Facebook Twitter RSS

Friday, August 03, 2012

Widgets

ஸுஜூது செய்து வெற்றியை கொண்டாடியா அஃலா அப்துல் காஸிம்!


Egypt's Alaaeldin Abouelkassem celebrates defeating Italy's Andrea

லண்டன்:ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான வாள் வீச்சில்(பென்சிங்) வெள்ளிப் பதக்கம் வென்ற அஃலா அப்துல் காஸிம் நிலத்தில் தலையை வைத்து இறைவனுக்கு சாஷ்டாங்கம்(ஸுஜூது) செய்து நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தனது வெற்றியைக் குறித்து அஃலா அப்துல் காஸிம் கூறியது: ‘காயம் மூலம் சிரமத்துடனேயே போட்டியில் கலந்துகொண்டேன். இல்லையெனில் தங்கம் வென்றிருப்பேன். அல்லாஹ் எனக்கு அளித்தது குறித்து திருப்தியடைகிறேன். அபிமானத்துடன் என்னால் எகிப்திற்கு திரும்ப முடியும். எனக்கு வெற்றியை அளித்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்’ என்று அஃலா தெரிவித்தார்.

மகன் விளையாட்டு அரங்கில் ஸுஜூது செய்வதை பார்த்து அழுதுவிட்டதாக அஃலாவின் தாயார் நஈமா முக்தார் மஸ்ஊத் கூறுகிறார்.
‘அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! எனது மகனுக்காக எப்பொழுதும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன். இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்றபொழுது எனது கவலை அதிகரித்தது. ஆனாலும், வெள்ளிப்பதக்கம் கிடைத்ததில் மகிழ்ச்சியே!’ என்றார் நஈமா முக்தா.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets