Facebook Twitter RSS

Latest News

Sunday, January 08, 2012

புத்தாண்டு சாதனை: மது விற்பனை ரூ.142 கோடி!



 
2012 புதிய ஆண்டில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் ரூ.142 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகின. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரூ.37 கோடி அதிக விற்பனை நடந்து சாதனை(!) படைத்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 696 டாஸ்மாக்(அரசு மதுபான) கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 441 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.

எல்லா ஆண்டுகளையும்போல் இந்த ஆண்டும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டியது. பேருந்து, ரேசன் கடை, அரசு அலுவலகங்கள் என எங்குமே நிதானத்தைக் கடைபிடிக்காத "குடி"மக்கள், டாஸ்மாக் கடைகளில் மட்டும் மிகப் பொறுமையுடன் நீண்ட வரிசையில் கால் கடுக்க நிற்பது வேடிக்கை!




புத்தாண்டு தினத்தையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மிக நீண்ட வரிசை காணப்பட்டது. சாதாரணமாக, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சராசரியாக தினமும் ரூ.45 கோடி முதல் ரூ.50 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகும். ஆனால், புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் ரூ.70 கோடிக்கும், புத்தாண்டு அன்று ரூ.72 கோடிக்கும் என இந்த ஆண்டு மொத்தம் ரூ.142 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.




அதேசமயம் கடந்த ஆண்டு இந்த இரு தினங்களில் மொத்தம் ரூ.107 கோடிக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அதைவிட ரூ.37 கோடிக்குக் கூடுதல் மதுபானங்கள் விற்பனை ஆகி சாதனை(!) படைத்துள்ளது.


இத்தனைக்கும் தானே புயலால் சென்னை உட்பட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்

ஷவ்வால் மாத நோன்பு.
யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.
ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். "இந்நாளின் சிறப்பென்ன?" என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது மகத்தான நாளாகும். இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், "நாங்கள்தாம் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள்" என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் (முஸ்லிம்களை) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய(ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், "நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (இது ஹிஜிரீ 10ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகும்).

மாதத்தில் மூன்று நோன்புகள்.

"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்கவும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர்.அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

"ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், "வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா?" என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றிவெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.

"உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்,(சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவது மென்றுவிடட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதற்குத் தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

"அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை" என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?" என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான்(எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன். நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன்"என்றோ கூறினார்கள். அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

"மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, "இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது" என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத









ஐரோப்பாவில் புதிய இறை இல்லங்கள் உதயம் Print E-mail

ஃபிரான்ஸின் 'Marseille - மர்ஸை'யில் புதிய மஸ்ஜித்
''அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)'' (அல் குர் ஆன் 9:33) இஸ்லாத்துக்கு எதிராக என்னென்ன பொய் மூட்டைகளை அவிழ்த்து விட முடியுமோ அவ்வளவையும் மிக சாமர்த்தியமாக மேற்கத்திய நாடுகளின் அரசும் அவைகளின் ஊடகங்களும் செய்துகொண்டிருக்கும் அதே வேளையில் ஏக வல்ல அல்லாஹ், அவர்களின் அத்தனை சூழ்ச்சியையும் தவிடுபொடி ஆக்கியே வருகிறான் என்பதற்கு அந்நாடுகளில் இஸ்லாம் அதி வேகமாக பரவி வருவதே சாட்சியாக இருக்கிறது. மேலுள்ள திருக் குர் ஆனின் வசனம் கூட அதனை உறுதி செய்கிறது.
சுவிட்ஜர்லாந்தில் பள்ளிவாசல் மினாரா கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேளியில் ஐரோப்பாவின் மிக முக்கியமான இரு நாடுகளான ஜெர்மனியிலும், ஃபிரான்சிலும் புதிதாக இரு இறையில்லங்கள் இறையொளி(லி)யை ஓங்கச்செய்ய எழுந்துள்ளன. அதை நிரூபிக்கும் விதமாக ஃபிரான்சிலும் ஜெர்மனியிலும் புதிதாக உயர்ந்தோங்கி நிற்கும் புதிய
'மஸ்ஜித்'களே சாட்சி. ஃபிரான்ஸில் மிகப்பெரிய பள்ளிவாசல்
பெண்ணியத்திற்கு கண்ணியம் அளிக்கும் ஹிஜாபை தடை செய்ய முயன்றுகொண்டிருக்கும் பிரான்ஸின் Marseille - மர்ஸை (ஃபிரென்ச் உச்சரிப்பு இதுதான்) என்ற நகரத்தின் செயின்ட் லூயிஸ் என்ற பகுதியில் மிகப்பெரிய பள்ளிவாசல் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்நகரத்தில் மட்டும் சுமார் 2,50,000 முஸ்லிம்களும் பிரான்ஸ் முழுமைக்கும் சுமார் 60 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 2012 ஆம் ஆண்டு திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் 22 மில்லியன் யூரோ மதிப்பிலான இப்பள்ளியில் குர் ஆன் வகுப்புகள், நூலகம், உணவு மற்றும் தேநீர் விடுதிகள் உள்ளடங்கியதாக இருக்கும்.
ஒரே நேரத்தில் சுமார் 7000 பேர் தொழுகை நடத்த முடியும். இப்பள்ளியில் அமையயுள்ள மினாராவானது 25 மீட்டர் (82 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். பிரான்ஸ் அரசு இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக எத்தனை எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த இயலாது என்பதற்கு இது ஒரு சான்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெர்மனியில் புதிய இறை இல்லம் உதயம்

உண்மை மார்க்கமான இஸ்லாமிய மார்க்கம் ஐரோப்பாவில் அதிவேகமாக வளர்ந்து வருவதன் மற்றுமொரு மைல்கல்லாக, 21/05/2010 அன்று  ஜெர்மனியிலும் மிகப்பெரிய பள்ளிவாசல் திறக்கப்பட்டுள்ளது. துருக்கியர்கள் அதிகமாக வாழும் பெர்லின் நகரின் குரூஸ்பெர்ங் பகுதியில் சுமார் பத்து மில்லியன் யூரோ செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இப்பள்ளியின் கோபுரம் முழுமையும் கண்ணாடிகளால் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் ஆறு அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ள இப்பள்ளியில் நான்கு சிறிய மினாராக்களும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் நபர்கள் இங்கே தொழுகை நடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறை இல்லத்திற்கு லெபனான் மற்று பாலஸ்தீனத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முழு பொருளூதவி அளித்துள்ளனர் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இதுபோன்று இன்னும் ஆயிரம் ஆயிரம் இறை இல்லங்கள் உலகம் முழுக்க கட்டியெழுப்பவும், அனைத்து இறை இல்லங்களும் முஸ்லிம்களால் நிரம்பிவழியவும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.

Saturday, January 07, 2012

எது வேண்டும்! அணுமின்நிலயமா? சேது சமுத்திர திட்டமா?

JAN 07: மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி நிற்கிறது சேது சமுத்திர கால்வாய் திட்டப்பணிகள். இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது தொடர்பாக, பிரதமர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யும் படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்க கூடாது என்று ஒட்டு மொத்த தமிழகமும் குரல் கொடுக்கும் போது அதை திறந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறது மன்மோகன் அரசு. அதற்காகராணுவத்தையும் இறக்க ரெடி என்கிறது.ஆனால் தமிழகத்துக்கு நலன் உண்டாக்கும் சேதுசமுத்திர திட்டத்தை அமுல்படுத்த மாற்று வழி குறித்து ஆலோசனை என்று சொல்லி அந்த திட்டத்தை மூன்று ஆண்டுகள் கிடப்பில் போட்டுள்ளது. ஹிந்துத்துவா மதவாதம் பேசி தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்கி வரும் வடஇந்திய இறக்குமதியான இந்து முன்னணியிடம் சரணடைந்த மத்திய அரசு கூடங்குளம் மக்கள் போராட்டத்தை நிராகரிப்பதென்.கேட்டால் கூடங்குளத்தில் பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு விட்டதாக சொல்லும் மத்திய அரசு அதைக்காட்டிலும் அதிகமாக சேது சமுத்திர திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது என்பதை மறந்ததேன். ராமர் பாலம் கடலுக்கடியில் இருப்பதாக சொல்லி இந்து முன்னணி தலைவர் ராமகோபால ஐயர் தொடர்ந்து ஒருபொய் பரப்புரை செய்து வருகிறார். தமிழ் நாட்டுக்கு வருமானம் கொடுக்கும் ஒரு பாதுக்காப்பான திட்டத்தை நிறைவேற்ற தடையாக இருக்கும் இவரும் இவரது ஹிந்துத்துவா பரிவாரங்களும் நாசகாரகூடங்குளம் அனுமின்னிலயத்தை உடனே திறக்கவேண்டும் என்று கோசம் போடுகின்றனர். தமிழர்களுக்கு நலம் உண்டாக்கும் திட்டங்களை புறக்கணிக்கும் இவர்கள் தமிழர்களுக்கு அழிவை உண்டாக்கும் திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதேன். கடைசியாக ராமகோபால ஐயரிடம் மண்டியிட்டது மன்மோகன் சிங் அரசு.

Friday, January 06, 2012

almanjakollai: 2011 ஆம் ஆண்டில் முஸ்லிம்உலகில் இடம்பெற்ற முக்கிய ...

2011 ஆம் ஆண்டில் முஸ்லிம்உலகில் இடம்பெற்ற முக்கிய ...: 2010 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் டியூனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் 23 வருடங்கள் டியூனிசியாசின் ஜனாதிபதியாகவி...

almanjakollai சவூதி அரேபியப் பெண்களுக்கு வாக்களிக்கும் பூரண உரிம...

சவூதி அரேபியப் பெண்களுக்கு வாக்களிக்கும் பூரண உரிம...: சவூதிஅரேபியா, பெண்களுக்கு 2015ஆம் ஆண்டு மாநகரசபைத் தேர்தல்களில் வாக்களிக்க ஆண் துணையொன்றின் அங்கீகாரம் அவசியப்படாததுடன், அலுவலகங்களுக...

almanjakollai சவூதி அரேபியப் பெண்களுக்கு வாக்களிக்கும் பூரண உரிம...

முஸ்லிம் உலகம்: சவூதி அரேபியப் பெண்களுக்கு வாக்களிக்கும் பூரண உரிம...: சவூதிஅரேபியா, பெண்களுக்கு 2015ஆம் ஆண்டு மாநகரசபைத் தேர்தல்களில் வாக்களிக்க ஆண் துணையொன்றின் அங்கீகாரம் அவசியப்படாததுடன், அலுவலகங்களுக...

முஸ்லிம் உலகம்: உலகில் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு ...

முஸ்லிம் உலகம்: உலகில் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு ...: உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியுள்ளதாக உலக கண்கானிப்பு தாபனத்தின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது....
Blogger Wordpress Gadgets