவுக்கு வர வேண்டும். ஒரு உறுதியான முடிவுக்கு வர வேண்டும். அந்தத் தீர்மானத்திலே நாங்கள் இறுதி வரைக்கும் தடம் மாறாமல் இருக்க வேண்டும். அது முக்கியம்.அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடத்தில் ஒரு ஸஹாபி வந்து சொன்னார்கள். யா ராசூலுல்லாஹ்!! எனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஒரு விசயத்தைச் சொல்லித் தாருங்கள். அந்த விசயத்தைப் பற்றி இனி யாரிடமும் நான் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாத, அந்த அவசியத்தை ஏற்படுத்தாத அளவில் அந்த விசயத்தைப் பற்றி எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கேட்கின்றார்.قل أمنت بالله ثم الستقمஅல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று சொல். அதிலே உறுதியாக இருந்து கொள் என்று கூறுகின்றார்கள்.அதாவது அகீதாவிலே உறுதியாக இருந்து கொள். அதனை விட்டும் தடம் புரண்டு விடாதே என்று கூறுகின்றார்கள்.உனது அழைப்புப் பணியிலே எத்தனை பிரச்னை வந்தாலும், சமூகத் தீமைகள் குறுக்கிட்டாலும், அந்த அஸ்த்திவாரத்தின் மீது நின்று கொண்டு யோசி! சிந்தி! என்று தான் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இத்தகைய மனிதர்களுக்குத் தான் அந்த மலக்குமார்களின் சுபச் செய்தி இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் தான் எங்கள் ரப்பென்று கூறி, அதிலே உறுதியாக இருந்தார்கள் அல்லவா! அவர்கள் மரணிக்கின்ற வேளையில் மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் துக்கப்படவும் வேண்டாம். சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றுக் கொள்ளுங்கள். உலகத்திலும், மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு நேசர்களாக இருக்கின்றோம். உங்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் அந்த சொர்க்கத்திலிருந்து, அந்த அல்லாஹ்வின் விருந்தாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும். உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்று அந்த மலக்குகள் இத்தகையவர்களுக்கு சுபச் செய்தியைத் தெரிவிக்கின்றார்கள்.
Friday, February 22, 2013
இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!
இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!
செங்கம் எஸ்.அன்வர்ஷா
o உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக, கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி!
o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை!
o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி!
"லோக்பால்" மசோதாவில் பிரதம மந்திரியையும் விசாரிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டுமெண்று இன்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்பவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியில் நாட்டின் கலீஃபாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனும் உண்மையை எவரும் கண்டுகொள்ள முடியும்.
இஸ்லாத்தில் நீதிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை எளியவர்களும் அச்சமின்றி நீதிமன்றத்தை அணுகி, எளிதில் சட்டப்படி தீர்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். சாதாரண குடிமகன் கூட நாட்டின் கலீஃபாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்! அதை கலீஃபாவும் குற்றமாக கருதியதில்லை. இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில், பொன்னெழுத்துக்களில் பதிய வைத்துள்ள பல நிகழ்ச்சிகளை இன்றும் உலகம் வியந்து பாராட்டுகிறது.
இஸ்லாமிய ஆட்சியில் கலீஃபாக்களும், பேரர்சர்களும் கட்டிக்காத்த நீதித்துறை தன் கடமையை குறைவின்றி செயலாற்றி வந்தது. நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட்டு, குர்ஆனின் கட்டளைகளையும், சுன்னத் வழிமுறைகளையும் கவனத்துடன் பின்பற்றி தீர்ப்புகளை வழங்கினர். அவற்றில் சிலவற்றையாவது நாம் அறிந்துகொள்வது அவசியமில்லையா?!
o உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி :
முதலாம் கலீஃபா ஹளரத் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி காலத்தில், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. கூஃபாவில் வசித்து வந்த "ஜமீலா" என்னும் பெண்ணை ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மணம் முடித்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் "ஆஸிம்" என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. தவிற்க முடியாத சில காரணங்களினால், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஜமீலா அவர்களை விவாகரத்து செய்து விட்டார்கள். அதன் பிறகு ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், மதீனா மாநகருக்கு குடியேறி விட்டார்கள். ஜமீலா அவர்கள் தன்னுடைய மகன் ஆஸிமுடன் கூஃபாவில் தங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கூஃபாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது, எதேச்சையாக தன் மகன் ஆஸிமை அங்கு பார்க்க நேர்ந்தது. பாச மிகுதியால் தன் குழந்தையை வாரி அணைத்து தன் குதிரையின் மீது தூக்கி உட்கார வைத்துக் கொண்டார்கள். தன்னுடைய குழந்தையை மதீனாவுக்கு அழைத்துச்செல்ல விரும்பினார்கள்.
செய்தி அறிந்த ஜமீலா அவர்கள் ஓடோடி அங்கு வந்து, ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் எக்காரணத்தைக்கொண்டும் தன் குழந்தையை அனுப்புவதற்கு மறுத்ததுடன், தன் குழந்தையை அவரிடமிருந்து பிடுங்கி எடுத்துக்கொள்ள முயற்சித்தார்கள். பாசப்பிணைப்பில் இருவரும் உறுதியாக இருந்ததால் வாக்குவாதம் முற்றி பிரச்சனை, அன்றைய கலீஃபா ஹளரத் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றுவிட்டது.
குழந்தை ஆஸிமின் இளம் வயதினை கருத்தில் கொண்டு ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக "குழந்தை அதன் தாயாருடன் தான் இருக்க வேண்டும்" என்று கலீஃபா அவர்கள் தீர்ப்பு அளித்தார்கள். தீர்ப்பை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.
o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை :
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஹளரத் அம்ரிப்னுல் ஆஸ்
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எகிப்தின் கவர்னராக இருந்தார். கிறிஸ்தவர் ஒருவர், எகிப்தின் கவர்னரின் மகனுக்கு எதிராக, மதீனாவில் இருந்த அமீருல் முஃமினீன், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடர்ந்தார்.
"கவர்னருடைய மகன் சாட்டையினால் தன்னுடைய முதுகுத்தோல் உரியும் அளவுக்கு அடித்து துன்புறுத்தினார். நீதி கேட்டு தங்களிடம் முறையீடு செய்ய வந்துள்ளேன்" என்று அந்த கிறிஸ்தவர் முறையிட்டார்.
"உம்மை எதற்காக அவர் அடித்தார்?" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க, "எகிப்து நகரின் வெளியில் குதிரை சவாரி பந்தயம் நடந்தது. இதில் என்னுடைய குதிரை வேகமாக ஓடி கவர்னரின் மகன் சவாரி செய்த குதிரையை பின்னடையச்செய்து வெற்றி பெற்று விட்டது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத கவர்னரின் மகன், என்னை சாட்டையினால் தாக்கினார்" என்று பதிலளித்த கிறிஸ்தவர், தன் சட்டையினைத்தூக்கி, காயம்பட்ட இடத்தைக் காட்டினார்.
இதைக்கேட்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த கோபத்துடன், "உமக்கு நீதி கிடைக்காதவரை, நான் வேறு எந்த வேலையையும் செய்யப்போவதில்லை" என்று உறுதியளித்தார்கள்.
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தன்னுடைய பணியாளர், முஹம்ம்து பின் முஸல்லமாவிடம் அவசரக் கடிதம் கொடுத்து எகிப்துக்கு அனுப்பி வைத்தார்கள். அதில், "எகிப்தின் கவர்னர், உடனடியாக மதீனாவுக்கு வரவேண்டும். ஒரு ஏழையின் உடலை கசையடியால் சல்லடையாக்கிய தங்கள் மகனையும் தங்களுடன் அழைத்து வரவும்" என்று கட்டளையிடப்பட்டிருந்தது. கடிதம் கிடைத்ததும், எகிப்தின் கவர்னரும், அவருடைய மகனும் உடனடியாக மதீனா மாநகரம் வந்து கலீஃபா முன் ஆஜரானார்கள்.
கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கிறிஸ்தவரையும் அங்கு வரவழைத்து, மூவரையும் கூண்டில் நிற்கும்படி கட்டளையிட்டார்கள். கலீஃபா அவர்கள், கிறிஸ்தவரை நோக்கி "நீங்கள் சுமத்தும் குற்றத்தை விளக்கமாகக் கூறவும்" என்று கூற உடனே அந்த கிறிஸ்தவர் குதிரை சவாரியின்போது நடந்த நிகழ்ச்சியை விவரித்தார்.
இதனைக் கேட்ட கவர்னரின் மகன் தலை தொங்கியபடியே குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதிர்ச்சியடைந்த கவர்னர் அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தன்னுடைய சாட்டையை எடுத்து ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நீட்டியபடியே, "அமீருல் முஃமினீன் அவர்களே! என்னுடைய சாட்டையினால் என் மகனுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டுங்கள்" என்று உணர்ச்சிபொங்க கேட்டுக்கொண்டார்.
அதற்கு கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "உமது சாட்டையைக் கொண்டு தண்டனை வழங்கப்பட வேண்டியிருந்தால், எகிப்திலேயே தண்டனை வழங்கும்படி செய்திருப்பேன். இப்போது உமது சாட்டைக்கும் அவசியமில்லை, எனது கரங்களுக்கும் வேலையில்லை. எனது சாட்டை, கிறிஸ்தவரின் கரங்களில் இருக்கும். தண்டனை பெறும் உடல் உமது அருமை மகனுடையதாக இருக்கும்!" என்று சொல்லியபடியே, தன்னுடைய சாட்டையை கிறிஸ்தவரிடம் கொடுத்து "அடியுங்கள், உங்களை எப்படி அடித்தாரோ அதைப் போலவே அடியுங்கள். உங்களை எப்படி இழிவு படுத்தினாரோ, அதே விதமாக இன்று அவரை இழிவுபடுத்துங்கள்" என்று அமீருல் முஃமினீன் கட்டளையிட்டார்கள்.
பழியைத் தீர்த்துக்கொள்ள தயாராகிவிட்ட கிறிஸ்தவர், சாட்டையினை தன்னுடைய கையில் பிடித்தபடியே, கவர்னரின் முன் வந்து நின்று கொண்டு, "அவர் என்னை கசையால் அடிக்கும்போது, எனது முதுகில் துணி இன்றி, வெற்று உடம்போடு இருந்தேன்" என்று கூறினார்.
இதைக் கேட்ட எகிப்தின் கவர்னர், உடனே தன் கைகளால், தன் மகனின் துணிகளை அகற்றினார். அதற்குப்பின்னரே அந்த கிறிஸ்தவர் தனது பழியைத் தீர்த்துக்கொண்டார்.
பழிக்குப்பழி தீர்த்துக்கொண்ட அந்த கிறிஸ்தவர், "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைகள் கூட நீதியும் நேர்மையும் கொண்டவர்கள் என்று யாரோ ஒருவர் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. அமீருல் ம்ஃமினீன் அவர்களே! தாங்கள் யாரிடம், அடிமையாக இருந்து இந்த நீதியும் நேர்மையும் கொண்ட புனித பாடத்தை கற்றுக்கொண்டீர்களோ என்னையும் அவருடைய அடிமையாக சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று உணர்ச்சி பொங்க கத்தினார்! அடுத்த நிமிடமே, அந்த கிறிஸ்தவர் இஸ்லாத்தை தழுவி விட்டார்.
o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி :
துருக்கி நாட்டின் சுல்தான்களில், சுல்தான் பாயஜித் மிகவும் புகழ் பெற்றவர்களில் ஒருவர். அவருடைய ஆட்சியில் ஷம்சுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நீதிபதி பதவியை கண்ணியத்துதுடன் அலங்கரித்து வந்தவர்கள். ஒருநாள், அவர் முன் வந்த வழக்கொன்றில் சுல்தான் பாயஜித் அவர்களே சாட்சியம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. சுல்தான் நீதிமன்றத்திற்கு ஆஜராகி சாட்சிசொல்ல முன்வந்தபோது அவரது சாட்சியத்தை நீதிபதி ஷம்சுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.
அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால், "தொழுகையை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழாதவருடைய சாட்சியம் அவ்வளவு வலுவானதக கருத முடியாது" என்பதுதான்! இதைக் கேட்டு, சுல்தான் பாயஜித் சிறிதும் கோபப்படவில்லை. நீதிபதி தன்னை அவமானப்படுத்தியதாகவும் கருதவில்லை. நீதிபதிக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இஸ்லாமிய ஆட்சியில் நீதித்துறையின் தீர்ப்புகள் இவ்வாராகத்தான் இருந்திருக்கின்றன.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் வகுக்கப்பட்ட நீதிநெறிகள், இறையருளால் போற்றி, பாதுகாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதன் காரணமாக நீதி நிலைநாட்டப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக சரித்திரக்குறிப்புகளில் காணலாம்.
Subscribe to:
Posts (Atom)


