Facebook Twitter RSS

Tuesday, February 05, 2013

Widgets

ஆஃப்கனுக்கு ஆபத்து தாலிபானால் அல்ல வெளிநாட்டு சக்திகளிடமிருந்துதான்! – கர்சாய்!


ஆஃப்கனுக்கு ஆபத்து தாலிபானால் அல்ல வெளிநாட்டு சக்திகளிடமிருந்துதான்! – கர்சாய்!

ஆஃப்கானிஸ்தானுக்கு தாலிபான் அமைப்பால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டால் தான் ஆபத்துக்கள் அதிகமாகியுள்ளன என்று அந்நாட்டு அதிபரான ஹமித் கர்சாய் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் கார்டியன் பத்திரிக்கைக்கும், ஐடிவி தொலைக்கட்சிக்கும் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு ஆஃப்கானில் வெளிநாட்டு துருப்புக்கள் நுழையும் முன் பாதுகாப்பு நன்றாகத்தான் இருந்தது என்றும் பின்னர் அது குலைந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்க ராணுவம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஆஃப்கானை ஆக்கிரமித்து. அப்போது ஆட்சியில் இருந்த தாலிபானை விலக்கியது. அன்று முதல் ஆஃப்கான் பாதுக்காப்பற்ற சூழ்நிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets