நீலம் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிக மழையை எதிர்நோக்கி இருக்கும் 20 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சேலம் மற்றும் திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment