Facebook Twitter RSS

Tuesday, February 12, 2013

Widgets

அண்ணல் நபியின் சபை ஒழுங்கு


ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் ‘அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்
நபி அவர்களைவிட (அவர்களின்) தோழர்களுக்கு எவரும் மிகவும் உவப்பானவராக இருக்கவில்லை. எனினும் நபி அவர்களை அவர்கள் பார்ப்பின் எழுந்திவிட மாட்டார்கள். காரணம் இதை நபி அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதைத் தோழர்கள் அறிந்திருந்ததால்தான். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) திர்மிதீ
முஆவியா(ரலி) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களின் மகனாரிடமும், ஸஃப்வான் (ரலி) அவர்களின் மகனாரிடமும் வந்தனர். அப்பொழுது அவ்விருவரும் அவர்களுக்காக எழுந்து நின்றனர். அப்பொழுது முஆவியா(ரலி) அவர்கள் அவ்விருவரையும் ‘நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவருக்குத் தமக்காக மக்கள் எழுந்து நிற்பது மகிழ்ச்சியை நல்குகிறதோ அவர் நரகத்தை தம் இடமாக்கிக் கொள்ளவும் என்று நபி அவர்கள் கூற நான் கேட்டேன்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ் நூல்: அபூதாவூத், திர்மிதீ
உங்களில் எவரும் சபையில் வீற்றிருப்பவரை எழுந்திருக்கச் செய்து அங்கு அமரவேண்டாம். எனினும் நீங்கள் நெருங்கி அமர்ந்து இடத்தை விசாலமாக்கி (அவருக்கு இடம்) அளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விசாலாமாக்கி வைப்பான் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
“ஒருவர் சபையிலுருந்து ஒரு வேலையாக எழுந்து சென்று பின்னர் திரும்பி வருவாரானால் அவரே அவ்விடத்திற்கு மிகவும் உரிமையுடையவராவார்” என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி)வின் மகனார் வஹ்பு நூல்: திர்மிதீ
நபி அவர்களிடம் நாங்கள் சென்றால் எங்களில் ஒவ்வொருவருக்கும் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு நாங்கள் அமர்ந்து விடுவோம். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: அபூதாவூத்
“இருவருக்கிடையில் அவ்விருவரின் அனுமதியின்றிப் பிறர் அமர்வது கூடாது” என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அம்ருப்னு ஷுஐப் நூல்: அபூதாவூத், திர்மிதீ
பள்ளிவாயிலுக்குள் வந்த நபி அவர்கள் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி “உங்களுக்கு என்ன வந்துவிட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காணுகிறேன் என்று வினவினர். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets