Facebook Twitter RSS

Thursday, January 24, 2013

Widgets

எமது நெருப்பில் குளிர் காயும் எதிரி .'விஸ்வரூபம் '



இதுவரை நடந்தவை யாவும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடந்தது . இப்போது நடப்பவைகளும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடக்கின்றது . நேற்று 'துப்பாக்கியை ' தூக்கிப் பிடித்து இந்த உம்மத்தின் நியாயமான உணர்வுகளை விளம்பரமாக்கி இலாப கரமாக ஓட்டிய 'ரீல் ' இன்று 'விஸ்வரூபமாக ' தன்னை 'மெகா ஹிட் ' ரீலாக்க 'போஸ்டர்' ஓட்டத் தொடங்கியுள்ளது .
இஸ்லாத்தின் மீதான இறை நிராகரிப்பாளர்களின் காழ்ப்புணர்வுகள் இஸ்லாத்தின் வரலாற்றோடு தொடர்ந்தும் வந்துள்ளது . அந்த வகையில் முஹம்மத் (ஸல் ) அவர்களின் சந்ததியாகிய எம்மையும் அது தொடர்கின்றது . இந்த நிகழ்வுகளில் முஸ்லீம் உம்மாவின் எதிர் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு மீள் பரிசீலனை அவசியமானது . உண்மை என்னவென்றால் இந்த 'தாகூதிய ' சோழியர்கள் தமது துர்நாற்றமான குடுமியை ஆட்டுவதற்கு எமது கைகளையே எம்மை அறியாமல் பயன் படுத்துகின்றார்களா ? என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது .
இது தொடர்பில் வரலாற்றின் முன்னைய நிகழ்வுகளை நாம் எவ்வாறு எதிர் கொண்டோம் என்பதை வஹியின் வெளிச்சத்தில் சுன்னாவில் இருந்து வரையறுப்பது இந்த இடத்தில் மிக முக்கியமான பணி . ஆனால் இங்கு உணர்வுகளுக்கு அதி கூடிய முக்கியத்துவம் கொடுக்கும் போது
எதிரியின் கருத்துச் சுதந்திர 'சினைப்பர்' குறிக்கு நாமே நெற்றியை காட்டுவது போல் ஆகி விடாதா ?
'சாம் பாசில்' 'யூ டியூபில்' விட்ட அசிங்கமான குப்பை முஸ்லீம்களின் உள்ளங்களில் பயங்கரமான பூகம்பத்தை உண்டு பண்ண, ஒவ்வொரு முஸ்லிமும் கண்களில் கண்ணீரோடும் எதிர்க்கும் உணர்வோடும் வீதிக்கு இறங்கினார்கள் . அந்த மறக்க, மன்னிக்க முடியாத வலி மீது பிரான்சின் 'சார்லி ஹெப்டோ ' கார்டூன் தாக்குதல் நடத்தியது ! பின் 'பெல்ஜியம் , பின் பிரான்ஸ் என இந்த மீடியா தாக்குதல் தொடரும் வரிசையில் இந்தியாவும் 'துப்பாக்கியோடு ' தனது மீடியா 'பிஸ்டல் ' குழுவை களமிறக்கியது . உண்மையில் இந்தியாவின் சோசியல் மீடியா இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அவமானப் படுத்துவது இதுதான் முதற் தடவையல்ல . அந்த வரிசையில் இப்போது விடயம் 'விஸ்வரூபம் 'எடுத்துள்ளது .
காஸ்மீரையும் , பாகிஸ்தானையும் காட்டி தேசப்பற்று ரீல் விடும் இவர்களது வழமையான பணியை நாம் மறந்து விடக்கூடாது . 'இரத்தம் சொட்டும் கத்தி ' ,கீறிக் கிழிக்கப் பட்ட உடல்,இப்படிக்காட்டி சமூகப் பார்வையை திருப்புவதை விட முஸ்லிமின் உணர்வு என்ற 'செப்டரில்' , நிறைய இலாபம் இருப்பது முதலாளித்துவம் அனுபவித்த உண்மை . அது தொடர்கிறது .
எண்ணத்திலும் வழிமுரையிலும் சிலுவை சுமந்து உடையில் காவி உடுத்திய இந்த சண்டாளர்கள் கருத்துச் சுதந்திரம் எனும் போலித் தனத்தில் அரசியல் இராஜ தந்திர வலிமை அற்றிருக்கும் முஸ்லீம் உம்மத்தை சீண்டிப்பார்க்க நினைக்கிறார்கள் ! நாம் சாத் வீகமாக சென்றால் ஆர்ப்பாட்டம் , ஊர்வலம் ,மகஜர் ,மனு என சட்டத்தில் உள்ளிருந்தே 'போலிஸ்' பாதுகாப்போடு எமது எதிர்ப்பை ஜனநாயக முறையில் சொல்ல முடியுமாம் (எமது கருத்துச் சுதந்திரம் ) ! வன்முறையை செய்தால் அதே 'போலிஸ் ' 'என்கவுண்டர் ' பண்ணுமாம் ! சபாஸ் சரியான போட்டி என முதலாளித்துவ மேட்டுக்குடி பார்த்து ரசிக்குமாம் . இது அதிகாரம் கையில் இருக்கின்றது ; என்ற ஆணவம் தவிர வேறில்லை . அமெரிக்கா முதல் இந்தியா வரை இதுதான் நிலை .
சரி கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது என ? அவர்களிடம் கேட்டால் அதிலும் அவர்களது அப்பட்டமான செயல்களைச் ஆதாரத்தோடு சொல்லி அடிமடியில் யாராவது கைவைத்தால் ,பாவம் அவன் தனது கருத்துச் சுதந்திரத்தை சிறைச் சுவர்களுக்கு முன்னால் தான் சொல்ல முடியும் .
மேற்குக்கு ஒரு தாரிக் பின் சியாதும் , சிந்துவுக்கு ஒரு முஹம்மது பின் காசிமும் மீண்டும் வரவேண்டிய நியாயத்தை இந்த முஸ்லீம் உம்மா உணர்ந்து உழைக்காத வரை எமது போராட்டங்கள் எதிரியின் கட்டுப்பாட்டில் அவனது நியாயங்கள் சகிதம் தான் தொடரப் போகின்றது .
எமது நெருப்பில் எதிரி குளிர் காய்வான்
அவ்வளவுதான் 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets