டெஹ்ரான்:ஆறு பெரிய நாடுகளுடன் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையின் இடத்தை குறித்த விவாதம் நீடிக்கிறது. துருக்கிக்கு பதிலாக மூன்று ஐரோப்பிய நாடுகளில் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்ற மேற்கத்திய நாடுகளின் பரிந்துரையை ஈரான் நிராகரித்துவிட்டது.
துருக்கியில் அணுசக்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுப்பு தெரிவித்திருந்தது. சீனா மற்றும் ஈராக்கை ஈரான் பரிந்துரைத்தது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான நார்வே, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஆகிய நாடுகளை மேற்கத்திய நாடுகள் பரிந்துரைத்தன. இதனை ஈரான் நிராகரித்துவிட்டதாக ஃபார்ஸ் நியூஸ் ஏஜன்சி கூறுகிறது.
சிரியா விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான போக்கை கையாளுவதும், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை குறைத்ததும் துருக்கி மீது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment