கெய்ரோ:யூத ராணுவம் காஸ்ஸாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் நிலைமைகளை மதிப்பீடு செய்யவும், தீர்வுகளைக் குறித்து ஆராயவும் துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானும், எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியும் தொலை பேசியில் விவாதித்தனர்.
எர்துகான் எகிப்திற்கு வந்தால் ஃபலஸ்தீன் விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிப்போம் என்று முர்ஸி கூறினார். காஸ்ஸா தாக்குதலை இரு நாடுகளும் ஏற்கனவே கண்டித்திருந்தன.
இதனிடையே இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக துருக்கி அரசு அறிவித்துள்ளது. இதனை துருக்கி துணை அதிபர் புலைன் ஆரஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். யூத ராணுவத்தின் நடவடிக்கை மனிதகுலத்திற்கு எதிரானது என்றும், பிராந்தியத்தில் அமைதி நிறுவப்படும் வரை இஸ்ரேலுடனான உறவை முடக்குவதாக அவர் கூறினார்.source thoothuonline




No comments:
Post a Comment