Facebook Twitter RSS

Latest News

Friday, February 24, 2012

கோவா கடற்கரை இஸ்ரேலியர்கள்-ரஷ்யர்களால் ஆக்கிரமிப்பு !


பனாஜி : இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கோவாவின் கடற்கரை கிராமங்களை இஸ்ரேலியர்கள் மற்றும் ரஷ்யர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்நிலை தொடர்வது அபாயகரமானது என்றும் இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் சாந்தாராம் நாயக் கூறினார்.
”கோவாவின் சில கடற்கரை கிராமங்களை ரஷ்யர்களும் இஸ்ரேலியர்களும் முழுமையாய் ஆக்கிரமித்துள்ளனர்
. இது ஆரோக்கியமான சுற்றுலா அல்ல. ஏனென்றால் அப்பகுதி முழுவதையும் அவர்கள் பெரும் பணம் கொடுத்து தங்கள் வயப்படுத்தியுள்ளதோடு நம் நாட்டின் சட்டங்களுக்கு முரணாக பல்வேறு பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்” என்றார் சாந்தாராம் நாயக்.
கோவாவின் விலை மதிப்பில்லா இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிய நாயக் எந்த கோவாவின் கிராமமும் இந்திய கிராமமாக இருக்க வேண்டுமே தவிர இஸ்ரேலிய கிராமம் அல்லது ரஷ்யன் கிராமம் என்று அழைக்கப்படும் நிலை உருவாக கூடாது என்றார்.
thanks to asiananban.blogspot.com

ஆறு ஐரோப்பிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்படும் – ஈரான் அறிவிப்பு !


Oil price climbs on fear Iran may stop more oil
டெஹ்ரான்:பகைமை கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்தால் ஆறு ஐரோப்பிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஸ்பெயின், நெதர்லாந்து,க்ரீஸ், ஜெர்மனி,இத்தாலி, போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த ஆலோசித்து வருவதாக ஈரானின் எண்ணெய்
துறை இணை அமைச்சர் அஹ்மத் கலபானி கூறியுள்ளார்.
தடை நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் இந்த நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்படும்.
‘எங்களின் நடவடிக்கை எதிர்காலத்தில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 150 டாலரை எட்ட காரணமாகும்’ என்று ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் எம்.டியுமான கலபானி கூறியுள்ளார்.
பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் எண்ணெய் வழங்குவதில்லை என்று ஈரான் முன்னரே அறிவித்திருந்தது. ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இவ்வருடம் ஜூலையில் நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ள நிலையில் ஈரான் தனது நடவடிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
திங்கள் கிழமை ஈரானின் அறிவிப்பிற்கு பிறகு ஆசிய எண்ணெய் வியாபார விலை ஒன்பது மாதங்களிடையே மிகவும் உயர்ந்து காணப்பட்டது. பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் ஐரோப்பாவிற்கு ஈரானின் அறிவிப்பு பலத்த அடியாக கருதப்படுகிறது.
thanks to asiananban.blogspot.com

ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு படைகளின் அட்டகாசம்!...

புனித குர்ஆன்       
எரிப்பு !....
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க விமானப்படைத்தளமொன்றில் இஸ்லாமிய புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டமை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காபூல் நகரில் இன்று செவ்வாய்கிழமை பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. சுமார் 2000-2500 பேர் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர். 

தலைநகர் காபூலுக்கு வடக்கிலுள்ள பக்ரம் இப்படைத்தளத்தில் குர்ஆன் மற்றும் இஸ்
லாமிய மத பிரசுரங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையைச் சேர்ந்த சிப்பாய்கள் இருவரால் குப்பை அழிக்கப்படும் இடமொன்றுக்கு கொண்டு செல்வத்றகாக குப்பைகளுடன் சேர்த்து இந்நூல்களையும் ட்ரக் ஒன்றில் நேற்றிரவு ஏற்றிச்செல்லப்பட்டதாகவும் பின்னர் அங்கிருந்த ஆப்கான் ஊழியர்கள் இருவர் சமய நூல்கள் இருப்பதைக் கண்டு அழிப்பு நடவடிக்கையை நிறுத்தியதாகவும் மேற்படி தளம் அமைந்துள்ள பர்வான் மாகாண சபைத் தலைவர் அஹமட் ஸக்கி ஸஹீட் தெரிவித்துள்ளார். 

30 புனித குர்ஆன் பிரதிகள் மற்றும் சமய நூல்கள் அழிக்கப்படாமல் அமெரிக்க அதிகாரிகளால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அஹமட் ஸக்கி கூறினார். அந்நூல்களில் சில எரிந்திருந்தன, சில நூல்கள் எரிந்திருக்கவில்லை எனவும் மேற்படி நூல்கள் அம்முகாமில் முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களால் பயன்படுத்தப்பட்டவை எனவும் அவர் கூறினார். 

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானிலுள்ள சர்வதேச துருப்புகளின் தளபதியான அமெரிக்க ஜெனரல் ஜோன் அலன் கூறியுள்ளார். குர் ஆன் உட்பட பெரும் எண்ணிக்கையான இஸ்லாமிய மத நூல்கள் முறையற்றவிதமாக அழிக்கப்பட்டதாக தமக்கு நேற்றிரவு அறிக்கை கிடைத்தாக அவர் தெரிவித்தார்.

'இது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் இவ்வாறு நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது (குர் ஆன் எரிப்பு) எந்த வகையிலும் வேண்டுமென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல என்று நான் உத்தரவாதப்படுத்துகிறேன், உறுதியளிக்கிறேன்' என அவர் கூறினார்.
thansk to qahtaninfo.blogspot.

பிரான்சு, பிரிட்டன் – இனி எண்ணெய் இல்லை – ஈரான்!


Iran says it's cutting oil exports to France, Britain
டெஹ்ரான்:ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பலத்த பதிலடியை கொடுக்கும் விதமாக பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதை முற்றிலும் நிறுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு இனி சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயை வழங்கமாட்டோம் என்றும், இதர பயனீட்டாளர்களை கண்டுபிடிப்போம் என்றும் ஈரானின் எண்ணெய் அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலி ரஸா நிக்ஸாத் கூறியுள்ளார்.

ஆனால், ஈரானின் முடிவு கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று இரு நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன. தினமும் 58 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெயை பிரான்சு ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், க்ரீஸ், போர்சுகல், பிரான்சு, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எண்ணெயை ஏற்றுமதிச் செய்வதை ஈரான் நிறுத்தும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் ஈரானின் எண்ணெய் அமைச்சகம் இச்செய்தியை மறுத்தது.
பொருளாதார நெருக்கடியில் உழலும் இரு நாடுகளும் ஈரானின் எண்ணெயை சார்ந்தே இருக்கின்றன. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் உலகிலேயே சவூதிக்கு அடுத்து ஈரான் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் எண்ணெயை வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் இறக்குமதி செய்யமாட்டோம் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்திருந்தது. மேலும் ஈரானின் மத்திய வங்கியின் மீதும் தடையை அதிகரிப்போம் என்று ஐரோப்பிய யூனியன் தீர்மானித்திருந்தது. இந்நிலையில் ஈரான் பலத்த அடியை கொடுத்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன் 

Thursday, February 16, 2012

ஆசிய, பசிபிக் பகுதியில் படை குவிப்பு: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

 


ஆசிய, பசிபிக் பகுதியில் படை குவிப்பு: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்
சீன துணை பிரதமர் ஷீ ஜின்பிங் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக அவர் அமெரிக்கா பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஆசியா பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்கா, சீனா இரு நாடுகளுக்கும் தேவையான இடங்கள் உள்ளன. ஆனால் இந்த மண்டலத்தில் அமெரிக்கா தனது படைகளைகுவித்து வருகிறது. இதை நாங்கள் விரும்பவில்லை. இது நம்பிக்கை இழக்கும் வகையில் உள்ளது.

அமைதி, பொருளாதார வளர்ச்சியை விரும்பும் நாடுகள் இதை செய்வது சரியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஷீ ஜீன்பிங் இன்று அமெரிக்கா அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். மேலும் அமெரிக்கா ராணுவ தலைமையிடம் டைகன் சென்று அமெரிக்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர் அமெரிக்கா சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
thanks to asiananban.blogspot.com

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்!

 

FEB 12: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோரும் "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்" என்ற தலைப்பில் தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஆரோக்கியமான வாழ்விற்கு உடல்பயிற்சி இன்றியமையாதது  என்பதை  மக்களிடம் எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவசமாக யோகா, உடல்பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இதன் தமிழகத்தின்  துவக்க நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றது. இதில் கோவை மாநகர மேயர் செ. மா. வேலுச்சாமி அவர்களும், கோவை அரசு மருத்துவமனை சிவப்பிரகாசம் அவர்களும் பங்கு பெற்றனர்.


இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் ராஜா உசேன் வரவேற்புரை வழகினார் சிறப்பு விருதினரக மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார். பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.  இதில் யோகா வகுப்புகள் மற்றும் உடல்பயிற்சிகள் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கப்பட்டது.

சிந்திக்கவும்: யோகாசனம் என்கிற மக்கள் சொத்தை வைத்து ஒரு கூட்டம் காசு பார்க்கும் இந்த தருணத்தில் இதுபோல் இதை மக்களுக்கு இலவசமாக சொல்லிக்கொடுப்பது ஒரு சிறப்பான விடயம்தான். கார்பரேட் சாமியார்கள் யோகாசனத்தை வைத்து பலகோடிகள் சம்பாதித்து வெளிநாடுகளில் சொந்தமாக தீவும், ஹெலிஹாப்ட்டரும் வாங்கி இருக்கும் போது இந்த கலையை மக்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கும் இவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
*அபூசுமையா

காதலர் தினம் கூடுமா? காதலித்தால் பாவமா?


FEB 14: காதல் ஒரு பருவகால உந்தல். பருவ வயதை அடைந்த ஆண்,பெண் ஒருவேர்மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்பே காதல் ஆகும்.

ஒருவர் மேல் காதல் உண்டாக அழகு என்கிற புற தோற்றங்களோ அல்லது அறிவு சார்ந்த கல்வி, வீரம், விவேகம், சமூக சிந்தனைகள் போன்ற அக தோற்றங்களோ ஒரு காரணமாக இருக்கலாம்.

தனது மனதுக்கு  பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது. அதாவது காதல் என்பதின் கடைசி இலக்கு திருமணமே.


ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும். அது பருவ வயதில் ஏற்ப்படும் சுகமான அனுபவம். காதல் என்றால் செல்போன் காதல் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பருவ வயதை கடந்து வரும்போது யாரையாவது நமது மனதுக்கு பிடிக்கும்.

ஆனால் நீங்கள் அவர்களோடு பேசி இருக்க கூட மாட்டீர்கள். இயல்பாகவே உங்கள் மனதுக்குள் ஒரு எண்ணம் தோன்றும் இவரை திருமணம் செய்தால் நலமாக இருக்கும் என்று மனம் எண்ணும். இதுபோல் உள்ள சிறு சிறு விஷயங்கள் தொடங்கி ஒருதலை காதல் முதல் ஒருதடவை பார்த்த காதல்வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இந்த விஷயம் கடந்தே சென்றிருக்கும்.

சங்ககால காதல் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதோடு முடிந்து விடும். கண்களாலேயே பேசிகொள்வது ஏதாவது திருமணம், பண்டிகைகள் என்று பொது விசயங்களில் சந்தித்து கொள்வது என்பதோடு சரி. அன்றைய காலத்தில் காதல் என்பது உடல் சார்ந்த ஒரு விசயமாக இல்லாமல் மனம் சார்ந்த விசயமாக இருந்தது. காதல் என்றால் அன்பு, நேசம், பாசம் என்று ஒரு வரையறைக்குள் இருந்தது.

ஆனால் இன்றோ நிலைமை வேறு ஒரு  நாளைக்கு ஒரு காதல் என்று பாஸ்ட் புட் வேகத்தில் இருக்கிறது. இந்த காலத்து  காதல்களில் பெரும்பான்மை உடல் கவர்ச்சியாலே வருகிறது. இன்று காதல் என்பது முக கவர்ச்சியில் தொடங்கி காமத்தில் முடிந்து விடுகிறது. காதலித்து திருமணத்திற்கு பின்னால் நடக்க வேண்டிய விஷயங்கள்  திருமணத்திற்கு முன்னாள் நடப்பதால் பெருன்பான்மையான காதல்கள் கானல் நீராகிப்போகிறது.

இப்படிப்பட்ட காதல்கள் உருவாக ஒரு வகையில் தாய் தந்தையர்களும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். காதல் என்பதன் முடிவு திருமணம் என்றிருக்க சொந்தம் விட்டு போக கூடாது, பணம், புகழ் இவற்றுக்கு ஆசைப்பட்டு தகுதியில்லாத திருமணங்களை  பெற்றோர்கள் முடித்து வைப்பதின் விளைவே இந்த கண்டதும் காதலின் அஸ்திவாரம்.  இன்றைய இளைய தலைமுறையினர்  காதல் செய்து திருமணம் செய்து கொண்டால்தான் சந்தோசமாக வாழமுடியும் என்று எண்ணுவதற்கு பெற்றோர்கள் அதிமுக்கிய காரணியாக அமைந்து விட்டார்கள்.

திருமணம் முடிக்கும் முன் மணமக்களிடம் சம்மதம் கேட்பது என்பது ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.  அந்த பையனின், பெண்ணின் மனதில் என்ன விருப்பம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள யாரும் தலைப்படுவதில்லை. பெற்றோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் ஏற்ப்பட்ட தோல்வியே இந்த கண்டதும் காதல் கலாச்சாரத்தை உருவாக்கியது. இன்றைய பிள்ளைகள் பெற்றோர்களை இந்த விசயத்தில் நம்பத் தயாராக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மற்றபடி பிப் 14  இல்  காதலர் தினம் கொண்டாட்டங்களை உருவாக்கியது  நமது கார்பெரெட் முதலாளிகளே. இப்படி ஒரு குறிப்பிட்ட தினத்தை மேலைநாடுகளில் உண்டாக்கி அதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுவதே இவர்கள் எண்ணம். காதலர் தினம் என்பது கார்பரேட் முதலாளிகளின் தினமே. உலகின் பலபகுதிகளில் மக்கள் உணவில்லாமல் பட்டினியில் சாகும் போது இதுபோன்ற கேளிக்கைகள் அவசியமற்றதே. மற்றபடி காதல் என்கிற ஒரு உணர்வுக்கு ஒரு தினம் எடுத்து (ஒரு விழா ) அதையும் செயற்கை ஆக்கவேண்டாமே.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

சம்ஜோதா:மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது !





Samjhauta Express
புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான ஹிந்துத்துவா தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தூரைச் சார்ந்த கமல் சவுகான் என்பவரை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் சவுகானை, என்.ஐ.ஏ தலைமையகத்திற்கு அழைத்து கைது செய்தது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாங்கே மற்றும் கல்சங்கரா ஆகியோர் மறைந்திருக்கும் இடத்தை குறித்து இவரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இருவரையும் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் பரிசு அளிக்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்திருந்தது.
68 பேரை பலி வாங்கிய சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அஸிமானந்தா, சன்யாசினி பிரக்யாசிங் தாக்கூர், கொலைச் செய்யப்பட்ட சுனில்ஜோஷி, சந்தீப் டாங்கே, லோகேஷ் சர்மா, ராமச்சந்திரா கல்சங்கரா ஆகியோர் மீது குற்றம் சாட்டி என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சுனில் ஜோஷியின் கொலையை குறித்தும் சவுகானிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்திவருகிறது. இவ்வழக்கையும் என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
thanks to asiananban.blogspot.com
Blogger Wordpress Gadgets