Facebook Twitter RSS

Sunday, December 16, 2012

Widgets

PART:1அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம்





SOURCE : வைகறை வெளிச்சம் :

அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம்  


  •        அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது .
  •         உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறிவைத்துத்  தாக்கி வருகின்றது அமெரிக்கா .ஆனால்  அது தன் சொந்த நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதை தடுத்திட முடியவில்லை .
  •         அண்மையில்  அமெரிக்காவில் வெளியான ஆய்வு ஒன்று அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை தெளிவுபடுதிவுள்ளது .
  •  அந்த ஆய்வினை சுருக்கமாக பார்போம் !
  • அமெரிக்காவில் மத கணக்கெடுப்பு  US RELIGION CENSUS என்றோன்று ஆண்டு தோறும் நடைபெருகின்றது   இதனை அமெரிக்காவில் இயங்கும் நாதா அமைப்புகளை நடத்தி வருகின்றன .இதனை   ASSOCIATION   OF STATISTICATION  OF  AMERICAN  RELIGIOUS BODIES  (அமெரிக்க மதங்களின் புள்ளிவிபர கணக்காகயம் )என்ற அமைப்பு முன்னின்று ஏற்பாடு செய்து கொண்டிருகின்றது .
  • இவர்கள் இந்த புள்ளி விவரத்தை (ASSOCIATION OF RELIGION DATA ARCHIVES ) புள்ளி விபர குழுமத்தின் ஆவணக் காப்பகத்தில் வைத்து வருங்கின்றர்கள் .
  • இந்த வருடம் இந்தப் புள்ளிவிபரங்கள் மே ,1,2012 இல் வெளியிடப்பட்டன .
  • இதில் கடந்த பத்து வருடங்க்களாக அதாவது 2000மாவது ஆண்டில் எநதெந்த மதம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற கணக்கை சமர்பித்திருக்கின்றர்கள் .
  • 2000ம் ஆண்டில் அமெரிக்காவில் 10லட்சம்  முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள் .(1மில்லியன்).
  • 2010ம் ஆண்டில் 20லட்சத்து அறுபது ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருன்றாரகள் .இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் பூரவிகக்குட்டிகள்
  • அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி விகிதம் 66.77சதவிகிதம் .


ஏனைய மதங்கள் :


  •     அப்படியானால் ஏனைய மதங்களின் நிலைமை என்ன ?
  • மோர்மான்ஸ் MORMONS (இவர்கள் ஒரு தனி மதபிரிவினர் )+45.5%சதவிகிதம் அதாவது இவர்கள் தங்களது முந்தைய என்னிக்கையை விட 45.5% விழுக்காடுகள் வளர்ந்துள்ளர்கள் .


எவாங்கிளிக்கள் புரட்டன்ஸ்டேன்ஸ் :


  •     EVANGELICAL PROTESTANTS :+1.7% இவர்கள் கிருத்தவத்தின் ஒரு பிரிவு ஏனைய மத நமிக்கைகளோடு ஒப்பிட்டு பார்த்திடும் போது இவர்கள் தாம் மிகவும் பின் தங்கி நிற்கின்றார்கள் .
  • கத்தோலிக்க கிருத்தவர்கள் (-5.0%)    கத்தோலிக்க கிருத்தவர்கள்  ஜந்து சதவிகிதம் விழுக்காடுகள் எண்ணிக்கையில்  குறைந்திருக்கின்றார்கள் .அதாவது இந்த மதத்திலிருந்து  பலர் தங்களை விடுவித்துக் கொண்டுள்ளார்கள் .
  •   பொதுவான புரட்டஸ்டான்ட்  main line pnotestant  -12.8% இதனை மிகப்பெரிய  வீழ்ச்சி என்கின்றார்கள் பார்வையாளர்கள் .


இஸ்லாத்தைச் சுற்றி எல்லாம் :


  • கென்டுக்கி பல்கலைகழகத்தின் பேராசிரியர் Kentucky university  பேக்பை Bagby என்பவர் அமெரிக்காவில் இஸ்லாமிய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருபவர் .
  • இதனால்     இவர்   ISLAMIC STUDIES இஸ்லாமியக் கல்வியை  தனது  சிறப்புத் துறையாக ஆக்கிக் கொண்டவர் .இவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 2000ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 1000 மஸ்ஜித் பள்ளிவாசல்கள்  மட்டுமே இருந்தன . ஆனால் இப்பொது 2010இல் 2106 மச்ஜித்துக்கள் பள்ளிவாசல்களை இருக்கன்றன என்று கூரிவுள்ளார்கள் .இது அமெரிக்காவைப் பொருத்தவரை இஸ்லாத்தின் மிகப் பெரிய வளர்ச்சி எங்கிறார் .
  • அமெரிக்காவில் எங்கே பார்த்தாலும் மெகா மாஸ்கஸ்  (MEGA  MOSQUES) என்ற பெரிய  மஸ்ஜித்களே  நிர்மாணிக்கப்படுகின்றன . இந்தப் பள்ளிவாசல்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நிரம்பி வழிகின்றன .இதுவும் கென்டுக்கி பல்கலைக் கழகப் பேராசிரியரின் அறிக்கையின் வெளிவந்த உண்மை  அமெரிக்கா டுடே பத்திரிக்கையின் அறிக்கை .
  •  அமெரிக்காவின் ஆய்வுபூர்வமான பத்திரிக்கைகளுள் ஒன்று USA TODAY .
  • இந்தப் பத்திரிகை மத்திய அமெரிக்காவின் முக்கிய பகுதியான ஆர்லாண்டோஸ் ஆரஞச் கன்டரி-இல் (ORLANDO'S  ORANGE  COUNTRY )இஸ்லாத்தின் வளர்ச்சி 473 விழுக்காடுகள் எனக்  குறிப்பிடுக்கின்றது .
  • இதற்கு புதிதாக இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்ட 10,000 பத்தாயிரம் முஸ்லிம்கள் தாம் காரணம் என்கின்றது         
                         இன்ஷா அல்லாஹ்  அடுத்த கட்டுரை இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கிய கரணம் 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets