“இரசாயன ஆயுதங்கள்”. இந்த வார்த்தை முன்பு ஈராக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்ததத்தின் போது தொடராக செய்யப்பட்ட பிரச்சாரம். அதற்கு முன்னரும் லிபியாவை ஆக்கிரமிக்க இதே “இரசாயன ஆயுதங்கள்” எனும் பூதமே அமெரிக்காவிற்கு துணை நின்றது. இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக மனித பேரழிவு ஆயுதமாக வருணிக்கப்படும் “இரசாயன ஆயுதங்கள்” எனும் பிரச்சார யுத்தத்தை அமெரிக்கா இப்போது சிரியாவைின் மேல் நடாத்த ஆரம்பித்துள்ளது. சட்டவிரோத தேசமான இஸ்ரேல் கூட இதே இரசாயன ஆயுதங்களை வைத்துள்ளது. அண்மைய காஸா மீதான தாக்குதலின் போதும் கூட கொத்து குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் இஸ்ரேல் பலஸ்தீனர்கள் மீது பயன்படுத்தியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை சாஸனத்தில் இவை தடை செய்யப்பட்ட ஆயுதங்கள்.
துருக்கிய சிரிய எல்லைக்கு அண்மையில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் நேட்டோவின் டச்சு படைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு நகர்த்தப்பட்டமைக்கான காரணமாக அமெரிக்கா சொல்லவிருப்பது “இரசாயன ஆயுதங்கள்” பற்றியது.
சிரியா ஏற்கனவே தனது ஏவுகணை தொகுதியை துருக்கியை நோக்கி தயார் நிலையில் வைத்திருப்பதாக செய்திகள் வந்திருந்தன. இப்போது துருக்கிய எல்லையில் இந்த இராணுவத்தினர் பற்றியட் ஏவுகணை தொகுதிகளை அமைத்து வருகின்றனர். MIM-104 Patriot surface-to-air missile system.
யூ.எஸ். பாதுகாப்பு செயலர் லியோன் பெனேட்டா வியாழக்கிழமை சொல்லியதாக புலனாய்வு தகவல்கள் வெளிவந்திருந்தன. அஸாத்தின் அரசு தங்களை தற்காத்து கொள்ளும் இறுதி நிலையில் போராளிகள் மீது இரசாயன தாக்குதலை நடாத்த தீர்மானித்துள்ளார்கள் என்பதே அது.
சிரியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் பைஸல் மிக்தாத், லெபனானின் பிரபல டெலிவிஷனும், ஹிஸ்புல்லாக்களினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதுமான “அல் மனார்” தொலைக்காட்சிக்கு தெரிவித்த கருத்தில் “எங்களிடம் இரசாயன ஆயுதங்கள் உண்டு. அது தாயர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு போதும் அதனை பொது மக்கள் மீது பயன்படுத்த மாட்டோம். அப்படி பயன்படுத்தினால் அது தற்கொலைக்கு சமனாகும்” என தெரிவித்துள்ளார்.
இரண்டு விடயங்கள் தெளிவாக தெரிகின்றன. முதலாவது, அஸாதிய இராணுவம் இரசாயன தாக்குதல்களை நடாத்த தயார் படுத்தப்பட்டுள்ளன என்பது. மற்றையது சுதந்திர போராளிகள் என மேற்கினது ஆசீர்வாதத்துடன் இயங்கும் போராளி குழுக்களும் இரசாயன ஆயுத வளங்களை கொண்டிருப்பதுடன் அதை பயன்படுத்த பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதாகும். thanks khaibarthalam
No comments:
Post a Comment