Facebook Twitter RSS

Friday, February 08, 2013

Widgets

இஸ்லாம் உலகம் முழுவதற்கும் பொருந்திப் போகக்கூடிய மார்க்கம்


[ 1980-களில் என் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களால் நான் இறைவனை நோக்கித் திரும்பினேன். அதில் ஒன்று கிரிக்கெட். அந்த ஆட்டத்தில் நான் மாணவனாக இருந்த காரணத்தால், உண்மையில் நான் எதிர்பார்க்கும் வாய்ப்பு இறைவன் நாடியிருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று உணரத்தொடங்கினேன். அந்த நேரத்தில் இறைவனை நான் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு தெளிவாகவே இருந்தது.
திருக்குர்ஆன் முஸ்லிம்களை "தீவிரவாதிகள்" என்று அழைக்காமல் "நடுநிலையாளர்கள்" என்றே அழைக்கிறது. இறைத்தூதருக்கு, "மக்களிடம் சென்று இறைச் செய்திகளை சொன்னால் போதும்; மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்களா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை" என்று கூறப்பட்டது. எனவே அடுத்தவர் மீது உங்கள் கருத்தை திணிக்கலாமா எனும் கேள்விக்கே அங்கு இடமில்லை.
மிக மோசமான செயல், சில தனி நபர்கள் அல்லது குழுக்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக இஸ்லாத்தினைத் தங்கள் விருப்பம் போல் வளைத்துக் கொள்கிறார்கள்.
இன்றைய நாளில் இஸ்லாத்தில் சில கடமைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் நாடுகளும், மதத்தின் பேரால் மக்களின் உரிமைகளை மீறும் நாடுகளும்தான் இஸ்லாமிற்கு மோசமான விளம்பரங்கலைத் தருகின்றன. உண்மையில், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு கீழ்படியும் சமூகம்தான் விடுதலையடைந்த சமூகமாக இருக்க முடியும்.]
   கிழக்கும் மேற்கும் - இம்ரான் கான்  
காலனி ஆட்சிக்காலம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்தான் எனது தலைமுறை வளர்ந்தது வந்தது. எங்களுக்கு முன்பு இருந்த தலைமுறையினர் அடிமைகள் போல இருந்தனர். பிரிட்டிஷ்காரர்களைப் பார்த்து மிகப் பெரிய அளவில் தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தனர்.
நான் படிக்கப்போன பள்ளிக்கூடமும் பாக்கிஸ்தானின் சிறந்த பள்ளிக்கூடங்களில் ஒன்றுதான். நான் ஷேக்ஸ்பியர் படித்தேன். ஆனால் பாகிஸ்தானின் தேசிய கவியான அல்லாமா இக்பால் பற்றி படிக்கவில்லை. இஸ்லாமிய பாட வகுப்புகளை ஆர்வமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆங்கிலம் நன்றாக பேச வந்தாலும், மேற்கத்திய உடை அணிந்ததாலும், பாகிஸ்தானின் மேட்டுக்குடி சமூகத்தில் நானும் ஒருவன் என்று கருதிக்கொண்டேன்.
எனது கலாச்சாரம் பிற்போக்கானது, எனது மதம் காலத்துக்குப் பொருந்தாது என்று கருதி வந்தேன். மேற்கத்திய ஊடகங்களின் ஆதிக்கம் காரணமாக மேற்கத்திய திரை நட்சத்திரங்களும், பாப் பாடகர்களும் தான் எங்கள் நாயகன்கள். ஏற்கனவே இவற்றையெல்லாம் சுமந்து கொண்ட நிலையில்தான், நான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்குப் போனேன். ஆக்ஸ்ஃபோர்டில் இஸ்லாம் மட்டுமில்லாமல் எல்லா மதங்களையும் இக்காலத்துக்கு ஒத்து வராதவை என்று கருதப்பட்டது.
அறிவியல் மததத்தை வெளியேற்றி இருந்தது. தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியாத எந்தவொன்றும் இருக்க முடியாது. அசாத்திய திறமைகள் அனைத்தும் திரைப்படங்களில் சொல்லப்பட்டது. என்னைப்போன்றவர்கள் தூரமாகிச் செல்லக்காராண்ம, இஸ்லாத்தை போதித்த பெரும்பாலானவர்கள் மார்க்கத்தில் சிலதை மட்டும் பின்பற்றி வந்ததுதான். அவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. சமயத்தின் தத்துவத்தை விளக்குவதற்குப் பதிலாக சடங்குகளை அதிகமாக திணித்துக் கொண்டிருந்தனர்.
விலங்குகளைவிடவும் மனிதர்கள் மேம்பட்டவர்கள் என்பதை நான் உணர்கிறேன். விலங்குகள் ஒரேவிதமான செயலைத்தான் செய்யும். ஆனால், மனிதன் அப்படியில்லை. சிந்தித்துதான் செயல்படுவான். அதனால்தான் திருக்குர்ஆன் மனிதனிடன் "சிந்தித்து செயல்படு" என்கிறது. மிக மோசமான செயல், சில தனி நபர்கள் அல்லது குழுக்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக இஸ்லாத்தினைத் தங்கள் விருப்பம் போல் வளைத்துக் கொள்கிறார்கள்.
இருந்தாலும் நான் நாத்திகன் ஆகாமல் போனது ஆச்சரியம்தான். எனது குழந்தைப் பருவத்திலிருந்து என் தாயார் எனக்குள் இஸ்லாத்தை மிகத் தீவிரமாக போதித்து வந்ததுதான் காரணம். இதையொரு குறையாகச் சொல்லவில்லை. நான் என் தாயாரை அதிகம் நேசித்த காரணத்தால் முஸ்லிமாகவே இருந்துவிட்டேன்.
இருப்பினும், எனது இஸ்லாமும் தேர்வு அடிப்படையில் அமைந்ததுதான். இஸ்லாத்தில் எனக்கு தோதானதை மட்டும் எடுத்துக்கொண்டேன். தொழுகை கூட வெள்ளிக்கிழமைகளில், பெருநாள் நாட்களில், பின்னர் எப்பொழுதாவது... என் தந்தை வற்புறுத்தி பள்ளிவாசல்களுக்கு அழைத்துப் போகும்போது மட்டும் என்று சுருங்கிப் போனது.
பிற்காலத்தில் நான் உலகத்தரமான விளையாட்டு வீரனாக வளர்ந்து வந்தபோது எனது தலைமுறை கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மை படிப்படியாக நீங்கிச்சென்றது. இரண்டாவதாக இரண்டு கலாச்சாரங்களுக்கிடையில் தனிச்சிறப்பான நிலையில் இருந்தேன். இரண்டு சமூகங்களின் இணக்கமான சூழ்நிலையையும்; இணக்கமற்ற சூழ்நிலையையும் பார்க்கத் தொடங்கினேன்.
மேற்கத்திய சமூகத்தில் கல்வி நிறுவனங்கள் வலிமையாக இருந்தன. இருப்பினும், முன்னரும் இப்பொழுதும் நாம் உயர்ந்த தொரு நிலையில் இருப்பதற்கு நம் குடும்ப வாழ்க்கை முறையே காரணமாகும். இந்த குடும்ப வாழ்க்கை முறைதான் மேற்கத்திய மக்களின் மிகப்பெரிய வீழ்ச்சி என்று உணரத்தொடங்கினேன். மதகுருமார்களின் வன்முறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்கள் இறைவனையும்; மதத்தையும் விட்டும் கூட நீங்கிவிட்டனர்.
விஞ்ஞானம் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தாலும், அறிவியல் இரண்டு கேள்விகளுக்கு ஒருபோதும் பதில் அளிக்க முடியாது. ஒன்று, நாம் உயிர் வாழ்வதற்கான் காரணம் என்ன? இரண்டாவது நாம் மரணிக்கும்போது என்ன நடக்கும்?
இந்த வெற்றிடம்தான் கண்ணால் காணும் பொருளே உண்மை என்ற கோட்பாட்டிற்கும்; பேரின்பமான வேறொரு வாழ்க்கை உண்டு எனும் கோட்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை எனக்கு உணர்த்தியது.
இன்றுவரை, ஒழுக்கத்தின் அனைத்து அம்சங்களும் சமயங்களின் வழியாகத்தான் கிடைத்திருக்கின்றன.
"மக்கள் புரிந்துகொள்வதற்கு இவ்வுலகில் சில தடயங்கள் இருக்கின்றன" என்று குர்ஆன் சொல்வதைப் போன்று, 1980-களில் என் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களால் நான் இறைவனை நோக்கித் திரும்பினேன். அதில் ஒன்று கிரிக்கெட்.
அந்த ஆட்டத்தில் நான் மாணவனாக இருந்த காரணத்தால், உண்மையில் நான் எதிர்பார்க்கும் வாய்ப்பு இறைவன் நாடியிருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று உணரத்தொடங்கினேன். அந்த நேரத்தில் இறைவனை நான் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு தெளிவாகவே இருந்தது.
இஸ்லாம் பற்றிய எனது அறிவு மிகவும் குறைவானது என்பதால் அதற்கான ஆராய்ச்சியில் நான் ஈடுபடத் தொடங்கினேன். அது என் வாழ்க்கையில் மிகப்பெரிய அறிவொளி கிடைத்த காலம். பல அறிஞர்களின் நூலையும் திருக்குர்ஆனையும் படித்தேன். நான் கண்டுபிடித்த உண்மைகளை என்னளவில் சுருக்கமாகச் சொல்ல விழைகிறேன்.
அல்குர்ஆன் நம்பிக்கையாளர்களைப்பற்றிச் சொல்லும்பொழுது, "இறைநம்பிக்கையாளர்கள் நற்செயல்கள் புரிய வேண்டும்" என்று கூறும். மற்றொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால், ஒரு முஸ்லிமுக்கு இரண்டு கடமைகள் உள்ளன. ஒன்று, இறைவனுக்குச் செய்ய வேண்டியது; மற்றொன்று மனிதன் சக மனிதனுக்கும் சமூகத்துக்கும் செய்ய வேண்டியது.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் மனித இயல்புக்குறிய அம்சங்களில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன். இதுதான் எனக்குள் விளைந்த மிகப்பெரிய தாக்கமாகும். குர்ஆன் மனிதனின் பிடியிலிருந்து மனிதனை விடுவிக்கிறது. வாழ்வும் மரணமும், மதிப்பும் இழிவும் இறைவனின் நியதிக்கு உட்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுவதால் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் முன்பு தலைவணங்கி நிற்கத் தேவையில்லை.
நாம் சிறிது காலமே தங்கியிருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் முடிவற்ற ஒரு வாழ்க்கைக்கான தயாரிப்பில் இருக்கிறோம். மேற்குலகை வசைபாடிக்கொண்டிருப்பதைப் போன்ற பழைய நிலைகள், இவ்வுலக வாழ்வை மட்டுமே உண்மை என்ற நம்பிக்கை, கர்வம் எனும் சுய சிந்தனைகளை உடைத்துக் கொண்டு வெளியேறினேன். ஒரு மனிதன் உலக ஆசைகளை விட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை. அது நம்மை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக நமது நமது கட்டுப்பாட்டில் அதனை கொண்டுவர கற்றுக்கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய இறைநம்பிக்கையின் இரண்டாவது பகுதியை பின்பற்றியதால் நான் ஒரு நல்ல மனிதனாக மாறியிருக்கிறேன். சுயநலனை மையப்படுத்தியோ அல்லது எனக்கென்றோ வாழ்வதைக்காட்டிலும், இறைவன் எனக்கு ஏராளமாகக் கொடுத்திருக்கின்றான். பதிலாக, இறைவன் எனக்களித்திருக்கும் அருளை வறுமையில் உள்ளவர்களுக்காக உதவும் வகையில் திருப்பிவிடப் போகிறேன். இஸ்லாமிய அடிப்படைகளை பின்பற்றியதால் தான் நான் மத வெறியனாக மாறாமல் ஏழைகளுக்கு உதவக் கூடியவனாக மாறினேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
இறைவனின் விருப்பம் என்ற காரணத்தால் கடுமைக்குப் பதிலாக பணிவை நான் கற்றுக்கொண்டேன்.எல்லோரும் சமம் என்பதில் நான் நம்பிக்கை கொள்கிறேன். நம் சமூகத்தில் பலவீனர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைக்கண்டு அதிகமகாக கோபம் கொள்கிறேன். குர்ஆனின் அடிப்படையில், "அடக்குமுறை கொலையைவிட கொடுமையானது". அல்லாஹ்வின் விருப்பத்திற்கு நீ அடிபணிந்தால் உனக்கு மன அமைதி கிடைக்கும் என்ற இஸ்லாமின் உண்மையான அர்த்தத்தை நான் இப்போதுதான் புரிந்து கொண்டேன்.
இதற்குமுன் நாம் உணர்ந்திராத ஒரு சக்தி இருப்பதை உணர்கிறேன். அது என் வாழ்க்கைக்கான ஆற்றலைக் கொடுத்தது. நாம் இஸ்லாத்தின் சிலவற்றை மட்டுமே பின்பற்றுவதாக உணர்கிறேன். அதாவது, இறைவனை நம்புவது; வழிபாடு செய்வது மட்டுமே போதுமானது அல்ல. ஒருவர் நல்ல பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக குடிமக்களின் உரிமையைப் பாதுகாப்பதன் மூலமாகவும் ஆகும். சில ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம் நாடுகளைக்காட்டிலும் இஸ்லாமியப் பண்புகள் ஆழமாக இருப்பதாக உணர்கிறேன்.
உண்மையில் அங்கெல்லாம் மிகச் சிறப்பான தனி மனிதர் வாழ்வதாக நான் அறிகின்றேன். நான் அவர்களிடத்தில் வெறுப்பது தங்களது குடிமக்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பது அதேசமயம் மற்ற நாடுகளது குடிமக்களை அவர்களுக்குக்கீழான மக்களாகக் கருதும் இரட்டை வேடம்.
திருக்குர்ஆன் முஸ்லிம்களை "தீவிரவாதிகள்" என்று அழைக்காமல் "நடுநிலையாளர்கள்" என்றே அழைக்கிறது. இறைத்தூதருக்கு, "மக்களிடம் சென்று இறைச் செய்திகளை சொன்னால் போதும்; மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்களா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை" என்று கூறப்பட்டது. எனவே அடுத்தவர் மீது உங்கள் கருத்தை திணிக்கலாமா எனும் கேள்விக்கே அங்கு இடமில்லை. (-ஆனால் இன்றைய இஸ்லாமிய மதகுருமார்களின் செய்கைகள் இதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குத்தெரிந்த, தாங்கள் விளங்கியதை மக்களிடம் திணிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.)
இன்றைய நாளில் இஸ்லாத்தில் சில கடமைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் நாடுகளும், மதத்தின் பேரால் மக்களின் உரிமைகளை மீறும் நாடுகளும்தான் இஸ்லாமிற்கு மோசமான விளம்பரங்கலைத் தருகின்றன. உண்மையில், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு கீழ்படியும் சமூகம்தான் விடுதலையடைந்த சமூகமாக இருக்க முடியும்.
பாகிஸ்தானில் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டாடும் சமூகம் இஸ்லாத்தைப் படிக்கத் தொடங்கினால் பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்றவர்றை முறியடிக்க உதவுவது மட்டுமின்றி, இஸ்லாம் எத்தகைய உயர்வான மார்க்கம் என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும். மேற்குலக மக்களுக்கு இஸ்லாத்தினை எடுத்துச் சொல்லவும் முடியும். இஸ்லாத்திடமிருந்து மேற்குலக மக்களும் கற்றுக்கொள்ள முடியும் என்று சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இஸ்லாத்தினை வெளிப்படுத்தும் சிறந்த நிலையிலுள்ள சமூகம் அதன் வாழ்க்கை முறையை மேற்கத்திய பாணியில் அமைத்துக்கொண்டு இஸ்லாம் பிற்போக்கான சமயம் என்று கருதினால் எப்படி மேற்கத்திய மக்களிடம் இஸ்லாத்தினை எடுத்துச் சொல்ல முடியும்?
இஸ்லாம் உலகம் முழுவதற்கும் பொருந்திப் போகக்கூடிய மார்க்கம். அதனால்தான் நம்முடைய இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அகிலத்தின் அருட்கொடை" என்று அழைக்கப்படுகிறார்கள். அதன் உண்மையான தாத்பர்யத்தை முஸ்லிம்கள் உணர முயல வேண்டும்.
நன்றி: மில்லி கெஸட். தமிழி: ஜி.அத்தேஷ், சமநிலை சமுதாயம்.
இம்ரான் கான்: உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக்கொண்ட மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் புற்றுநோயின் காரணமாக இறந்த தன் தாயின் நினைவாக பாகிஸ்தானில் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனை கட்டியுள்ளார். அதுதான் பாக்கிஸ்தானின் முதல் புற்றுநோய் மருத்துவமனையும் கூட.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets