Facebook Twitter RSS

Tuesday, March 05, 2013

Widgets

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வருவாய்





1. அன்ஃபால் மற்றும் கனாயிம்:


இவை இஸ்லாமிய அரசு போரின் மூலம் இறைநம்பிக்கையற்றோரிடமிருந்து கைப்பற்றியவையாகும். இவை பணமாகவோ ஆயுதங்களாகவோ அல்லது மற்ற பொருட்களாகவோ இருக்கலாம். அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,

“(நபியே!) அன்ஃபால்(போர் முனையில் கிடைத்த வெற்றிப்பொருட்கள்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்விற்கும் அவனது து}தருக்கும் உரியதாகும். (குர்ஆன் 8:1)

அல்லாஹ் மேலும் கூறுகிறான்,

“நிச்சயமாக நீங்கள்(போர் செய்து) வெற்றிப்பொருளாக அடைந்ததெதுவாயினும் நிச்சயமாக அதில் ஐந்திலொரு பங்கு அல்லாஹ்விற்கும்,(அவனுடைய) து}தருக்கும், அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும்” (குர்ஆன் 8:41)


முந்தைய காலங்களில் போரில்கைப்பற்றியவை தடுக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால் அவற்றை அல்லாஹ்(சுபு) தனது து}தர்(ஸல்) அவர்களுக்கு ஆகுமானதாக்கியிருக்கிறான். அபுஹ_ரைரா (ரழி), நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.

“உங்களுக்கு முந்தைய சமுதாயங்களுக்கு போரில் கைப்பற்றியவை தடுக்கப்பட்டதாக இருந்தன. வானத்தினின்றும் நெருப்பு வந்து அவர்களை விழுங்கிவிடும்.” மேலும் அவர்கள் கூறினார்கள் “முந்தைய நபிமார்கள் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து (பொருட்கள்) எனக்கு அருளப்பட்டுள்ளன… மற்றும் போரில் கைப்பற்றியவை எனக்கு ஆகுமானதாகும்.”

2. ஃபயீ(போரில் மிஞ்சியவை) :

போரோ, படையெடுப்போ எதுவுமின்றி இறைமறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றியவையாகும். (உதாரணம்: பானு நாதிரிலிருந்த யூதர்கள்). முஸ்லிம்களின் வருகையால் பயந்து பின்வாங்கியோர் விட்டுச்சென்ற சொத்துக்களும் முஸ்லிம்களின் வருகை கண்டு அஞ்சி தானே முன்வந்து கொடுத்த சொத்துக்களும் இதில் அடங்கும்.
(உதாரணம்: பதாக்கிலிருந்த யூதர்கள்).

“அவர்களிடமிருந்து அல்லாஹ் தன்னுடைய து}தருக்கு எதை மீட்டுக்கொடுத்தானோ அ(தைப் பெறுவத)ற்காக (விசுவாசிகளே!) நீங்கள் குதிரையையோ ஒட்டகத்தையோ ஓட்டவில்லை”(குர்ஆன் 59:6)

படைபலம் மூலமோ அமைதியான வழியிலோ கைப்பற்றப்பட்ட நிலங்களும், அதைத்தொடர்ந்த ஹரஜ், ஜிஸ்யா மற்றும் உசுர் ஆகியவையும் இப்பிரிவில் அடங்கும். இதைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

“(வெற்றிகொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து தன்து}தருக்காக அல்லாஹ் மீட்டுக் கொடுத்தானே அவை,(அவற்றில்) அல்லாஹ்விற்கும் (அவனுடைய) து}தருக்கும் அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக (அல்லாஹ் இவ்வாறு கட்டளையிட்டுள்ளான்)” (குர்ஆன் 59:7)



உமர் இப்ன்-அல்-கத்தாப் மேற்கண்ட குர்ஆன் ஆயத்தைப் பின்பற்றி இராக், அஷ்-ஷாம் மற்றும் எகிப்தில் கைப்பற்றிய நிலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஹரஜ் விதித்தார். மேலும் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் இதில் பங்கு உண்டு எனக் கூறினார்.
3. குமூஸ் :
இது போரில் கைப்பற்றியவற்றில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். அல்லாஹ் கூறுகிறான்.
“நிச்சயமாக நீங்கள்(போர் செய்து) வெற்றிப்பொருளாக அடைந்ததெதுவாயினும் நிச்சயமாக அதில் ஐந்திலொரு பங்கு அல்லாஹ்விற்கும்,(அவனுடைய) து}தருக்கும்,அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (குர்ஆன் 8:41)


ரசூலுல்லாஹ் ‘ஹ_ன்யான் யிலிருந்து திரும்பும்போது, ஒரு ஒட்டக முடியை எடுத்து கூறினார்கள்.
“போரில் மிஞ்சியவற்றில் ஐந்தில் ஒருபங்கு தவிர இந்த முடியளவுகூட எனக்கு உரியதல்ல. மேலும் அந்த ஒரு பங்கும் உங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.”
ரஸ}லுல்லாஹ்வின் காலத்தில், அந்த ஒரு பங்கு மேலும் ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டது. அவற்றில் ஒரு பங்கு, அல்லாஹ் மற்றும் அவனது து}தருக்காகவும், ஒரு பங்கு இறைத்து}தரின் குடும்பத்திற்காகவும், ஒரு பங்கு ஆதரவற்றோருக்காகவும், ஒரு பங்கு ஏழைகளுக்காகவும், ஒரு பங்கு பயணிகளுக்காகவும் செலவு செய்யப்பட்டது.
4. ஹரஜ் :
இது நில வரியாகும். படைபலம் மூலமோ, அமைதியான வழியிலோ, இறைமறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
ஹரஜ்-அல்-உன்வாஹ்: இது படைபலத்தால் இறை மறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றிய நிலத்தின் மீது விதிக்கப்படும் ஹரஜ்.(ஈராக், அல்-சாம், எகிப்து போன்ற பகுதிகளில் விதிக்கப்பட்டது ) இது குறித்து அல் குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
“(வெற்றிகொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து தன்து}தருக்காக அல்லாஹ் மீட்டுக் கொடுத்தானே அவை,(அவற்றில்) அல்லாஹ்விற்கும் (அவனுடைய) து}தருக்கும் அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக (அல்லாஹ் இவ்வாறு கட்டளையிட்டுள்ளான்) (குர்ஆன் 59:7)
உமர்-இப்ன்-அல்-கத்தாப், அவரது கால கட்டத்தில் நிலங்களை அளந்து மதிப்பீடு செய்யும் பொறுப்பை உத்மான்-இப்ன்-ஹனீஃப் வசம் ஒப்படைத்தார். அவ்வாறே செய்த உத்மான்-இப்ன்-ஹனீஃப், அந்நிலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஹரஜ் இனை விதித்தார். உமரும் அதை அங்கீகரித்தார். உமரின் மறைவிற்குமுன் அல்-குஃபாவின் மீது விதித்த ஹரஜ் மட்டும் 100மில்லியன்(10 கோடி) சேர்ந்ததாக குறிப்பு காணப்படுகிறது. ஒரு திர்ஹமின் மதிப்பு அக்காலத்தில் ஒரு மிஸ்கால்(4.68) தங்கத்திற்கு சமமாகும்.
ஹரஜ்-அல்-சுல்ஹ்: அமைதியான வழிகளில், பரஸ்பர ஒப்பந்தத்தின்மூலம் கையகப்படுத்திய நிலத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
5. ஜிஸ்யா:
முஸ்லிம் அல்லாதோரின் பாதுகாப்பிற்காக, அவர்களின் மீது அல்லாஹ்(சுபு) விதிக்கின்ற வரியாகும்.
6. பொது உடமைகள்:
இவை முன்பு குறிப்பிட்ட மூன்று வகையான பொதுச்சொத்துக்களாகும்.
7. அரசு உடமைகள்:
நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் அனைத்து பொது நல அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து பெறப்படும் வரியாகும்.
8. உசுர்(வழிபாட்டுத்தளங்கள் வரி) வழிபாட்டுதளங்கள் அமைந்துள்ள் நிலங்கள் மீது விதிக்கப்படும் வரியாகும்.
9. குலுல் வருவாய் :
அரசு அதிகாரிகள் பொது நல ஊழியர்கள் போன்றோரிடமிருந்து பெறப்படும் வருவாய். மேலும் சட்டத்திற்கு புரம்பான வழியில் சம்பாதித்தவற்றில் கைப்பற்றியவை, அபராதத்தொகை போன்றவையும் இப்பிரிவில் அடங்கும்.
10. பூமியிலிருந்து கிடைக்கும் தாதுக்கள், கனிமங்கள் போன்றவற்றில் ஐந்தில் ஒரு பங்கு.
11. யாருக்கும் சொந்தமல்லாத சொத்துகள்.
12. ஏமாற்றுப்பேர்வழிகள், சட்டத்திற்கு பயந்து மறைந்திருப்போரின் சொத்துக்கள்.
13. மற்றைய வரிகள்.
14. சதக்காஹ் மற்றும் ஸக்காத் வருவாய்கள்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets