சேலம்: விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்பத்தில் 40 பேர் பலியாகினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளை சோதனையிடவும், லைசென்ஸ் பெறப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டது. விதிமுறையை மீறி செயல்படும் பட்டாசு ஆலையின் உரிமைத்தை ரத்து செய்யும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள செங்காட்டூர் பிரிவு கரட்டுப்பகுதியில் 2 கட்டிடங்களில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 7 பேர் பலியாகியுள்ளனர். இது அதிகாரிகளின் சோதனையில் தப்பிய லைசென்ஸ் இல்லாத ஆலை என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் லைசென்சுடன் இயங்கிய இந்த ஆலைக்கு தற்போது வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால், நடப்பாண் டுக்கு அனுமதி பெறாமலேயே ஆலை செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலை சேலம்&மேட்டூர் மெயின் ரோட்டில் செங்காட்டூர் பிரிவு சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் மறைவான இடத்தில் அமைந்துள்ளது. மேச்சேரியை அடுத்துள்ள உப்புபள்ளத்தில் மற்றொரு பட்டாசு ஆலையை சாந்தி நடத்தி வந்துள்ளார். இதில் உப்புபள்ளத்தில் உள்ள ஆலைக்கு மட்டுமே அவர் முறையாக லைசென்ஸ் பெற விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்து பகுதியை பார்வையிட வந்த மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம் இதுபற்றி கேட்டபோது, ‘இந்த பட்டாசு ஆலைக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அதனால் இது லைசென்ஸ் ஆலை தான்,‘ எனக் கூறினார். தனியார் பட்டாசு ஆலைக்கு 15 கிலோ வெடி மருந்தை பயன்படுத்த மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆனால் இந்த ஆலையில் சுமார் 100 கிலோ அளவுக்கு வெடி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் விபத்து ஏற்பட்டதும் 2 கட்டங்களும் தரைமட்டமாகியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன வெங்கடேசனிடம் கேட்டபோது, ‘விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு லைசென்ஸ் புதுப்பிப்புக்கு கடந்த 31.3.2012 தேதியில் விண்ணப்பம் வந்துள்ளது. அதற்கான பணமும் கட்டப்பட்டுள்ளது. ஆலையை போலீ சாரும், வருவாய்துறையின ரும் இணைந்து சோதனை நடத்தினர். எப்படியோ தற்போது விபத்து ஏற்பட்டு விட்டது,‘ என்றார். பட்டாசு ஆலையை புதுப்பிக்க கடந்த மார்ச் மாதம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 9 மாதமாக அந்த புதுப்பிப்பு விண்ணப்பம் கிடப்பில் கிடந்துள்ளது. புதுப்பிப்பு அனுமதியை அதிகாரிகள் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் சோதனை நடத்தி, ஆலையை மூடியிருந்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்காது.எஸ்பி பேட்டி: அஸ்வின் கோட்னீஸ் கூறுகையில், ‘‘விரிவான விசாரணையை மேற்கொள்வதால், விபத்து குறித்து முழுவிவரம் தெரியவரும்,‘‘ என்றார்.
குடும்பமே பலியான சோகம்
வெடி விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையை நடத்தி வந்தவர் சரவணன். இவர் மேச்சேரி உப்புபள்ளத்தில் மற்றொரு பட்டாசு ஆலையை நடத்தி வந்துள்ளார். அதில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி சரவணன் உடல் சிதறி பலியானார். அதன்பின் தற்போது நேற்று நடந்த செங்காட்டூர் பிரிவு கரட்டு பட்டாசு ஆலை வெடி விபத்தில் அவரது மனைவி சாந்தி, மகன் சூர்யா பலியாகியுள்ளனர். அவரது மகள் அம்மு மட்டுமே தப்பியுள்ளார். பட்டாசு விபத்துகளில் குடும்பமே பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment