Facebook Twitter RSS

Latest News

Tuesday, March 05, 2013

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வருவாய்





1. அன்ஃபால் மற்றும் கனாயிம்:


இவை இஸ்லாமிய அரசு போரின் மூலம் இறைநம்பிக்கையற்றோரிடமிருந்து கைப்பற்றியவையாகும். இவை பணமாகவோ ஆயுதங்களாகவோ அல்லது மற்ற பொருட்களாகவோ இருக்கலாம். அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,

“(நபியே!) அன்ஃபால்(போர் முனையில் கிடைத்த வெற்றிப்பொருட்கள்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்விற்கும் அவனது து}தருக்கும் உரியதாகும். (குர்ஆன் 8:1)

அல்லாஹ் மேலும் கூறுகிறான்,

“நிச்சயமாக நீங்கள்(போர் செய்து) வெற்றிப்பொருளாக அடைந்ததெதுவாயினும் நிச்சயமாக அதில் ஐந்திலொரு பங்கு அல்லாஹ்விற்கும்,(அவனுடைய) து}தருக்கும், அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும்” (குர்ஆன் 8:41)


முந்தைய காலங்களில் போரில்கைப்பற்றியவை தடுக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால் அவற்றை அல்லாஹ்(சுபு) தனது து}தர்(ஸல்) அவர்களுக்கு ஆகுமானதாக்கியிருக்கிறான். அபுஹ_ரைரா (ரழி), நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.

“உங்களுக்கு முந்தைய சமுதாயங்களுக்கு போரில் கைப்பற்றியவை தடுக்கப்பட்டதாக இருந்தன. வானத்தினின்றும் நெருப்பு வந்து அவர்களை விழுங்கிவிடும்.” மேலும் அவர்கள் கூறினார்கள் “முந்தைய நபிமார்கள் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து (பொருட்கள்) எனக்கு அருளப்பட்டுள்ளன… மற்றும் போரில் கைப்பற்றியவை எனக்கு ஆகுமானதாகும்.”

2. ஃபயீ(போரில் மிஞ்சியவை) :

போரோ, படையெடுப்போ எதுவுமின்றி இறைமறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றியவையாகும். (உதாரணம்: பானு நாதிரிலிருந்த யூதர்கள்). முஸ்லிம்களின் வருகையால் பயந்து பின்வாங்கியோர் விட்டுச்சென்ற சொத்துக்களும் முஸ்லிம்களின் வருகை கண்டு அஞ்சி தானே முன்வந்து கொடுத்த சொத்துக்களும் இதில் அடங்கும்.
(உதாரணம்: பதாக்கிலிருந்த யூதர்கள்).

“அவர்களிடமிருந்து அல்லாஹ் தன்னுடைய து}தருக்கு எதை மீட்டுக்கொடுத்தானோ அ(தைப் பெறுவத)ற்காக (விசுவாசிகளே!) நீங்கள் குதிரையையோ ஒட்டகத்தையோ ஓட்டவில்லை”(குர்ஆன் 59:6)

படைபலம் மூலமோ அமைதியான வழியிலோ கைப்பற்றப்பட்ட நிலங்களும், அதைத்தொடர்ந்த ஹரஜ், ஜிஸ்யா மற்றும் உசுர் ஆகியவையும் இப்பிரிவில் அடங்கும். இதைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

“(வெற்றிகொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து தன்து}தருக்காக அல்லாஹ் மீட்டுக் கொடுத்தானே அவை,(அவற்றில்) அல்லாஹ்விற்கும் (அவனுடைய) து}தருக்கும் அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக (அல்லாஹ் இவ்வாறு கட்டளையிட்டுள்ளான்)” (குர்ஆன் 59:7)



உமர் இப்ன்-அல்-கத்தாப் மேற்கண்ட குர்ஆன் ஆயத்தைப் பின்பற்றி இராக், அஷ்-ஷாம் மற்றும் எகிப்தில் கைப்பற்றிய நிலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஹரஜ் விதித்தார். மேலும் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் இதில் பங்கு உண்டு எனக் கூறினார்.
3. குமூஸ் :
இது போரில் கைப்பற்றியவற்றில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். அல்லாஹ் கூறுகிறான்.
“நிச்சயமாக நீங்கள்(போர் செய்து) வெற்றிப்பொருளாக அடைந்ததெதுவாயினும் நிச்சயமாக அதில் ஐந்திலொரு பங்கு அல்லாஹ்விற்கும்,(அவனுடைய) து}தருக்கும்,அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (குர்ஆன் 8:41)


ரசூலுல்லாஹ் ‘ஹ_ன்யான் யிலிருந்து திரும்பும்போது, ஒரு ஒட்டக முடியை எடுத்து கூறினார்கள்.
“போரில் மிஞ்சியவற்றில் ஐந்தில் ஒருபங்கு தவிர இந்த முடியளவுகூட எனக்கு உரியதல்ல. மேலும் அந்த ஒரு பங்கும் உங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.”
ரஸ}லுல்லாஹ்வின் காலத்தில், அந்த ஒரு பங்கு மேலும் ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டது. அவற்றில் ஒரு பங்கு, அல்லாஹ் மற்றும் அவனது து}தருக்காகவும், ஒரு பங்கு இறைத்து}தரின் குடும்பத்திற்காகவும், ஒரு பங்கு ஆதரவற்றோருக்காகவும், ஒரு பங்கு ஏழைகளுக்காகவும், ஒரு பங்கு பயணிகளுக்காகவும் செலவு செய்யப்பட்டது.
4. ஹரஜ் :
இது நில வரியாகும். படைபலம் மூலமோ, அமைதியான வழியிலோ, இறைமறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
ஹரஜ்-அல்-உன்வாஹ்: இது படைபலத்தால் இறை மறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றிய நிலத்தின் மீது விதிக்கப்படும் ஹரஜ்.(ஈராக், அல்-சாம், எகிப்து போன்ற பகுதிகளில் விதிக்கப்பட்டது ) இது குறித்து அல் குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
“(வெற்றிகொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து தன்து}தருக்காக அல்லாஹ் மீட்டுக் கொடுத்தானே அவை,(அவற்றில்) அல்லாஹ்விற்கும் (அவனுடைய) து}தருக்கும் அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக (அல்லாஹ் இவ்வாறு கட்டளையிட்டுள்ளான்) (குர்ஆன் 59:7)
உமர்-இப்ன்-அல்-கத்தாப், அவரது கால கட்டத்தில் நிலங்களை அளந்து மதிப்பீடு செய்யும் பொறுப்பை உத்மான்-இப்ன்-ஹனீஃப் வசம் ஒப்படைத்தார். அவ்வாறே செய்த உத்மான்-இப்ன்-ஹனீஃப், அந்நிலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஹரஜ் இனை விதித்தார். உமரும் அதை அங்கீகரித்தார். உமரின் மறைவிற்குமுன் அல்-குஃபாவின் மீது விதித்த ஹரஜ் மட்டும் 100மில்லியன்(10 கோடி) சேர்ந்ததாக குறிப்பு காணப்படுகிறது. ஒரு திர்ஹமின் மதிப்பு அக்காலத்தில் ஒரு மிஸ்கால்(4.68) தங்கத்திற்கு சமமாகும்.
ஹரஜ்-அல்-சுல்ஹ்: அமைதியான வழிகளில், பரஸ்பர ஒப்பந்தத்தின்மூலம் கையகப்படுத்திய நிலத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
5. ஜிஸ்யா:
முஸ்லிம் அல்லாதோரின் பாதுகாப்பிற்காக, அவர்களின் மீது அல்லாஹ்(சுபு) விதிக்கின்ற வரியாகும்.
6. பொது உடமைகள்:
இவை முன்பு குறிப்பிட்ட மூன்று வகையான பொதுச்சொத்துக்களாகும்.
7. அரசு உடமைகள்:
நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் அனைத்து பொது நல அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து பெறப்படும் வரியாகும்.
8. உசுர்(வழிபாட்டுத்தளங்கள் வரி) வழிபாட்டுதளங்கள் அமைந்துள்ள் நிலங்கள் மீது விதிக்கப்படும் வரியாகும்.
9. குலுல் வருவாய் :
அரசு அதிகாரிகள் பொது நல ஊழியர்கள் போன்றோரிடமிருந்து பெறப்படும் வருவாய். மேலும் சட்டத்திற்கு புரம்பான வழியில் சம்பாதித்தவற்றில் கைப்பற்றியவை, அபராதத்தொகை போன்றவையும் இப்பிரிவில் அடங்கும்.
10. பூமியிலிருந்து கிடைக்கும் தாதுக்கள், கனிமங்கள் போன்றவற்றில் ஐந்தில் ஒரு பங்கு.
11. யாருக்கும் சொந்தமல்லாத சொத்துகள்.
12. ஏமாற்றுப்பேர்வழிகள், சட்டத்திற்கு பயந்து மறைந்திருப்போரின் சொத்துக்கள்.
13. மற்றைய வரிகள்.
14. சதக்காஹ் மற்றும் ஸக்காத் வருவாய்கள்.

இஸ்லாமிய நாகரீகம் - Islamic Civilisation


 இஸ்லாமிய நாகரீகம் - Islamic Civilisation - Al Hadarah Al Islamiyyah நாகரீகம் (Hadarah) என்பதற்கும் பொருளியல் முன்னேற்றம் ; (Madaniyyah) என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. நாகரீகம் என்பது வாழ்க்கையைப் பற்றிய அனைத்து சிந்தனைகளையும் உள்ளடக்கியதாகும். ஆனால் பொருளியல் முன்னேற்றம் என்பது வாழ்வியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தும் புலன் உணர்வுக்கு உட்பட்ட (Sensed Objects) பொருட்களின் தொகுப்பு ஆகும். நாகரீகம், வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிட்ட கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவான சிந்தனையாக இருப்பதுடன், பொருளியல் முன்னேற்றம் குறிப்பிட்ட ஒன்றாகவோ அல்லது பொதுவானதாகவோ இருக்கலாம். ஆகவே, நாகரீகத்தின் படைப்பான உருவச்சிலைகள் போன்றன குறிப்பானவைகளாக இருக்கும் அதே வேளையில் அறிவியலாலும், (Science) அதன் முன்னேற்றத்தாலும், தொழிற்துறைகளாலும், அதன் பரிணாம வளர்ச்சியினாலும் உற்பத்தியாகும் பொருளியல் படைப்புகள் பொதுவானவைகள். மேலும் அவை குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ அல்லது நாட்டுக்கோ மட்டும் சொந்தமானவைகள் அல்ல. மாறாக அவை தொழிற்துறைகள், விஞ்ஞானம் ஆகியவற்றைப் போன்று பொதுவானவைகளாகும் (universal). நாகரீகத்திற்கும், பொருளியல் முன்னேற்றத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை நாம் எப்பொழுதும் கவனிக்க வேண்டும். மேலும் நாகரீகத்தின் விளைவாக ஏற்படும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும், அறிவியல் மற்றும் தொழிற்சாலைகளால் உருவாகும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டினையும் நிச்சயமாக நாம் கவனிக்க வேண்டும். பொருளியல் முன்னேற்றத்தினால் உருவான ஒரு பொருளை நாம் ஆராயும்போது அதற்கும் நாகரீகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை அறிந்திட இது அவசியமாகிறது. அறிவியல் மூலமாகவும், தொழிற்துறையாலும் விளைந்த மேற்கத்திய பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக எவ்வித தடையுமில்லை. எனினும் எக்காரணத்தைக் கொண்டும் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவான பொருட்களை நாம் ஏற்றுக்கொள்ளவே கூடாது. ஏனெனில் மேற்கத்திய நாகரீகத்தை ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு அனுமதியில்லை. இதற்கு காரணம் அந்த நாகரீகம் நிறுவப்பட்டிருக்கும் அடித்தளத்தின் முதற்படியோடும், வாழ்க்கையைப் பற்றிய அதன் கண்ணோட்டத்தோடும், மனிதனின் மகிழ்ச்சி தொடர்பாக அதன் அர்த்தத்தோடும் இஸ்லாம் முற்றாக முரண்பட்டு நிற்கிறது. மார்க்கத்தை வாழ்வியலிலிருந்து பிரிக்கும் கொள்கையிலிருந்து மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வாழ்வியல் விவகாரங்களில் மார்க்கம் ஆதிக்கம் செலுத்துவதை அது மறுக்கிறது. எனவே அரசியலிலிருந்து மார்க்கத்தை அது பிரித்து வைத்திருக்கிறது. வாழ்க்கையிலிருந்து மார்க்கத்தை பிரித்து, வாழ்வியல் விவகாரங்களில் அதன் பங்களிப்பை மறுப்பவர்களுக்கு இந்த பிரிவினை இயல்பான ஒன்றாக இருக்கக்கூடும். இந்த அடித்தளத்தில்தான் அதன் வாழ்வியலும், வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life) நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாகரீகம், மனிதனின் முழு வாழ்க்கையையும், உலக பயன்களை மட்டும் தேடி அடைந்து கொள்ளும் செயல்பாட்டுத் தளமாக கருதுகிறது. எனவே வாழ்க்கையின் செயல்பாடுகளுக்கு அதன் அளவுகோள் ஆதாயமேயாகும். ஆகையால் ஆதாயத்தின் அடிப்படையிலேயே அதன் வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life - Nidam) அதன் நாகரீகமும் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அதன் செயலாக்க அமைப்புகளிலும் நாகரீகத்திலும் உலக பயன்கள்தான் முக்கியமான சிந்தனையாகவும் (Thoughts) வெளிப்படையான அம்சமாகவும் திகழ்கின்றன. இது ஏனெனில் வாழ்க்கையை உலக பயன்கள் அடிப்படையில்தான் அது விளக்குகிறது. அவர்களுடைய பார்வையில் மகிழ்ச்சி என்பது அதிகபட்சமான புலன் இன்பத்தை மனிதனுக்கு கொடுக்கக்கூடியதாகவும், அதனை அடையும் சாதனங்களை பெற்றுக் கொள்வதாகவும், இருக்கிறது. இதனடிப்படையில் உலக பயன்களை அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆசையின் மீது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலக பயன்களைத் தவிர வேறு எந்த ஒன்றுக்கும் அங்கீகாரமோ அல்லது பரிசீலனையோ கொடுப்பதற்கு முகாந்திரமே இல்லாத விதத்தில் அதன் வாழ்வியல் செயலாக்க அமைப்புகளின் அளவுகோள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே ஆன்மீக விவகாரம் தனிமனித அளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. சமூக கட்டமைப்பில் அதற்கு எந்த தலையீடும் கிடையாது. கிருஸ்தவ தேவ ஆலயத்திற்குள்ளும் அதன் மதகுருமார்களின் கைகளுக்குள்ளும் ஆன்மீக விவகாரங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதன் முடிவாக மேற்கத்திய நாகரீகத்தின் எந்தவிதமான ஒழுக்க மாண்புகளோ அல்லது ஆன்மீக மற்றும் மனித பண்புகளோ கிடையாது. மாறாக பொருளியல்வாத அடிப்படை மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக மனிதநேய நடவடிக்கைகள் அரசிடமிருந்து பிரிக்கப்பட்டு செஞ்சிலுவை சங்கம், மிஷனரிகள் போன்ற சமூக அமைப்புகளிடத்தில் தஞ்சம் புகுந்துவிட்டன. பொருளியல்வாத அடிப்படையிலுள்ள உலக பயன்கள் நீங்களாக மற்ற அனைத்து மாண்புகளும் வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இவ்வாறான வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்டதாகவே மேற்கத்திய நாகரீகம் இருக்கிறது. இஸ்லாமிய நாகரீகத்தைப் பொருத்தவரை அது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டுள்ள அடிப்படைக்கு முற்றிலும் முரண்பட்ட அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் வாழ்வியல் கண்ணோட்டமும், மகிழ்ச்சி பற்றி அது கொண்டிருக்கும் அர்த்தமும் மேற்கத்திய நாகரீகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் அவன்(சுபு) பிரபஞ்சம், வாழ்வு, மனிதன் ஆகியவற்றிற்கு ஒரு செயலாக்க அமைப்பை ((Nidam- System) அமைத்திருக்கின்றான் என்ற நம்பிக்கை மீதும் இஸ்லாமிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது. அவன்(சுபு) மனித குலத்திற்கு இஸ்லாம் என்ற ஒரே மார்க்கத்துடன், முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பி இருக்கிறான். இதற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ்(சுபு) மீதும் அவனுடைய (சுபு) மலக்குகள் மீதும், அவனுடைய(சுபு)வேதத்தின் மீதும் அவனுடைய(சுபு) தூதர்கள் மீதும், மறுமைநாள் மற்றும் அல்களா வல்கத்ர் ஆகியவற்றின் மீதும் உள்ள நம்பிக்கையை உள்ளடக்கிய இஸ்லாமிய அகீதாவின் மீதுதான் இஸ்லாமிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது என்பதாகும். ஆகவே, அகீதாதான் நாகரீகத்தின் அடித்தளமாக இருப்பதால் ஆன்மீக அடிப்படை மீது அதன் நாகரீகம் அமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாகரீகத்தில் வாழ்க்கை முறை என்பது இஸ்லாமிய அகீதாவிலிருந்து பிறக்கும் இஸ்லாமிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அகீதாவின் மீதுதான் வாழ்க்கை மற்றும் அதன் செயல்பாடு ஆகிய இரண்டும் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மாவையும் (Spirit) இயற்பொருட்களையும் (Matter) ஒன்று கலக்கக்கூடியதாக இஸ்லாமிய தத்துவம் இருக்கிறது. அதாவது அஹ்காம் ஷரிஆவினால் மனிதனின் செயல்பாடுகள் வழிநடத்தப்படும் இந்த வழிமுறைதான் வாழ்க்கையின் அடிப்படையாக விளங்குகிறது. அதே வேளையில் மனிதனின் செயல்பாடுகள் பொருளியல் அடிப்படையில் இருக்கும் நிலையில் அவன் செயல்பாடுகளை ஹராம் ஹலால் அடிப்படையில் மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பை அவன் கவனத்தில் கொள்வதுதான் ஆன்மா (Spirit - RUH) எனப்படுகிறது. இதன் மூலம்; ஆன்மாவையும் இயற்பொருட்களையும் ஒன்று கலக்கும் செயல் ஏற்படுகிறது. இதன்படி, அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள் முஸ்லிம்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறன. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக தன் செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு முஸ்லிமுடைய இறுதி லட்சியம் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதே அல்லாமல் உலக பயன்களாக இருக்க முடியாது. எனினும், செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது உடனடியாக தேடப்படுவது பொருளியல் பயனாக இருக்கலாம். அது செயல்களுக்கு ஏற்ப மாறுபடும். வர்த்தகத்திலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட்டிருக்கும் ஒருவரின் எண்ணம் இலாபம் ஈட்ட வேண்டும் என்ற பொருளியல் பயனாக இருக்கலாம். எனினும் அவருடைய வியாபாரம் பொருளியல் பயன் (Meterialistic) சார்ந்த செயல்பாடாக இருந்தாலும்கூட அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்திடும் பொருட்டு அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகள் மூலமாக அவனுடன்(சுபு) அவருக்குள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளும் விதமாக அவர் அதில் இயக்கப்படுகிறார். அதே வேளையில் அந்த செயல்பாட்டை மேற்கொள்வதன் மூலம் அவர் அடைந்து கொள்ள எண்ணிய இலாபம் பொருளியல் பயனாக இருக்கிறது. தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற ஆன்மீகம் சார்ந்த பயனாகவும் அது இருக்கலாம். உண்மையை கடைபிடித்து நேர்மையாக இருத்தல், நன்றி உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற ஒழுக்க மாண்புகள் சார்ந்த பயனாகவும் இருக்கலாம். நீரில் மூழ்க இருக்கும் ஒருவரை காப்பாற்றுதல் அல்லது ஏழைகளுக்கு உதவுதல் போன்ற மனித நேயம் சார்ந்த பயனாகவும் இருக்கலாம். மனிதன் தன் செயல்பாட்டை மேற்கொள்ளும்போது இந்த பயன்களை கவனத்தில் கொண்டு அவைகளை அடைய எண்ணுகிறான். எனினும், மனிதனின் செயல்பாடுகளுக்கு பின்னணியிலிருந்து அவனை இயக்கும் ஆற்றல் இந்த பயன்களாகவோ, அவன் நோக்கமாக கொண்ட இறுதி இலட்சியமாகவோ அவை இருப்பதில்லை. அவை செயல்பாட்டின் பலன்களாக இருப்பதுடன் அவை செயல்பாட்டின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. மகிழ்ச்சி என்பது அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதேயன்றி மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் இல்லை. ஒருவன் தன்னுடைய வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காக உடல்சார்ந்த தேவைகளையும் (Organic Needs) உள்ளார்ந்த உணர்வுகளின் விருப்பங்களையும் (Instinctual Desise) நிறைவு செய்து கொள்வது அவசியமான விதிமுறையாக இருக்கிறது. ஆனால், இவைகளை நிறைவு செய்து கொள்வது மட்டும் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்காது. இங்கு தொகுத்துக் கூற விரும்பும் சுருக்கமான கருத்து யாதெனில்: வாழ்வியல் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் இதுதான். இந்த கண்ணோட்டம்தான் இஸ்லாமிய நாகரீகத்தின் அடிப்படை. ஒவ்வொரு அம்சத்திலும் மேற்கத்திய நாகரீகம் இஸ்லாமிய நாகரீகத்திலிருந்து முரண்படுகிறது என்பது தெளிவாக விஷயம். இஸ்லாமிய நாகரீகத்தின் விளைவாக உருவாகும் பொருளியல் முன்னேற்றத்தின் அடிப்படையிலுள்ள குறிப்பிட்ட பொருட்கள் இஸ்லாத்திற்கு மட்டும் பிரத்தியோகமாக உரியவை. அவை மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவாகும் பொருளியல் முன்னேற்ற அடிப்படையிலுள்ள பொருட்களோடு முரண்படுவதாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு நிழற்படம் (Photograph) என்பது பொருளியல் முன்னேற்றத்தின் விளைவாக உருவான பொருளாகும். (Madaniyya Objects) ஒரு பெண்ணின் உடல் அழகை வெளிப்படுத்தும் நிர்வான நிழற்படத்தை மேற்கத்திய நாகரீகம் ஒரு கலை அம்சமாக கருதுகிறது. அந்த நிழற்படம் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவாகிய பொருளியல் முன்னேற்றத்தின் குறிப்பிட்ட பொருளாக இருக்கிறது. மேலும் அது பெண்கள் குறித்த அதன் வாழ்க்கை கண்ணோட்டமாகவும் இருக்கிறது. ஆகவே மேற்கத்திய சமூகத்தைச் சார்ந்த ஒரு மனிதன் அதை கலை அம்சமாக கருதுகிறான். அதில் பெருமை பாராட்டுகிறான். எனினும், இந்த பொருள் இஸ்லாமிய நாகரீகத்திற்கும், பெண்களின் கௌரவம் என்று கருதி எவைகளை பாதுகாக்க வேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறதோ அத்தகைய சிந்தனைகளுக்கும் முரண்படுகிறது. இதன் முடிவாக இத்தகைய நிழற்படங்கள் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவை பாலியல் வேட்கையை தூண்டக்கூடியதாக இருக்கின்றன. இதன் விளைவாக சமூகத்தின் ஒழுக்க மாண்புகள் தளர்ந்து போவதற்கு இவை உடனடி காரணங்களாக இருக்கின்றன. இது போலவே வீடு என்பது மற்றொரு பொருளியல் முன்னேற்றம் சார்ந்த பொருளாக இருக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கு வீடு கட்ட எண்ணும் போது வெளியில் இருப்பவர்களுக்கு வீட்டினுள் இருக்கும் பெண்கள் தெரியாத வகையில் வீட்டின் அமைப்பு இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்துவார். இதனடிப்படையில் ஒரு முஸ்லிம் வீட்டைச் சுற்றி மதில் சுவர் எழுப்புகிறார். ஆனால் மேற்கத்தியர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. மேற்கத்திய நாகரீகத்தின் அடிப்படையில் உருவான பொருளியல் முன்னேற்றம் சார்ந்த அனைத்து பொருட்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக உருவ சிலைகளை கூறலாம். இது போலவே நிராகரிப்பவர்களின் பிரத்தியோகமான ஆடைகளை அணிவது முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அவைகள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கின்றன. எனினும் இதர ஆடைகளை அணிவதற்கு தடையில்லை. உதாரணமாக, தேவைக்காக அணியும் ஆடைகள் அழகூட்டும் ஆடைகள். இவைகளில் குஃப்ர் அம்சங்கள் இல்லையெனில் அவற்றை அணியலாம். அவைகள் பொதுவான பொருட்களாகும். அவற்றை உபயோகிப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டு. அறிவியல் மற்றும் தொழிற்துறைகள் மூலமாக உருவாக்கப்பட்ட பரிசோதனை கூட உபகரணங்கள், மருத்துவத்துறை மற்றும் தொழிற்துறை கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகிய பொருளியல் முன்னேற்றம் சார்ந்த பொருட்கள் பொதுவானவைகளாகும். நாகரீகத்தின் விளைவாக உருவாகாததும், அதனோடு தொடர்பு இல்லாததுமான இத்தகைய பொருட்களின் உபயோகத்திற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டு. இன்றைய உலகை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் மேற்கத்திய நாகரீகத்தை மேலோட்டமாக பார்வையிட்டால் மனிதனின் மன அமைதிக்கு அதனால் உத்திரவாதம் அளிக்க முடியாது என்பது தெளிவாக விளங்கும். இதற்கு மாற்றமாக மனித சமூகத்தில் ஆழமாக இடம்பெற்றுள்ள துன்பத்திற்கும் துயரத்திற்கும் அதுவே காரணமாகவும் இருக்கிறது. வாழ்வியலிலிருந்து மார்க்கத்தைப் பிரிப்பதை அடிப்படையாக ஏற்றுள்ள இந்த நாகரீகம், மனிதனின் இயற்கை தன்மைக்கு முரண்படுகிறது. ஆகவே சமூகத்தில் ஆன்மீக விஷயங்களுக்கு அது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாழ்க்கையை உலக இலாபங்களின் தொகுப்பாக அது கருதுகிறது. உலக இலாபங்களை அடைவதுதான் மனிதர்களுக்கிடையிலுள்ள உறவின் அடிப்படையாக அது கருதுகிறது. எனவே, ஓயாத துன்பத்தையும் மனப்போராட்டங்களையும் அது உருவாக்குகின்றது. வாழ்வின் அடிப்படையாக உலக இலாபங்கள் கருதப்படும்வரை இயல்பாகவே அதற்கான போராட்டமும் கூடுதலாகவே இருப்பதுடன் இங்கே மனிதர்கள் மத்தியில் உறவைப்பேணுவதற்கு வலிமையை பிரயோகிக்கவேண்டிய நிலையும் இயல்பாகவே காணப்படும். எனவே இந்த நாகரீகத்தை பின்பற்றுகிறவர்களுக்கு காலனியாதிக்க சிந்தனை ஏற்படுவது இயல்பான விஷயமாகும். ஏனெனில் வாழ்க்கையின் அடிப்படையாக உலக பயன்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அங்கு எந்த வகையான ஒழுக்க மாண்புகளுக்கும் இடம் கிடையாது. ஆகையால், ஆன்மீக மாண்புகள் உதாசீனப்படுத்தப்பட்ட அதே வழியில் அனைத்து ஒழுக்க மாண்புகளும் அந்த சமூகத்தில் மங்கிப்போவது இயற்கையான நிகழ்வுதான். எனவே அங்கு போட்டி, போராட்டம், ஆக்கிரமிப்பு, காலனியாதிக்கம் ஆகியவற்றின் மீது வாழ்வு நிறுவப்பட்டுள்ளது. மக்களிடம் ஆன்மீக நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக ஓயாத மனப்போராட்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் உலகம் முழுவதிலும் பரவலாக தீமை விளைந்திருப்பது மேற்கத்திய நாகரீகம் ஏற்படுத்தியிருக்கின்ற தீய விளைவுகளாக இருக்கின்றன. இதனால் மனித சமூகம் கடும் கோபமுற்று குற்றம் சாட்டும் வகையில் இன்று நிலைமை இருக்கிறது. உலகில் இந்த நாகரீகம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதின் காரணமாக அழிவை கொண்டுவரும் பல விளைவுகளை நோக்கி மனித சமூகம் சென்று கொண்டிருக்கிறது. முடிவாக மனித வர்க்கத்தின் செயல்பாட்டிற்கு இன்று மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகில் ஆதிக்கம் பெற்றிருந்த இஸ்லாமிய நாகரீகத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில், அது காலனி ஆதிக்க கொள்கையை ஒருபோதும் கொண்டதாக இருக்கவில்லை. உண்மையில் இஸ்லாத்தின் கொள்கைக்கு காலனி ஆதிக்கம் அந்நியமானது. ஏனெனில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் அது காட்டுவதில்லை. எனவே, அதன் நெடிய ஆட்சிகாலம் முழுவதும் தங்களை அதனிடம் ஒப்படைத்துக் கொண்ட மக்கள் அனைவருக்கும் நீதத்தை பெற்றுத் தந்திருக்கிறது. இது ஏனெனில், ஆன்மீக அடிப்படை மீது கட்டமைக்கப்பட்டுள்ள நாகரீகமாக அது இருக்கிறது என்பதுதான். பொருளியல், ஆன்மீகம், ஒழுக்க மாண்புகள் மற்றும் மனித நேயம் ஆகிய அனைத்து மதிப்பீடுகளையும் அது நிறைவு செய்கிறது. வாழ்வியலில் அகீதாவிற்கு உச்சகட்டமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளினால் வாழ்க்கை கட்டுப்படுத்தப்படுகின்றது. மகிழ்ச்சி என்பது முற்றிலும் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை அடைந்து கொள்வதுதான் என இஸ்லாம் கருதுகிறது. கடந்த காலங்கள் போல மறுமுறையும் இஸ்லாமிய நாகரீகம் ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் இன்று உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் என்பதற்கு உத்திரவாதம் உண்டு. மேலும் மனித வர்க்கம் முழுமைக்கும் அது நன்மையை பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

Monday, March 04, 2013

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 89 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை


முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா (இஸ்லாமிய அரசு) ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம்3) ம் தேதியில் முஸ்தபா கமால் அதா துர்க்கினால் துருக்கிய தலைநகரான இஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு ஹிஜ்ரி 1431 ரஜப் 28 உடன் 87 வருடங்கள் கடந்துவிட்டன. 1924 மார்ச் 3 ம் தேதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாஃபத் உலகை விட்டும் அழிக்கபட்டது. இறுதியாக துருக்கியில் இஸ்லாமியசாம் ராஜியதின் கலீஃபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீஃபா அப்துல் மஜீத். இவர் கிலாஃபா அழிக்கபட்டு ஒரு மணி அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் .இந்த அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற துரோகி.முஸ்லிம் உம்மா அனாதையானது; மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது; முஸ்லிம் உம்மா துடி துடித்தது .அரசியல் அனாதையானது .ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்கவில்லை. மறுகணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறப்பட்டது. பயணம் மிகவும் நீண்டது. இன்றும் தொடர்கின்றது .

கிலாஃபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும்,முஸ்லிம் உலகிலே அவர்களின் கைப்பாவையான ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரிய அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டு மொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உலகம் பொருளாதார பலமற்றதாக, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிறுசிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மா இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும்,கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல்,பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசங்களாக மாறிவிட்டது.

 முஸ்லிம்களும், அவர்களின் நிலங்களும் குஃப்பார்களின் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு இலக்காகியது. யூதர்கள்,பிரான்ஸியர்கள், பிரித்தானியர்கள், இந்துக்கள், இத்தாலியர்கள்,அமெரிக்கர்கள், செர்பியர்கள், ரஸ்யர்கள், சீனர்கள் என அனைவர்களும் முஸ்லிம்களின் அவலத்திற்கும், கண்ணீருக்கும் காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர். ஸ்திரமற்ற பொருளாதார நிலையினையும், உணவுக்கும், வாழ்விடத்திற்கும் அகதி முகாம்களில் தஞ்சம் புகும் அவலத்தையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும்,படுகாயமடைந்தும் இருக்கின்றனர். இந்த அவலத்தினை விளங்கிக்கொள்ள உங்கள் மனக்கண் முன் பலஸ்தீனம்,ஈராக்,ஆப்கானிஸ்தான், செச்னியா, காஷ்மீர், கொசோவா,பொஸ்னியா,அரிட்ரியா போன்ற பூமிகளின் கொடூரமான நிலவரத்தி னைநிலைநிறுத்திப் பாருங்கள். இந்த அகோர நிலை அமெரிக்கா,பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகள் பின்பற்றும் மிகக்கொடூரமான உலக ஒழுங்கினால் மென்மேலும் மோசமடைந்துள்ளது. உம்மத்தின் வளங்கள் அனைத்தும், குறிப்பாக எண்ணெய் வளம் முழுவதும் இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் போர் இயந்திரத்தினை பலப்படுத்த பயன்பட்டு வருகிறது. முழு முஸ்லிம் உம்மத்தினையும் தமது இரும்புச்சப்பாத்திற்குள் அடக்குவதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மனித இனத்திற்கு அருளாய் இருந்த பிரமாண்டமான சாம்ராஜ்யம் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தேசியவாதம் மிகவும் நுட்பமாக புகுத்தபட்டது. தேசியவாதத்தை பயன்படுத்தி மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உம்மத்தின் முதுகில் ஏறி ருத்ரதாண்டவம் ஆடுகிறது. அழிக்கபட்ட கிலாஃபா உலகில் மீண்டும் தலைமை கொண்டு எழும் என்பதை முஸ்லிம் உம்மா கட்டியம் கூறுகிறது.

‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ ‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” ஆல இம்றான்: 193

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய அரசு எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3) முஸ்தபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாஃபா வீழ்த்தப்பட்ட இந்த காலகட்டத்தில் கிலாஃபா அரசு பலகீனமடைந்திருந்ததுடன் சிந்தனைத்தரம் வலுவிழந்திருந்தது. முஸ்லிம் தேசத்தை ஆக்கிரமிப்பதற்காக முஸ்லிம்களின் படைகளுடன் போராடிப் போராடித் தோல்வி கண்டு களைத்துப் போயிருந்த காபிஃர்கள் இனிமேலும் இவர்களுடன் போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கத்தொடங்கியிருந்தபோது முஸ்லிம்களின் அடிப்படையான இஸ்லாமிய சிந்தனையினை பலகீனப்படுத்துவதற்கு இக்காலகட்டத்தில் கிலாஃபத்தில் காணப்பட்ட பலகீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள் தமது சிந்தனைகளையும் தமது கலாச்சாரங்ளையும் முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரப்டுத்தி இஸ்லாமிய அரசின் அடிப்படை பலமான இஸ்லாமிய சிந்தனையினை ஆட்டங்காண வைப்பதன் மூலம் அதனது அத்திவாரத்தினையே தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.
இதனை சாத்தியப்படுத்துவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பவதன் ஊடாகவும், தமது பாடசாலைகள்,வைத்தியசாலைகள் அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதன் ஊடாகவும் தமது கருத்துக்களை பிரச்சாரப்படுத்தியதுடன் சில இரகசிய ஸ்தாபனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள்ளும் ஊடுருவினர். இவற்றுள் அவர்கள் தந்திரமாக கல்வியியல் விடயங்களிலேயே தமது கவனத்தை அதிகமாகசெலுத்தினர். இத்தகைய முயற்சிகளினூடாக அவர்கள் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் புத்திஜீவிகள் போன்றோரை கவர்ந்தனர்.

வளர்ந்து வந்த இந்த சிந்தனைப்போக்கு மேற்குலகின் கலாச்சாரத்தையும், நீதிபரிபாலனத்தையும் தமக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கு முஸ்லிம்களை தூண்டியது. இவர்கள் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை கிளப்பியதுடன் அது தற்கால நவீன உலகிற்கு எந்தளவில் பொருத்தமுடையது என்பன போன்ற வினாக்களைத் தொடுத்தனர். இவர்கள் தாம் இஸ்லாத்தை பின்பற்றவதாக காட்டிக்கொண்டு மேற்குலகின் கவர்ச்சியை நோக்கியே இழுத்துச் செல்லப்பட்டனர். இதன் விளைவாக கிலாஃபத்தின் கட்டமைப்பும் அதன் அஸ்திவாரமும் ஆட்டம் காண ஆரம்பித்தது. இதனால் உலகில் இஸ்லாத்தின் தஃவா தடைபட்டது. காபிர்களுக்கு தமது சிந்தனைகளை இஸ்லாமிய தேசத்தினுள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது.

கிலாஃபத்தின் இந்த வீழ்ச்சியில் குஃப்ர் அரசுகள் குறிப்பாக பிரித்தானியா,பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராஜதந்திர மற்றும் ஏனைய உயர்மட்டங்கள் அதிகளவிலான பங்களிப்பினை செய்தன. கிலாஃபத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பலகீனமான நிலையை மிகவும் கச்சிதமாக அவதானித்த குஃப்ர் அரசுகள் கிலாஃபத்தின் எல்லைகளை பகுதி பகுதியாக ஆக்கிரமித்தனர்.

அனைத்து மேற்குலக நாடுகளும் பேராசையில் மிதக்க ஆரம்பதித்தனர்.பிரித்தானியாவுடனும் பிரான்சுடனும் சேர்ந்து தமது பங்கினையும் பெற்றுக்கொள்வதில் ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகள் முனைப்புடன் செயற்பட்டன. தமக்குள் காணப்பட்ட முரண்பாடுகளை கடந்து இஸ்லாத்தினையும், கிலாஃபத் ஆட்சினையும் அழிப்பதிலும் அவர்கள்ஒன்று திரண்டார்கள். அவர்கள் ஆட்சியிலும், அரசியல், சமூக விவகாரங்களிலும் இருந்து இஸ்லாத்தினை நீக்கி அதற்கு பகரமாக மேற்குலகின் நீதிபரிபாலனம், முதலாளித்துவம், ஜனநாயகம் போன்ற சிந்தனைகளை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை செலுத்த யோசித்தனர்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் பெரியதொரு விடயமாக உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் வீழ்ச்சியும் நடந்தேறியது. இதனால் இந்த அழிவுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. முஸ்தபா கமால் அதாதுர்க் அதிகாரப் பூர்வமாக கிலாஃபத்தினை வீழ்த்தியபோது உம்மத்திலிருந்து வெளிவந்த எதிர்ப்பலைகளின் பலகீனம் இதனை மிகத்தெளிவாக காட்டுகிறது. அவன் இங்கிலாந்தின் அடிவருடி என்பதை சமூகம் அறிந்திருந்தபோதிலும் அவனது இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தி,மீண்டும் இஸ்லாத்தின் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. இதை விடக்கேவலமான விடயம் என்னவெனில் பிரித்தானியாவின் கிலாஃபத்திற்கெதிரான இந்த சதி முயற்சிக்கு அன்றைய ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஷரிஃப் ஹசைன்-( நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச்சேர்ந்தவன் என்று பொய்யாகக் கூறப்படுபவன்) என்பவன் உறுதுணையாக இருந்தான்
இவ்வாறு கிலாஃபத் வீழ்த்தப்பட்டு இஸ்லாம், முஸ்லிம் உம்மத்தின் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் அதனுள் திணிக்கப்பட்டு, இஸ்லாத்தின் பூமி பல பலகீனமான தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களையே இந்த தேசங்களின் தலைவர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தினை அழிக்கின்ற முயற்சியில் வெற்றிகண்டது. அவர்கள் உண்மையில் காஃபிர்களையே பிரதிநிதித்துவப்படுத்தினர். முஸ்லிம்களையல்ல. அவர்கள் கிலாஃபத்தினை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று செயற்பட்ட முஸ்லிம்களை கடுமையாக தண்டித்தனர்.

இவ்வாறாக காஃபிர்கள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தியதுடன் முஸ்லிம்கள் மேற்கத்திய சிந்தனைகளின் ஆளுகைக்குள் உட்பட்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களும் அவர்களின் நிலங்களும் மேற்குலகின் சிந்தனைகளையும் பொருட்களையும் உள்வாங்கிக் கொள்ளும் சிறந்த சந்தைகளாக மாற்றமடைந்தன. இந்த அவல நிலையை தொடர்ந்து பேணுவதற்காகவும் முஸ்லிம்கள் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் தடைக்கல்லாகவும் இஸ்ரேலை அரபுலகின் மையத்தில் இவர்கள் ஏற்படுத்தினார்கள்.

முஸ்லிம் உம்மத் பிறரின் ஆளுகைக்குட்பட்டிருப்பதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. எனவே இஸ்லாம் அனைத்து மேலாதிக்கங்களுக்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொள்ளவதை வலியுறுத்தவதால் இதனை நாம் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

விசுவாசிகளுக்கு மேலான எந்தவொரு (அதிகாரத்தையும்) வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான் . (4:141)

விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமதுபாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். (3:28)


விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம். (60:1)

விசுவாசிகளே! உங்களையன்றி இறைநிராகரிப்போரை உங்களுடைய அந்தரங்க செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்கிக்கொள்ளவேண்டாம். (ஏனெனில்) அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. மேலும்,நீங்கள் துன்புறவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்ச்சொற்களிலிருந்தே (அவர்களுடைய கடுமையான வெறுப்பு திடமாக வெளிப்பட்டு விட்டது.) எனினும் அவர்களின் மனதில் மறைந்திருப்பது இதைவிட மிகவும் மோசமானதாகும். (3:118)

Saturday, February 23, 2013

இஸ்லாம் கொச்சைப் படுத்தப் படுகின்றது;முஸ்லிமே ! நீ எங்கே இருக்கிறாய் !?



      முஹம்மத், அல்லாஹ்வின் தூதராவார் ;அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள் ;ருகூ செய்பவர்களாகவும் , சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் ; அல்லாஹ்விடம் இருந்து பேரருளையும் ,அவனுடைய பொருத்தத்தையும் மட்டுமே தேடுவார்கள் ; அவர்களுடைய அடையாளம் ,சிரம் பணிவதின் அடையாளத்தினால் அவர்களது முகங்களில் இருக்கும் ;இதுவே தவ்ராத்தில் உள்ள அவர்களது அடையாளமாகும் ; இன்னும் இன்ஜீளில் அவர்களுக்குள்ள உதாரணமாவது , ஒரு பயிரைப் போன்றதாகும் ; அது தனது முளையை வெளிப்படுத்தி ,பின்னர் அதை பலப்படுத்துகின்றது ; பின்னர் , அது (தடித்து ) கனமாகிறது . பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது ; விவசாயிகளை(யே) ஆச்சரியமடையச் செய்கின்றது .இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதட்காக  (இவ்வாறு உதாரணம் கூறுகிறான் );அவர்களில் விசுவாசங்கொண்டு , நட்கருமங்களையும் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் ,மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான் .                                                      
                    (அல் குர் ஆன் மொழி பெயர்ப்பு - சூரா அல் பத்ஹ்,  வசனம் 29)


                                            நிகழ்கால சூழ்நிலைகளில் முஸ்லீம்களாகிய எமது வாழ்வு ,நடத்தை என்பவற்றின் மீது கேள்வி எழுப்பும் ஒரு வசனமாகவும் , ஒரு முஸ்லிமின் நடத்தை இவ்வாறுதான் அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இந்த வசனம் அமைந்துள்ளது . ரசூல் (ஸல் ) அவர்களின் நடத்தை வழி ஆதாரத்தின் படி நிராகரிப்பாளர்களின் மீது கடுமை காட்டுதல் என்பதன் அர்த்தமாவது இஸ்லாம் அல்லாத சிந்தனா வாதத்தின் கடும் பிடியாளர்களோடு ,ரசூல் (ஸல்) பலத்தோடு இருந்த சந்தர்ப்பத்திலோ அல்லது எதிர்க்க பலமற்று இருந்த சந்தர்ப்பத்திலோ எவ்வாறு நடந்து கொண்டார்கள் ? என்ற விளக்கத்தை சுற்றியே எம்மை பார்க்கத் தூண்டவேண்டும். அதன்படி மனித நேயம் என்ற எல்லைக்குள் இஸ்லாமிய சிந்தனா வாதத்தை பரிகசிக்காத ,எதிர்க்காத மனிதர்கள் மீது ஒரு கண்ணியமான உறவை பேணுதல் என்பதும் இஸ்லாத்தின் கட்டளை என்பதை சுன்னா தெளிவாகவே எமக்கு காட்டி நிற்கும் . 

                                                 ஆனால் இன்றைய சூழ்நிலைகளில் முஸ்லீம்களின் நடத்தை என்பது இந்த வஹி வழிகாட்டலுக்கு மாற்றமாக , தலைகீழாகவே அமைந்துள்ளது !! (அதே நேரம் அல்லாஹ்வின் உதவியையும் ,பொருத்தத்தையும் வேறு எதிர்பார்க்கிறார்கள் ! )அதாவது அந்த நடத்தை நிராகரிக்கும் சிந்தனா வாதத்தோடு சமரசம் செய்தல் , இணங்கிப் போதல் , அந்த 'குப்ரிய ' சிந்தனா வாதத்தின் எதிர்பார்ப்பிற்கு அமைந்த வாழ்வியல் வாதங்களுக்கு சார்பாக இஸ்லாத்தை திரித்துக் கூறுதல் ,பேசவேண்டிய தருணங்களில் மௌனம் காக்கத் தூண்டுதல் போன்ற நடத்தைகளின் ஊடாக 'குப்ரை' திருப்திப் படுத்துவதோடு , விரல் நீட்டி இந்த இயக்கத்தின் நடத்தை போல் எமது நடத்தை இல்லை , அந்த அமைப்புக்கு வெளிநாட்டு பணம் வருகிறது , இவர்கள் தீவிரவாதிகள் என காட்டிக் கொடுத்து குப்பார்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் தான் இனி வாழ்க்கை உள்ளது; என செயல்படவும் தொடங்கி விட்டார்கள் .

                                            கீழே வரும் சம்பவங்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் போது  , நிராகரிப்பவர்களின் அதிகாரத்தின் கீழ் விரும்பியோ விரும்பாமலோ வாழும் நிலை ஏற்பட்டால் ஒரு முஸ்லிமின் நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சிறந்த சான்றாக அமைகின்றது .

                                      ரசூல் (ஸல் ) அவர்கள் ஒருமுறை குறைசிக் காபிர்களின் கடுமையான நக்கலுக்கும் ,நையாண்டிக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது . அப்போது அந்த காபிர்களின் முன் நின்று கோபப்பட்டவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) பின்வருமாறு கூறினார் ." குறைசிகளே ! நான் சொல்வதை சற்று கவனியுங்கள் . எனது உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக ! உங்களிடத்தில் நான் உங்களை அழிவிற்கு இட்டுவிடும் ஒரு முடிவை கொண்டே வந்துள்ளேன் . (அதாவது அதி விரைவாக உங்கள் கதை முடிந்து விடப் போகிறது )"என்ற  இவரின் இந்த ஆவேசமான வார்த்தைகள்  குறைசிகளை திடுக்கிட வைத்தது. 

                                                      இதே போல இன்னொரு சம்பவம் இது உமர் (ரலி ) இஸ்லாத்தை தழுவிய நேரம் நடந்தது . அவர்கள் தான் இஸ்லாத்தை தழுவிய செய்தியை யாரிடம் சொன்னால் அது பகிரங்கமாகும் ? என விசாரித்ததில் 'ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜுமகி 'என அறிந்து அவனிடம் சொன்னார்கள் .அவன் மக்கள் மத்தியில் சென்று "ஓ  குறைசிகளே !கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான் " என்று கத்தினான் . அவனோடு கூடச் சென்ற உமர் (ரலி ) " இல்லை இவன் பொய் கூறுகிறான் .நான் மதம் மாறவில்லை .மாறாக முஸ்லிமாகி விட்டேன் ." என்று கூறியவுடன் . காபிர்கள் ஓன்று கூடி அடிக்க ஆரம்பித்தார்கள் உமர் (ரலி )யும் அவர்களோடு சண்டையிட்டார்கள் .இறுதியில் அவர்கள் களைத்து சோர்ந்து விடும் நிலைக்கு வந்த போது கூறினார்கள் . "உங்களுக்கு முடிந்ததை செய்யுங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஓன்று மக்கா உங்களுக்கு அல்லது எங்களுக்கு என ஆகிவிடும் " என்று கூறினார்கள் .

                                   இந்த சம்பவத்தின் பின்னர் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் ) வந்த உமர் (ரலி ) அல்லாஹ்வின் தூதரே ! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில் தானே இருக்கிறோம் ?" எனக் கேட்டார்கள் .அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் "ஆம் !எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக ! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில் தான் இருக்கிறீர்கள் " என்று கூறினார்கள் .அப்போது உமர் (ரலி )! "இனி நாம் ஏன் மறைவாக செயற்பட வேண்டும் ? இனி சத்தியத்தை வெளிப்படையாக கூறியே ஆகவேண்டும் " எனக் கூறியவராக இருந்த சொற்ப முஸ்லீம்களை இரண்டு அணியாக பிரித்து ஒரு அணிக்கு ஹம்சா (ரலி ) அவர்களை தலைமைதாங்க வைத்து மறு அணிக்கு தான் தலைமை தாங்கியவராக புழுதி பறக்க அணிநடை சென்று கவுபாவுக்குள் நுழைந்தார்கள் .(இதன் பின்னரே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) உண்மைக்கும் பொய்க்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் எனப் பொருள் படும் ' அல் பாரூக் ' என்ற பெயரை உமர் (ரலி )க்கு சூட்டினார்கள் .) காபிர்கள் கதிகலங்கிப் போனார்கள் .

                          இந்த சம்பவங்கள் எல்லாம் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருந்த நிலையில் தான் நிகழ்ந்தவை . இன்று காவி அணிந்த காழ்ப்புணர்ச்சிகள் குர் ஆணை மொழி பெயர்த்து எம்மீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேள்வி எழுப்புகின்றன !? 'அபூலஹபை விமர்சித்த சூராவைக் காட்டி இப்படி பேசும் ஒருவனுக்கு இறைவனாக இருக்க தகுதி இல்லை என ஒரு தரக்குறைவு தம்பட்டம் அடிக்கிறது !!.அஹ்லாக் ,அஹ்லாக் என ஆதாரம் காட்டி இஸ்லாத்தை ஒரு மதமாக முன்வைத்து அதன் சித்தாந்தப் பெறுமானம் பேசப்படாத குறையே இந்த குறைமதிகள்   'வஹியை இழுத்து கேலித்தனம் செய்ய காரணமாக ஆகிவிட்டது!! 

                        இது   இஸ்லாத்தை சாகடித்து ஒரு சிறுபான்மை வாழ்வு எமக்கு அவசியமா ? என சிந்திக்க வேண்டிய தருணம் .ஓ முஸ்லீம் உம்மத்தே ! எம்மிடம் மட்டுமே ஒரு தெட்டத் தெளிவான வாழ்வியல் வழிமுறை உண்டு என்பதே எமது அசைக்க முடியாத அகீதா . யாரும் வெறுக்கும் நிலையிலும் மறுக்கும் நிலையிலும் கிண்டலடிக்கும் நிலையிலும் இந்த சத்தியமே வெற்றியடையும் என்பதும் எமது அகீதா . அல்லாஹ்வுடைய அருள் என்பது அவன் எங்களுக்கு தந்திருக்கும் வாழ்க்கை முறைதான் . 'வாழ்ந்தால் இஸ்லாம் எனும் கண்ணியத்தோடு வாழ்வு அல்லது இஸ்லாத்தோடு மரணித்தல் 'என்பது எமது முடிவாக மாறும் பட்சத்தில் இஸ்லாம் சிறுபான்மை பெரும்பான்மை போன்ற எந்த நிலையிலும் கண்ணியத்தோடு  வாழும் என்பது வரலாறு மட்டுமல்ல நாம் எதிர் கொள்ளும் நிதர்சன நியாயமும் ஆகும் ..

இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம்





இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம் 
إن الحكم إلا للهஅல்லாஹ் தான் சட்டத்தை இயற்றுகின்றவன். அந்த அல்லாஹ்வினுடைய சட்டங்களே எங்களை ஆள வேண்டும் என்ற அகீதாவைச் சொல்லுங்கள். இதனை யாரும் அழுத்திச் சொன்னதாகத் தெரியவில்லை. இது அகீதாவிலே ஒரு விசயம். தவ்ஹீதிலே ஒரு முக்கியமான அங்கம். இதனை யாரும் மறைக்க முடியாது. மறுக்க முடியாது. இதைப் பற்றிப் பேசாமல் தவ்ஹீதைப் பற்றிப் பேச முடியாது சகோதரர்களே!! எப்படி அல்லாஹ் வணங்கப்படக் கூடியவனாக இருக்கின்றானோ! எப்படி அவன் உதவி செய்யக் கூடியவனாக இருக்கின்றானோ! அதே மாதிரி அல்லாஹ்! எங்களை வழிநடத்தக் கூடியவன். எங்களுக்கு சட்டங்களை வகுத்துத் தரக் கூடியவன். அவனது சட்டம் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எந்தக் காலத்திற்கும் ஒவ்வாதது அல்ல என்ற அந்தக் கருத்தை ஓங்கி நம்முடைய அழைப்பு பணியிலே முழங்குவோம்.ஏன் அதனை நாம் அழுத்திப் பேச வேண்டும் என்றால், அது தவ்ஹீதிலே ஒரு பகுதி. யூசுப் (அலை) அவர்களது வரலாற்றிலே நாம் இதனைப் பார்க்கின்றோம், சூரா யூசுப் - லே இறைவன் கூறுகின்றான் :إن الحكم إلا للهசட்டங்களை இயற்றுகின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது. அந்த சட்டம் வேறு மக்களுடைய கைகளிலே இருப்பதால் இந்த உலகத்திலே என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஹலால் ஹராமாக்கப்பட்டுள்ளது. ஹராம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளக் கூடிய மக்களாக நாம் இருக்கின்றோமே!! நிச்சயமாக இந்தக் கருத்துக்களை நாம் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்துவது இரண்டாவது விசயம். முதலில் கருத்து மாற்றம் அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். சிந்தனை மாற்றம் வர வேண்டும்.கருத்துப் புரட்சியை முடுக்கி விட வேண்டும். இந்தக் கருத்து எப்படிப் பேசப்பட வேண்டும், எப்படித் தாக்கம் விளைவிக்க வேண்டும் என்றால், தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு போகின்றார்கள் அல்லவா?! ஸலாம் சொன்னால் பதில் சொல்வதற்குக் கூட அவர்களுக்கு முடியாமல், அந்தக் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்கின்றார்கள் அல்லவா? அந்தளவுக்கு அந்தக் கிரிக்கெட் அவர்களது மூளையைத் தாக்கி இருக்கின்றது. அந்த மூளையை அந்த அளவு சலவை செய்திருக்கின்றதல்லவா? அந்த அளவுக்கு இந்த அடிப்படையான விசயங்கள் இந்த உலக மக்களிடையே பேசப்பட வைக்க வேண்டும். ஏன்? நம்மால் முடியவில்லை. அது தான் நம்மிடையே நிலவும் சில சூழ்நிலைகளினால் தாக்கமுற்று விடுகின்றோம். நம்முடைய அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம்.சமூகத்திலே மணமாகாத குமரிப் பெண்களுடைய விசயத்தைப் பற்றிப் பேசப்படும் பொழுது, எங்களது அடிப்படையான அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். வட்டியைப் பற்றிப் பேசும் பொழுது, அதற்கு அழுத்தம் கொடுத்து விட்டு, அடிப்படையான அகீதாவை மறந்து விடுகின்றோம். சமூகப் பிரச்னைகள் என்று வரும்பொழுது அதனைத் தீர்க்க ஓடுகின்றோம். அதனடியாகப் பின்பற்ற வேண்டிய அகீதாவை மறந்து விடுகின்றோம். அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். சகோதரர்களே! இது அழைப்புப் பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு அழகல்ல! உண்மையிலேயே அழைப்பாளர்கள் எந்தநிலையிலும் தங்களுடைய அடிப்படை விசயங்களிலிருந்து மாறிவிடக் கூடாது.அவர்கள் சமூக மாற்றத்தைக் கண்ணால் காணலாம். அல்லது காணாமலும் போகலாம்.ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய திருமறைக்கு விளக்கவுரையாக எழுதிய திருக்குர்ஆன் நிழலிலே என்னும் தப்ஸீரின் முன்னுரையிலே கூறுகின்றார்கள் - ஒரு அழைப்பாளன் தன்னுடைய ஆயுளால் இந்த அழைப்புப் பணியை வரையறுக்க முடியாது. எனது ஆயுளுக்குள் இஸ்லாமியக் கிலாபத்தைக் கண்டே ஆக வேண்டும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசை வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த ஆசை அனைவருக்கும் இருக்கத் தான் வேண்டும். அதனை நான் என்னுடைய வாழ்நாளிலே கண்டு தான் ஆக வேண்டும். இல்லை என்றால் அவற்றை நான் குறுக்கு வழியிலே கண்டு கொள்வேன் என்று நினைப்பதும், அதன் அடிப்படையில் செயல்படுவதும் கூடாது. எனவே இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த அடித்தளத்தைப் போடுவோம்.அந்த சுமையா, யாஸிர் தம்பதிகள் அவ்வாறு நினைத்தார்களா? இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? யாஸிர் (ரலி) அவர்களுக்கு அந்த இஸ்லாமிய ஆட்சியைக் காண முடிந்ததா? சகோதரர்களே! பத்ரிலும், உஹதிலும், அகழ் யுத்தத்திலும், ஷஹீதாகிப் போனார்களே! எத்தனையோ உத்தம ஸஹாபாக்கள்!! அவர்களெல்லாம் இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? சகோதரர்களே!! ஆனால், அவர்கள் அனைவரும் இந்த அடிப்படையான அகிதாவிலே நின்று கொண்டு. தங்களது ஆயுளிலே இந்த இஸ்லாமிய ஆட்சிக்கான, அந்த இஸ்லாமிய ஆட்சி உருவாகுவதற்கான தங்களது பங்களிப்பைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அத்தகைய பங்களிப்பை இந்த அழைப்புப் பணிக்கு வழங்கி விட்டுச் செல்வோம்.எனவே சகோதரர்களே! அரசியல் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக சேவை ரீதியாக, மாற்றம் வேண்டும் என்று யோசிக்கின்றவர்கள், எமது சமூகத்தைப் பீடித்திருக்கின்ற ஒழுக்கச் சீர்கேடுகள், நூதனங்கள், பித்அத்துக்களை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் - பித்அத்துக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே போன்று பொருளாதார மாற்றம் வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். ஒழுக்கம் மேம்பட வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். சமூகத்தில் ஏழை மக்களுடைய நிலமைகள், அவை தரமுயர்த்தப்பட வேண்டும். விரும்புகின்றோம். ஆனால், இதனை இந்த அடிப்படையை மறந்து விட்டு, அகீதாவை மறந்து விட்டு மனம் போன போக்கில் செல்வதையும், அகீதாவைப் புறக்கணித்து விட்டு நாங்களும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் தான் ஈடுபடுகின்றோம் என்று கூறப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அழைப்புப் பணியில் ஈடுபடுகின்ற நாம் ஒரு இறுதியான முடிவுக்கு வர வேண்டும். ஒரு உறுதியான முடிவுக்கு வர வேண்டும். அந்தத் தீர்மானத்திலே நாங்கள் இறுதி வரைக்கும் தடம் மாறாமல் இருக்க வேண்டும். அது முக்கியம்.அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடத்தில் ஒரு ஸஹாபி வந்து சொன்னார்கள். யா ராசூலுல்லாஹ்!! எனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஒரு விசயத்தைச் சொல்லித் தாருங்கள். அந்த விசயத்தைப் பற்றி இனி யாரிடமும் நான் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாத, அந்த அவசியத்தை ஏற்படுத்தாத அளவில் அந்த விசயத்தைப் பற்றி எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கேட்கின்றார்.قل أمنت بالله ثم الستقمஅல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று சொல். அதிலே உறுதியாக இருந்து கொள் என்று கூறுகின்றார்கள்.அதாவது அகீதாவிலே உறுதியாக இருந்து கொள். அதனை விட்டும் தடம் புரண்டு விடாதே என்று கூறுகின்றார்கள்.உனது அழைப்புப் பணியிலே எத்தனை பிரச்னை வந்தாலும், சமூகத் தீமைகள் குறுக்கிட்டாலும், அந்த அஸ்த்திவாரத்தின் மீது நின்று கொண்டு யோசி! சிந்தி! என்று தான் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இத்தகைய மனிதர்களுக்குத் தான் அந்த மலக்குமார்களின் சுபச் செய்தி இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் தான் எங்கள் ரப்பென்று கூறி, அதிலே உறுதியாக இருந்தார்கள் அல்லவா! அவர்கள் மரணிக்கின்ற வேளையில் மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் துக்கப்படவும் வேண்டாம். சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றுக் கொள்ளுங்கள். உலகத்திலும், மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு நேசர்களாக இருக்கின்றோம். உங்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் அந்த சொர்க்கத்திலிருந்து, அந்த அல்லாஹ்வின் விருந்தாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும். உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்று அந்த மலக்குகள் இத்தகையவர்களுக்கு சுபச் செய்தியைத் தெரிவிக்கின்றார்கள்.

Friday, February 22, 2013

இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!


இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!
 செங்கம் எஸ்.அன்வர்ஷா
o உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக, கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி!
o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை!
o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி!
"லோக்பால்" மசோதாவில் பிரதம மந்திரியையும் விசாரிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டுமெண்று இன்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்பவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியில் நாட்டின் கலீஃபாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனும் உண்மையை எவரும் கண்டுகொள்ள முடியும்.
இஸ்லாத்தில் நீதிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை எளியவர்களும் அச்சமின்றி நீதிமன்றத்தை அணுகி, எளிதில் சட்டப்படி தீர்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். சாதாரண குடிமகன் கூட நாட்டின் கலீஃபாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்! அதை கலீஃபாவும் குற்றமாக கருதியதில்லை. இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில், பொன்னெழுத்துக்களில் பதிய வைத்துள்ள பல நிகழ்ச்சிகளை இன்றும் உலகம் வியந்து பாராட்டுகிறது.
இஸ்லாமிய ஆட்சியில் கலீஃபாக்களும், பேரர்சர்களும் கட்டிக்காத்த நீதித்துறை தன் கடமையை குறைவின்றி செயலாற்றி வந்தது. நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட்டு, குர்ஆனின் கட்டளைகளையும், சுன்னத் வழிமுறைகளையும் கவனத்துடன் பின்பற்றி தீர்ப்புகளை வழங்கினர். அவற்றில் சிலவற்றையாவது நாம் அறிந்துகொள்வது அவசியமில்லையா?!

o உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி :
முதலாம் கலீஃபா ஹளரத் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி காலத்தில், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. கூஃபாவில் வசித்து வந்த "ஜமீலா" என்னும் பெண்ணை ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மணம் முடித்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் "ஆஸிம்" என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. தவிற்க முடியாத சில காரணங்களினால், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஜமீலா அவர்களை விவாகரத்து செய்து விட்டார்கள். அதன் பிறகு ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், மதீனா மாநகருக்கு குடியேறி விட்டார்கள். ஜமீலா அவர்கள் தன்னுடைய மகன் ஆஸிமுடன் கூஃபாவில் தங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கூஃபாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது, எதேச்சையாக தன் மகன் ஆஸிமை அங்கு பார்க்க நேர்ந்தது. பாச மிகுதியால் தன் குழந்தையை வாரி அணைத்து தன் குதிரையின் மீது தூக்கி உட்கார வைத்துக் கொண்டார்கள். தன்னுடைய குழந்தையை மதீனாவுக்கு அழைத்துச்செல்ல விரும்பினார்கள்.
செய்தி அறிந்த ஜமீலா அவர்கள் ஓடோடி அங்கு வந்து, ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் எக்காரணத்தைக்கொண்டும் தன் குழந்தையை அனுப்புவதற்கு மறுத்ததுடன், தன் குழந்தையை அவரிடமிருந்து பிடுங்கி எடுத்துக்கொள்ள முயற்சித்தார்கள். பாசப்பிணைப்பில் இருவரும் உறுதியாக இருந்ததால் வாக்குவாதம் முற்றி பிரச்சனை, அன்றைய கலீஃபா ஹளரத் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றுவிட்டது.
குழந்தை ஆஸிமின் இளம் வயதினை கருத்தில் கொண்டு ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக "குழந்தை அதன் தாயாருடன் தான் இருக்க வேண்டும்" என்று கலீஃபா அவர்கள் தீர்ப்பு அளித்தார்கள். தீர்ப்பை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை :
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஹளரத் அம்ரிப்னுல் ஆஸ்
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எகிப்தின் கவர்னராக இருந்தார். கிறிஸ்தவர் ஒருவர், எகிப்தின் கவர்னரின் மகனுக்கு எதிராக, மதீனாவில் இருந்த அமீருல் முஃமினீன், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடர்ந்தார்.
"கவர்னருடைய மகன் சாட்டையினால் தன்னுடைய முதுகுத்தோல் உரியும் அளவுக்கு அடித்து துன்புறுத்தினார். நீதி கேட்டு தங்களிடம் முறையீடு செய்ய வந்துள்ளேன்" என்று அந்த கிறிஸ்தவர் முறையிட்டார்.
"உம்மை எதற்காக அவர் அடித்தார்?" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க, "எகிப்து நகரின் வெளியில் குதிரை சவாரி பந்தயம் நடந்தது. இதில் என்னுடைய குதிரை வேகமாக ஓடி கவர்னரின் மகன் சவாரி செய்த குதிரையை பின்னடையச்செய்து வெற்றி பெற்று விட்டது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத கவர்னரின் மகன், என்னை சாட்டையினால் தாக்கினார்" என்று பதிலளித்த கிறிஸ்தவர், தன் சட்டையினைத்தூக்கி, காயம்பட்ட இடத்தைக் காட்டினார்.
இதைக்கேட்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த கோபத்துடன், "உமக்கு நீதி கிடைக்காதவரை, நான் வேறு எந்த வேலையையும் செய்யப்போவதில்லை" என்று உறுதியளித்தார்கள்.
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தன்னுடைய பணியாளர், முஹம்ம்து பின் முஸல்லமாவிடம் அவசரக் கடிதம் கொடுத்து எகிப்துக்கு அனுப்பி வைத்தார்கள். அதில், "எகிப்தின் கவர்னர், உடனடியாக மதீனாவுக்கு வரவேண்டும். ஒரு ஏழையின் உடலை கசையடியால் சல்லடையாக்கிய தங்கள் மகனையும் தங்களுடன் அழைத்து வரவும்" என்று கட்டளையிடப்பட்டிருந்தது. கடிதம் கிடைத்ததும், எகிப்தின் கவர்னரும், அவருடைய மகனும் உடனடியாக மதீனா மாநகரம் வந்து கலீஃபா முன் ஆஜரானார்கள்.
கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கிறிஸ்தவரையும் அங்கு வரவழைத்து, மூவரையும் கூண்டில் நிற்கும்படி கட்டளையிட்டார்கள். கலீஃபா அவர்கள், கிறிஸ்தவரை நோக்கி "நீங்கள் சுமத்தும் குற்றத்தை விளக்கமாகக் கூறவும்" என்று கூற உடனே அந்த கிறிஸ்தவர் குதிரை சவாரியின்போது நடந்த நிகழ்ச்சியை விவரித்தார்.
இதனைக் கேட்ட கவர்னரின் மகன் தலை தொங்கியபடியே குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதிர்ச்சியடைந்த கவர்னர் அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தன்னுடைய சாட்டையை எடுத்து ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நீட்டியபடியே, "அமீருல் முஃமினீன் அவர்களே! என்னுடைய சாட்டையினால் என் மகனுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டுங்கள்" என்று உணர்ச்சிபொங்க கேட்டுக்கொண்டார்.
அதற்கு கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "உமது சாட்டையைக் கொண்டு தண்டனை வழங்கப்பட வேண்டியிருந்தால், எகிப்திலேயே தண்டனை வழங்கும்படி செய்திருப்பேன். இப்போது உமது சாட்டைக்கும் அவசியமில்லை, எனது கரங்களுக்கும் வேலையில்லை. எனது சாட்டை, கிறிஸ்தவரின் கரங்களில் இருக்கும். தண்டனை பெறும் உடல் உமது அருமை மகனுடையதாக இருக்கும்!" என்று சொல்லியபடியே, தன்னுடைய சாட்டையை கிறிஸ்தவரிடம் கொடுத்து "அடியுங்கள், உங்களை எப்படி அடித்தாரோ அதைப் போலவே அடியுங்கள். உங்களை எப்படி இழிவு படுத்தினாரோ, அதே விதமாக இன்று அவரை இழிவுபடுத்துங்கள்" என்று அமீருல் முஃமினீன் கட்டளையிட்டார்கள்.
பழியைத் தீர்த்துக்கொள்ள தயாராகிவிட்ட கிறிஸ்தவர், சாட்டையினை தன்னுடைய கையில் பிடித்தபடியே, கவர்னரின் முன் வந்து நின்று கொண்டு, "அவர் என்னை கசையால் அடிக்கும்போது, எனது முதுகில் துணி இன்றி, வெற்று உடம்போடு இருந்தேன்" என்று கூறினார்.
இதைக் கேட்ட எகிப்தின் கவர்னர், உடனே தன் கைகளால், தன் மகனின் துணிகளை அகற்றினார். அதற்குப்பின்னரே அந்த கிறிஸ்தவர் தனது பழியைத் தீர்த்துக்கொண்டார்.
பழிக்குப்பழி தீர்த்துக்கொண்ட அந்த கிறிஸ்தவர், "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைகள் கூட நீதியும் நேர்மையும் கொண்டவர்கள் என்று யாரோ ஒருவர் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. அமீருல் ம்ஃமினீன் அவர்களே! தாங்கள் யாரிடம், அடிமையாக இருந்து இந்த நீதியும் நேர்மையும் கொண்ட புனித பாடத்தை கற்றுக்கொண்டீர்களோ என்னையும் அவருடைய அடிமையாக சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று உணர்ச்சி பொங்க கத்தினார்! அடுத்த நிமிடமே, அந்த கிறிஸ்தவர் இஸ்லாத்தை தழுவி விட்டார்.

o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி :
துருக்கி நாட்டின் சுல்தான்களில், சுல்தான் பாயஜித் மிகவும் புகழ் பெற்றவர்களில் ஒருவர். அவருடைய ஆட்சியில் ஷம்சுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நீதிபதி பதவியை கண்ணியத்துதுடன் அலங்கரித்து வந்தவர்கள். ஒருநாள், அவர் முன் வந்த வழக்கொன்றில் சுல்தான் பாயஜித் அவர்களே சாட்சியம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. சுல்தான் நீதிமன்றத்திற்கு ஆஜராகி சாட்சிசொல்ல முன்வந்தபோது அவரது சாட்சியத்தை நீதிபதி ஷம்சுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.
அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால், "தொழுகையை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழாதவருடைய சாட்சியம் அவ்வளவு வலுவானதக கருத முடியாது" என்பதுதான்! இதைக் கேட்டு, சுல்தான் பாயஜித் சிறிதும் கோபப்படவில்லை. நீதிபதி தன்னை அவமானப்படுத்தியதாகவும் கருதவில்லை. நீதிபதிக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இஸ்லாமிய ஆட்சியில் நீதித்துறையின் தீர்ப்புகள் இவ்வாராகத்தான் இருந்திருக்கின்றன.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் வகுக்கப்பட்ட நீதிநெறிகள், இறையருளால் போற்றி, பாதுகாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதன் காரணமாக நீதி நிலைநாட்டப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக சரித்திரக்குறிப்புகளில் காணலாம்.

''ஏகத்துவ முழக்கம்''

பக்தாதில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அடக்கமாகியிருக்கும் இடம்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ''ஏகத்துவ முழக்கம்''
[ o அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.
மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"
உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே.
o "அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் இவ்விரண்டையும் பின்பற்றாதவரை உனக்கு "இம்மை-மறுமை"யில் வெற்றி கிடையாது.
"அல்-குர்ஆன், அல்-ஹதீஸ்" இரண்டையும் உன் முன் வைத்துக்கொண்டு அவ்விரண்டிலும் ஆழ்மாக சிந்தனை செய்து அவ்விரண்டின்படி நீ செயல்படு. "அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்", இதில் இப்படி இருக்கிறது, அதில் அப்படி சொல்லியிருக்கிறது போன்ற உளறல்களைக் கொண்டு ஏமாந்து விடாதே.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி(யை) முறையினைப் பின்பற்றுங்கள்.. "பித்அத்"-ஐ உருவாக்காதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். மனமுரண்டு பிடிக்காதீர்கள். இறைவனை ஏகப்படுத்துங்கள். அவனுக்கு (யாரையும், எதனையும்) இணை வைக்காதீர்கள்.
o நாடியவுடன் எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அனைத்தையும் இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.
யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டனோ அவன் தான் பலமான கயிற்றை பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றானோ அவன் தண்ணீரை இறுகப்பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான். (முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ஃபத்ஹுர் ரப்பானி & ஃபுதூஹுல் ஃகைப்")
''இந்த ரபீ உல் ஆகிர் மாதத்தில் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயரால் மவ்லூதுகள் ஓதப்பட்டு வருகின்றன. இதில் வரம்பு மீறிய ஏராளமான ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன என்பதை அறிந்தும் பிடிவாதமாக மவ்லூதுகள் ஓதிவரும் ஆலிம்களும் மதரஸா மாணவர்களும்திருந்துவதற்கு அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக. வழிகாட்ட வேண்டியவர்களே வழிகெட்டுப் போகும்போது அல்லாஹ்விடம் முறையிடுவதைத்தவிர வேறென்ன வழி?! ஏனெனெனில் உள்ளங்களை புரட்டக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே.'' -adm.]
  முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி  
ஹிஜ்ரி 5 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட சீர்த்திருத்தவதிக்களில் முக்கியமானவர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
ஏகத்துவத்தை, தவ்ஹீதை உலகெங்கும் ஒளி பரப்பிய அவர்களின் போதனைகள் அத்தனையும் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் வாயிலாகவும் இறைநம்பிக்கையை உறுதியுடன் மனதில் இருத்திக்கொள்ள உந்துதல் சக்தியாகவும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் ஒளிவிளக்காகும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எழுதியுள்ள "ஃபுதூஹுல் ஃகைப்" எனும் நூல் பல உபதேசங்களை அடங்கிய பெட்டகம் என்று சொல்லலாம்.
நாம் செயல்பட இறைவேதமாம் அல்குர் ஆனைத்தவிர வேறு நெறி நூல் ஏதுமில்லை. நாம் பின்பற்றிச்செல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தவிர வேறெந்த நபியுமில்லை. அவ்விரண்டையும் விட்டுவிட்டு வேறெங்கும் சென்றுவிடாதீர்கள். அதைவிட்டு அப்பாற்பட்டு சென்றுவிட்டால் நாசமடைந்து விடுவாய். ஷைத்தானும், மனோஇச்சையும் உன்னை வழிகெடுத்துவிடுவர்.
"அல்குர்ஆன், அல் ஹதீஸ்" இரண்டையும் உன் முன் வைத்துக்கொண்டு அவ்விரண்டிலும் ஆழ்மாக சிந்தனை செய்து அவ்விரண்டின்படி நீ செயல்படு. "அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்", இதில் இப்படி இருக்கிறது, அதில் அப்படி சொல்லியிருக்கிறது போன்ற உளறல்களைக் கொண்டு ஏமாந்து விடாதே.
அல்-குர்ஆன், அல்-ஹதீஸுக்கு ஒத்திருந்தால் அதனி எடுத்துக்கொள். இல்லையேல் அதனை தூக்கி எறிந்துவிடு. ஏனெனில், "இத்தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரொ அதை வாங்கிக் (எடுத்துக்) கொள்ளுங்கள். எதைவிட்டும் உங்களை தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்." (அல்-குர்ஆன் 59 : 7) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்-குர்ஆன், அல்-ஹதீஸில்தான் ஈமானுக்கு (இறைநம்பிக்கைக்கு) பாதுகாப்பு இருக்கிறது. இவையிரண்டின் மூலமாகவே ஒரு மனிதன் இறைநேசராக ஆக முடியும்.
"அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் இவ்விரண்டையும் பின்பற்றாதவரை உனக்கு "இம்மை-மறுமை" யில் வெற்றி கிடையாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி(யை) முறையினைப் பின்பற்றுங்கள்.. "பித்அத்"-ஐ உருவாக்காதீர்கள். அல்லா ஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். மனமுரண்டு பிடிக்காதீர்கள். இறைவனை ஏகப்படுத்துங்கள். அவனுக்கு (யாரையும், எதனையும்) இணை வைக்காதீர்கள்.
நாடியவுடன் எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அனைத்தையும் இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.
நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், கொடுத்தல்-கொடுக்க மறுத்தல், வாழ்வு-மரணம், மதிப்பு-இழிவு, செல்வம்-வறுமை, இவை யாவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் மட்டுமே உள்ளன. (இந்த விபரங்கள் அனைத்தும் அவர்கள் எழுதிய "ஃபுதூஹுல் ஃகைப்" நூலில் அடங்கியுள்ளன.
''அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.
மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"
''உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே. யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டனோ அவன் தான் பலமான கயிற்றை பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றானோ அவன் தண்ணீரை இறுகப்பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான்.'' (முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ஃபத்ஹுர் ரப்பானி)
"அல்லாஹ்வையே வணங்க வேண்டும். வணக்கங்கள் எதுவாயினும் அது அல்லாஹ்விற்கு மட்டுமே. அதில் யாரையும், எதனையும் இணையாக்கிவிடக் கூடாது. அல்லாஹ்வை மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும். துன்பம் - துயரம் ஏற்படும் சமயத்தில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்க வேண்டும். மற்றெல்லஓரையும் விட அல்லாஹ்வே மிக மிக நெருக்கமாக, சமீபமாக இருக்கிறான். அவனே செவிமடுப்பவன். துன்பங்களை நீக்குபவன். நாடியவுடன் எதனையும் செய்பவன். உதவிகள் அல்லாஹ்விடமே கோரப்பட வேண்டும்..." என உபதேசம் செய்த இந்த இறைநேசரை முஸ்லிம்களில் ஒரு சாரார் அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தி வைத்து, அல்லாஹ்விடம் மட்டுமே கேட்டுப் பெற வேண்டிய உதவிகளை இவர்களிடம் கேட்கக்கூடிய மோசமான நிலை இன்றும் தொடர்கிறது.
அல்லாஹ்விற்கு மட்டுமே "நேர்ச்சை" எனும் வணக்கம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், சிலர் இவர்களின் பெநேர்ச்சையும் செய்கின்றனர்.
"ஜியாரத்" எனும் பெயரில் இவர்களின் மண்ணறையை (தவாஃப்) சுற்றி வருவது, அங்கே (இஃதிகாஃப்) தங்குவது போன்ற அனாச்சாரங்களை செய்து வருகின்றனர். இது மிகப்பெரும் தவறாகும். இது அவர்களின் உபதேசத்திற்கு முற்றிலும் மாற்றமானதாகும்.
அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் 27 குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்தார்கள். அவர்களில் 5 ஆண் பிள்ளைகளும் 22 பெண் குழந்தைகளும் அடங்குவர். இது அவர்கள் இல்லறத்தை இனிதாக அமைத்து வாழ்ந்ததற்கு உண்மையான சாட்சியாகும்.
தன்னுடைய கடைசி காலம் வரைகல்வியை போதிக்கும் ஆசானாகவே பணியாற்றினார்கள். இறுதியில் பாக்தாதிலேயே மரணமாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களின் மண்ணறையை சுவனப்பூங்காவாக ஆக்கிவைப்பானாக. இவர்கள் இந்தியாவிற்கோ, தமிழகத்திற்கோ வரவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
-மவ்லவி, F. ஜமால் பாகவி

Wednesday, February 20, 2013

சிலுவைப்போர் ஸ்டில் இஸ்லாம் PART -1



சிலுவை என்ன?

அவர்கள் நம்பிக்கை உத்தியோகபூர்வ தேவாலயத்தின் என்று வேறுபட்டன ஏனெனில் சிலுவை heretics எதிராக அல்லது வேறு வார்த்தைகளில், முஸ்லிம்கள் மேற்கு ஐரோப்பாவில் கத்தோலிக்க திருச்சபை மூலம் நடுத்தர வயது போது போராடியது. முதல் சிலுவை 1095 இல் போப் Orban இரண்டாவது தொடங்கப்பட்டது. இந்த கிரிஸ்துவர் தேவாலயத்தின் நீண்ட மற்றும் மிக பெரிய சிலுவைப்போர் மற்றும் 200 ஆண்டுகளில், இது முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமியம் எதிராக மத்திய கிழக்கு நடைபெற்றது நீடித்தது. வெளிப்படையான நோக்கம் கிரிஸ்துவர் வணங்கப்படும் மற்றும் அவர்களுக்கு யாத்திரை ஒரு இடம் இருந்தது, அது பாலஸ்தீன புனித நிலத்தை எடுத்து இருந்தது. போப் நில இன்ஃபிடல்ஸ் ', அவர்கள் முஸ்லிம்கள் என்று இது கட்டுப்படுத்தப்படும் என்று கூறினார். ஆனால் இன்னும் உள்ளார்ந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை இராணுவ பயம் மற்றும் இஸ்லாமியம் இறுதியில் ஐரோப்பா நுழைய என்று திகில் காரணமாக எப்போதும் விரிவடைந்து இஸ்லாமிய மாநிலம், தாக்க இருந்தது. ஏற்கனவே வியன்னா மற்றும் பிரான்ஸ் வாயில்கள் அடைந்தது, அதனால் சர்ச் தவிர்க்க முடியாமல் அச்சுறுத்தல் உணர்ந்தேன்.

சிலுவைப்போர் காய்ச்சல்

இடைக்காலத்தில் ஐரோப்பா போது முடியாட்சி, மத குருமார்கள் மற்றும் 'குதிரைகள்' கட்டுப்படுத்தப்படும் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகத்தின் இருந்தது. இந்த நேரத்தில் ஐரோப்பாவில் தேவாலயத்தில் upmost அதிகாரம் கொண்ட, தேவாலயத்தில் தலைவர் என்ற போப் மிகவும் சக்தி இருந்தது, அதனால் அவர் சமூகத்தில் அரசியல் ஆர்வம் இருந்தது. தேவாலயத்தின் ஆசை பகுதியாக அதன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த அங்கு சிலுவை. மத்திய கிழக்கில் இஸ்லாமியம் அழிக்க அழைப்பு நேரத்தில், போப் பைசண்டைன் பேரரசு (கிரேக்கம் மரபுவழி திருச்சபை கட்டுப்படுத்தப்படும்) ரோம் இருந்து, முஸ்லிம்களுக்கு எதிராக உதவி கோரி அந்த தேவாலயத்தில் அரசியல் நலன்களை மேலும் முடியும் என்று. சிலுவை அங்கு போராடிய வெற்றி பெற்றது என்றால், அது சர்ச் அரசியல் அதிகாரம் மற்றும் புவியியல் விரிவாக்கம் என்ன என்று.


ஐரோப்பா முழுவதும் "சிலுவைப்போர் ஃபீவர்" மூலம் உறைந்திருந்தது. இராணுவ துணிகர தேவாலயத்தில் வரையப்பட்டது இருந்த இஸ்லாமியம் பற்றிய கூறப்படும் பேய் மற்றும் அறியாமை முகத்தை எதிராக கிறித்துவம் உண்மையை இடையே மோதல் கருதப்பட்டது. இந்த பிரச்சாரம் குர்ஆன் நம்பகத்தன்மையை மற்றும் நபி இரண்டு குறித்துள்ளார் போலிகளிலும் இருந்த முஹம்மது (SAWW), sorcerery, சாத்தான்கள், தீய, மற்றும் பேகன் தாக்கி கொண்டுள்ளது. மேலும், நபி (SAWW) பாலியல் வரைமுறையற்ற மற்றும் கீழ்த்தரமான, ஒரு குடிகாரன், சூதாட்டக்காரர் மற்றும் pimp கருதப்பட்டது. இந்த கேடுகெட்ட புனைதல் இருந்து, சர்ச் ஆனால் தங்கள் அழகை உள்ள, அனைத்து முஸ்லிம்கள் தங்கள் நடத்தையில் மிருகங்கள் போல தான் மட்டும் அங்கு அளவிற்கு, despotic மற்றும் தீய என்று முடித்தார். எனவே மோசம் இந்த குற்றச்சாட்டுகள் இருந்தன, இன்னும் அவர்கள் அன்றியும் மற்றும் மக்கள் வரை lapped இருந்தது, மற்றும் முஸ்லீம் உலகில் தாக்குதல் நியாயம் சேர்க்கப்பட்டது. இந்த அடிப்படையில், குறிப்பாக ஓரியண்டலிஸம் அதன் வளர்ச்சி இருந்து மேற்கு மூலம் இஸ்லாமியம் நீண்ட மற்றும் தொடர்ச்சியான தாக்குதல், வேர்கள் மாறியது. ஆண்டுகள் கழித்து, சிலுவை பெரும் romanticisation, Chateaulri பொருள் மற்றும் பற்றி எழுத போது சிலுவை எப்படி

"சக்தி அவை தெரியும் மட்டும் இருந்து முஸ்லிம்கள் விடுவிக்க ஒளிமயமான கிரிஸ்துவர் முயற்சி."

இந்த மாறாக முஸ்லிம்கள் விட அறப்போரில் ஒரு படம் முரண்பாடாக துல்லியமாக உள்ளது.

இது திருச்சபை காரணம் ஆதரவை நிதி மற்றும் வலிந்து இழு போதுமான இருந்தது இஸ்லாமியம் மற்றும் முஸ்லிம்கள் மேல் மற்றும் ஒத்த சித்திரங்கள் பயன்படுத்தி பெற்றது என்று மத வெறி; தேவாலய கொஞ்சம் போர் தேவை என்று இராணுவ பெறுவதற்கான கவலை சிலுவை. மேலும் இந்த வெற்றிகரமாக ஒரு பொது எதிரிக்கு எதிராக அணிதிரண்டு ஐரோப்பிய நாடுகளில் மேலும் கிரிஸ்துவர் நிலையை வலுப்படுத்தும் போது வரலாற்றில் முதல் முறை ஒன்று. சர்ச் தான் நித்திய சொர்க்கத்தில் மற்றும் இறப்பு சத்தியம், மற்றும் 'காட்டுமிராண்டி' முஸ்லிம்களின் seething, குருட்டு வெறுப்பு, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து இருந்து குறிப்பாக ஐரோப்பா விட்டு குதிரைகள் மற்றும் விவசாயிகள் ஒரு வெகுஜன வெளியேற்றம், வெற்றி மற்றும் இரக்கமின்றி முஸ்லிம்கள் கொலை மற்றும் ஜெருசலேம் செல்ல இயக்கப்படுகிறது .


Blogger Wordpress Gadgets