டெல்லி: நிர்வாகம், முதலீட்டு செலவு, கருவிகள் வாங்குதல், போலீசாருக்கு வழங்கப்படும் ஈட்டுத் தொகை, தபால் துறைக்கான கட்டணம், அச்சக செலவு, தகவல் தொழில்நுட்ப செலவு போன்றவை பெருமளவு அதிகரித்ததால், பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதன்படி அப்புதிய விண்ணப் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய கட்டண விபரம்
பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் 2500 ரூபாயில் இருந்து 3500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, கடைசியாக பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம் 40 அமெரிக்க டாலர்களில் இருந்து 75 அமெரிக்க டாலர்களாகவும், 48 யுரோவில் இருந்து 60 யுரோக்களாகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. source thoothu online
No comments:
Post a Comment