Facebook Twitter RSS

Tuesday, January 15, 2013

Widgets

அளவை மிஞ்சிய அநீதி மதானியின் பார்வையைப் பறித்து விட்டார்கள்...அளவை மிஞ்சிய அநீதி மதானியின் பார்வையைப் பறித்து விட்டார்கள்...

பெங்களூர் சிறையில் அடைப்பட்டு கிடக்கின்றார் நாசர் மதானி அவர்கள். K.P..சசி திரைப்பட தயாரிப்பாளர் அரசியல் விற்பன்னர். அண்மையில் அவர் எழுதிபல பத்திரிக்கைளிலும் வெளிவந்த செய்தி அறிக்கை ஒன்று அனைவரின் கண்களையும் கலக்கிற்று. அதனை இங்கே தருகின்றோம்.
நான் அப்துல் நாசர் மதானி அவர்களை பெங்களூர் சிறையில் சந்தித்தேன். அவர் பெங்களூர் குண்டு வெடிப்பு’ என்று அழைக்கப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய கண்களின் அமைதி என் இதயத்தில் பேரிடியாய் வீழ்ந்தது. அவருடைய கண்கள் பார்வையை வேகமாக இழந்து வருகின்றன. காரணம் போதிய அளவு மருத்துவம் அவருக்குக் கிடைக்கவில்லை
நான் பல முறை அவரை சந்தித்திருக்கின்றேன். அவரது கண்களின் கதை எனக்குத்தெரியும்
என்னைப் பொறுத்தவரை அவருடைய கண்கள் இஸ்லாமிய அபாயம் என்பதற்கும் மத சார்பின்மை கேரளாவில் எப்படிக் கடைப்பிடிக்கப் படுகின்றது என்பதற்கும் அத்தாட்சிகள்.
என்னால் அவருக்குச் சொல்ல முடிந்த ஆறுதல் எல்லாம் என்னைப் போன்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யமுடியும்இந்த கேள்விக்குநான் மட்டுந்தான் இந்த கதிக்கு ஆளாகி இருக்கின்றேன் என எண்ணாதீர்கள். ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பெற்று சிறையில் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கின்றார்கள். சில நேரங்களில் எனக்கு சிதறிய சிறிய ஆதரவுகள் அவ்வப்போது கிடைத்து விடுகின்றது.
 இதற்கோர் எடுத்துக்காட்டையும் எங்கள் கண்களின் முன்னாலேயே காட்டினார்கள். ஆமாம் அவருடைய தள்ளும் நாற்காலியைத் தள்ளிச் சென்று உதவிசெய்யும் ஒருவர் மூலம் ஜக்கரிய்யா என்பவரை எங்களுக்குக் காண்பித்தார். இந்த ஜக்கரிய்யா 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றான். இந்த ஜக்கரிய்யாவின் கதை இந்தியாவின் நீதித்துறையின் மிகவும் கேவலமான அத்தியாயம். அவனுக்கு ஏன் அவன் சிறையில் இருக்கின்றான் என்பது தெரியாது. சிறையில் தொடர்ந்து நடக்கும் கொடுமைகளால் அவன் உடலாலும் உள்ளத்தாலும் சிதைந்து போனான்.
அதேபோல் மதானியின் தள்ளும் நாற்காலியைத் தள்ளிச் செல்பவன்,ஏற்கனவே நடமாடும் பிணமாக ஆகிப் போனான். அவனுக்கும் போதிய மருந்து கிடைக்காததே காரணம் என நான் கேள்விப்பட்டேன். தொடர்ந்து கேரளாவிலுள்ளவர்கள் ஒரு வேளை அவருடைய மரணத்திற்காகக் காத்திருக்கின்றார் களோ என எண்ணிடத் தோன்றுகின்றது. அவர் இறந்தவுடன் அவர்கள் அவரை ஒரு பெரும் தியாகியாகக் காட்டி தங்கள் அரசியல் ஆட்டத்தை ஆடிடத் தொடங்கி விடுவார்கள்.
கோவை சிறையில் மதானியை 9 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சிறையில் வைத்த பின்பே அப்பாவி எனக் கண்டு பிடித்தார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளும் ஊடகங்கள் இவைதாம் மதானி மீது கற்பனை வழக்குகளைப் புனைவதற்குக் காரணம்.
நாமெல்லாம் ஜாண்லிலோன் என்பவரின் பாட்டு ஒன்றை மீண்டும் மீண்டும் பாடுவோம். அதிசயதக்க அளவில் மதானியும் நான் மட்டுமல்ல என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். அன்பார்ந்த வாசகர்களே! நம்புங்கள் நாசர் மதானியின் மேல் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய். புனையப்பட்டவை.
ஆனால் அவர் சிறைசித்திரவதை இவற்றாலேயே தான் இப்போது கண்களையும் சில காலம் கழித்து தன் உயிரையும் இழக்கப்போகிறார்.
கர்நாடகாவில் சிறைகளில் பல முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். ஆனால் இன்றளவும் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள்ஏன் சிறையிலடைக் கப்பட்டார்கள் என்பது அவர்களுக்கும் சொல்லப்படவில்லை. உலகுக்கும் தெரியாது. ஏன் அவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகளுக்கும் தெரியாது. காவல் துறையினர் கொண்டு வந்தார்கள். இவர் மீது சந்தேகம் இருக்கின்றது என்றார்கள். நீதிபதிகள் சிறையிலடைத்தார்கள்.
சங்க பரிவாரத்தவர்கள் அவரது கால்களை குண்டுவீசி கொய்தார்கள்.அரசு பரிவாரம் அவரது கண்களைப் பறித்தது காலப்போக்கில் உயிரையும் பறிப்பார்கள். காரணம் அவர் குற்றமற்றவர். ஆனால் முஸ்லிம்.
மதானிகள் ஜக்கரியாக்கள் இவர்களுக்கு வாழ்க்கை மரணத்திற்குப் பின்வரும் மறுமையில் தாம் வாழ்க்கை. அவர்களும் பூமிக்கு மேல் இருப்பதை விட பூமிக்கு கீழிருப்பதையே நாடுகின்றார்கள்.
அல்லாஹ் பிரகடனப் படுத்துகின்றான் உங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக மேலும் சாட்சிகள் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக நெருப்புக்குண்டங்களை உடையவர்கள் கொல்லப்பட்டனர்.
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக்குண்டம் அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது அல்லாஹ்வை நம்பி நின்ற மூமின்களை அவர்கள் நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை செய்தார்கள். அதற்கு அவர்களே சாட்சியாக இருந்தார்கள்.
அனைத்தையும் மிகைத்தவனும் புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கிடவில்லை.
வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
நிச்சயமாக எவர்கள் முஃமினான ஆண்களையும் முஃமினான பெண்களையும் துன்புறுத்திய பின்னர் தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு (அல்குர்ஆன் 85:1-10)
அல்லாஹ்விடமிருந்தே வந்தோம் அவனிடமே திரும்புவோம். நாசர் மதானி அவர்களுக்கு இதைவிட பெரிய நம்பிக்கையும் ஆறுதலும் வேறுஇல்லை!
                -எம்.ஜி.எம்

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets