Rabaa வில் பல்லாயிரக்கணக்கான எகிப்திய இஹ்வானிய ஆதரவாளர்கள் திரண்டு எகிப்திய இராணுவத்திற்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரபாவின் ஜாமியா மஸ்ஜித்தில் இந்த எதிர்ப்பார்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி எகிப்திய இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு பதின்மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் இராணுவ நிலையில் முர்ஸியின் படம் பொருந்திய புரட்சிக்கான அழைப்பு போஸ்டரை ஒட்ட முற்பட்ட போதே தலையில் சுடப்பட்டுள்ளார்.
கெய்ரோவில் உள்ள Republican Guard headquarters-ல் எகிப்திய முன்னாள் அதிபர் முர்ஸி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குடியரசு காவற் படையினரின் கட்டடத்தின் உள்ளே சடுதியாக வேட்டோலிகள் கேட்டுள்ளன. முர்ஸிக்கு இராணுவ கோர்ட் மூலம் மரண தண்டனையை சத்தமில்லாமல் நிறைவேற்றி விட்டார்களா என்ற அச்சமும் மெல்ல எழுந்துள்ளது.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அரச தொழலக்காட்சியில் தோன்றிய காபந்து அரசின் அதிபர் Adly Mansour பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
எகிப்திய தேசிய தொலைக்காட்சி Ahdem Mohammed Farid Mansour என்பவரை நாட்டின் புலனாய்வு துறை பொருப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாதாக அறிவித்துள்ளது. முர்ஸியால் நியமனம் செய்யப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் பலர் நீக்கப்பட்டு புதியவர்கள் அதற்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
எகிப்திய முன்னாள் அதிபர் முர்ஸியினால் பதவியுயர்வு வழங்கப்பட்ட முப்படை அதிகாரிகளையும் இராணுவ பின்னரங்க செயற்பாடுகளிற்கு மாற்றம் செய்துள்ளது புதிய அரசு. அத்துடன் சில அதிகாரிகள் மீது கோர்ட் மார்ஷலை பிரகடனம் செய்துள்ளது. அல்-இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் பல தலைவர்கள் மீது கொலை குற்றச்சாட்டுக்களும், கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்களும் அரசினால் இப்போது சுமத்தப்பட்டுள்ளது.
இஹ்வான்களிற்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் காலம் காலமாக வர்ணித்து வந்த புனித போரை தவிர !
No comments:
Post a Comment