United States Africa Command (USAFRICOM or AFRICOM). இந்த பெயர் இப்போது தான் மெல்ல ஆபிரிக்காவின் புளுதிக் காற்றோடு மணக்கிறது. ஆபிரிக்க விவகாரங்களிற்கான அமெரிக்காவின் சிறப்பு படைப்பிரிவு. ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் தனது கட்டளை மையத்தை கொண்டு இயங்குகிறது இந்த USAFRICOM. தலைமையகத்தின் பெயர் “கெல்லி பராக்ஸ்”. 57 ஆபிரிக்க நாடுகளை கண்காணிக்கும் அமெரிக்காவின் அதிகாரபூர்வ இராணுவ மையம். அந்த நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட குறுகியகால இராணுவ நடவடிக்கைகள், அந்த நாட்டு இராணுவங்களை புணரமைத்தல், பரஸ்பர இராணுவ பயற்ச்சிகள், ஆயுத விநியோகங்கள் என ஒரு அரசாங்கம் போலவே சில அரசியல் விவகாரங்கள் உள்ளடங்களாக இந்த மையம் தனது பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. என்ன எகிப்து மட்டும் இதற்கு விதிவிலக்கு. எகிப்தினுள் மூக்கை நுழைக்க முடியாதபடியினால் தான் ஜெஸ்மின் புரட்சியை உருவாக்கியது அமெரிக்கா. ஆனால் அதன் முடிவுகள் அது எதிர்பார்த்தது போல அமையவில்லை.
அமெரிக்கா என்றவுடன் வெள்ளை மாளிகையும், வோல்ட் டிஸ்னியும், ஹொலிவூட்டும் தான் எமக்கு நினைவிற்கு வரும். சவலட், ஜீ.எம்.சீ.கார்கள், அர்னால்ட் ஸ்வாஸிநேக்கர், ஐ.பீ.எம். கணனிகள், சீ.என்.என், டைம்ஸ், நியூஸ்வீக் பத்திரிகைகள் இப்படி சில தான் நாம் அமெரிக்கா பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பது. உலகை ஏப்பம் விட துடிக்கும் இந்த தேசத்தின் மறைகரங்கள் பற்றி நாம் அவ்வளவாக அறிவதில்லை. அறிவதற்கும் அக்கறைபடுவதில்லை. காரணம் அதன் ஊடக பயங்கரவாதம் செய்த மாயை எம் சிந்தனைகளை தன் கட்டுக்குள் வைத்திருப்பது. ஆனால் அந்த தேசமோ நேர்த்தியான முறையில் ஏகாதிபத்திய பின்னலை விரித்து கொண்டே செல்கிறது. தனது அதீத இராணுவ, தொழில்நுட்ப வல்லைமைகளால் இதனை அது சாத்தியப்படுத்துகிறது. அந்த வகையில் அதன் இராணுவ கரங்கள் பல ரூபங்களில் தன்னை உலகில் நிலைப்படுத்தியுள்ளது.
United States European Command (EUCOM) - ஐரோப்பிய கட்டளை மையம்
United States Central Command (USCENTCOM) - மத்தியகிழக்கு, மத்திய ஆசிய கட்டளை மையம்
United States Pacific Command (USPACOM) - பசிபிக் பிராந்திய கட்டளை மையம்
United States Africa Command (USAFRICOM) - ஆபிரிக்க கட்டளை மையம்
வளமிக்க ஆபிரிக்க நிலம் எனும் நவீன கொலம்பஸ் கனவுகளின் வெளிப்பாடே இதன் உருவாக்கம். லிபிய ஆட்சி கவிழ்ப்பு, அதற்கான சுதந்திர போராளிகளின் சண்டை, சோமாலிய கடற்கொள்ளையரை கட்டுப்படுத்தல், மாலி ஆட்சிலைய ஸ்திரப்படுத்தல், நைஜீரியா எனும் எண்ணை வளமிக்க தேசத்தின் கலகங்களை அடக்க உதவுதல், சூடானின் தென்பிராந்தியங்களில் அமைதி பணி (?) செய்தல் என அது உலகிற்கு தன்னை இப்படியெல்லாம் விளம்பரப்படுத்தியுள்ளது. ஆனால் பிரான்ஸும், பிரித்தானியாவும் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டலை மொத்தமாக தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வரும் நீண்ட கனவு இது..
இப்போது “வட ஆபிரிக்காவில் அல்-காய்தாவின் பிரசன்னம்” குறித்தும், இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்தும் அமெரிக்கா பேசியுள்ளது. இவற்றை இல்லாமல் செய்வதற்கான பணி தங்களுடையது எனவும் தார்மீக பொறுப்புக்கள் பற்றியும் பேசியுள்ளது. ஆபிரிக்க நாடுகளை இராணுவமயப்படுத்தல் என்ற இலக்கின் அடுத்த கட்டம் அந்த நாட்டு இராணுவத்துடன் இணைந்து சில இராணுவ நடடிக்கைகளில் ஈடுபடல் எனும் களத்தினுள் நுழைய தயாராகியுள்ளது அமெரிக்கா.
தனத கடற்படையின் சிறப்பு அதிரடிப்படை, தாக்குதல் ஹெலிகப்டர்கள், ட்ரொன் உளவு மற்றும் தாக்குதல் விமானம் போன்றவற்றின் துணையுடன் தனது ஆப்கானிஸ்தான் பாணியிலான செயற்பாட்டை ஆபிரிக்காவில் செயற்படுத்த தயாராகிவிட்டது அமெரிக்கா. அதீத பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாரிய படை பரம்பல் என்ற திட்டங்களை புறந்தள்ளி, தாக்குதல் அணிகளை ஆபிரிக்கா முழுவதும் நிலைகொள்ள வைத்தல், அதன் நிர்வாக, மற்றும் விநியோக, பாரமரித்தல் செலவுகளை அந்தந்த நாட்டு அரசுகளின் தலையில் கட்டுதல் என்ற திட்டத்துடன் இப்போது இந்த களம் திறக்கப்படவுள்ளது.
லிபியாவில் அமெரிக்கா நிகழ்த்திய பல சதிகளின் முக்கிய செயற்பாட்டாளர் இவர். சுதந்திர போராளிகளிற்கு ஆயுதம் வழங்கியது முதல் அமெரிக்காவின் ஆபிரிக்கா மீதான ஏகாதிபத்திய வல்லாதிக்க கனவிற்கு தடையாக இருந்த கேர்ணல் முஹம்மர் கடாபியின் மரணம் வரை இவரது பங்கு முக்கியமானது. இப்போது வாஷங்டன் போஸ்ட்டிற்கு வழங்கிய நேர்காணலில் ஆபிரிக்காவில் அமெரிக்க இராணுவ செயற்பாடுகள் பற்றி பிரஸ்தாபித்துள்ளார். இது சாதாரணமாக ஒரு இராணுவ ஜெனரலின் கருத்துக்கள் என்று கொள்வதனைவிடவும், அமெரிக்க அரசின் மறைமுக கருத்துக்கள் என்று கொள்வதே சரியானது.
லிபியாவின் சில நகரங்களில் அல்-கய்தா பயங்கரவாதிகளின் செல்வாக்குகள், அதிகரித்து வரும் அவர்களது ஆதரவுகள், மாலியில் அவர்கள் கைப்பற்றியுள்ள நிலைகள், சோமாலியாவில் அவர்களது பிரசன்னங்கள் போன்ற பல விடயங்களை விரிவாக விளக்கியுள்ள ஜெனரல் கார்ட்டர் இவற்றிற்கு எதிரான தனது வருங்கால நடவடிக்கைகள் பற்றியும் பேசியுள்ளார். அந்தந்த நாட்டு தேசிய இராணுவங்களுடன் ஒருங்கிணக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கைள் பற்றியதே அவரது பிரஸ்தாபத்தின் மையக்கரு.
ஆக மொத்தத்தில் இன்னொரு ட்ரோன் படுகொலை களம் ஆபிரிக்காவில் திறந்து விடப்பட வாய்ப்புக்கள் அதிகம். ஏதோ ஒன்றின் வால் யாரோ ஒருவின் வேட்டிக்கு உள்ளாக நீண்ட கதையாக ஆபிரிக்காவின் நிகழ்வுகள் மாறப்போவது தான் இன்றைய களம்....
No comments:
Post a Comment