குவைத்-சிட்டி:குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF) நடத்தும் “ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்க விழா 30/03/2012 அன்று மங்காஃப் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பிரச்சாரம் 30/03/2012 முதல் 30/04/2012 வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், கன்னடம், இங்கிலீஷ், உருது என 5 மொழிகளில் ஆரோக்கியம் சம்பந்தமான புத்தகம் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் சகோ.சைபுதீன் மௌலவி ஆரோக்கியம் குறித்த உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் “தனிமனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனில் நாம் கவனம் செலுத்துவது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதது. நம்மில் பலருக்கு ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்ச்சி இல்லை அவ்வாறு ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்ச்சி வழி வாழ முயற்சியும் இல்லை. பெரும்பாலானவர்கள் மருந்து மாத்திரைகளை உட்கொண்ட பிறகு தான் தினசரி அலுவல்களையே தொடங்குகிறார்கள்” என்று நம் நமது ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை விவரித்தார்.
மேலும் உடற்பயிற்சியின் செய்முறை விளக்கங்களை சகோதரர் ஷம்நாத் விளக்கி கூறினார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அதன் பிறகு நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட்டது. மாராத்தான் போட்டியும் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment