பனாஜி : இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கோவாவின் கடற்கரை கிராமங்களை இஸ்ரேலியர்கள் மற்றும் ரஷ்யர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்நிலை தொடர்வது அபாயகரமானது என்றும் இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் சாந்தாராம் நாயக் கூறினார்.
”கோவாவின் சில கடற்கரை கிராமங்களை ரஷ்யர்களும் இஸ்ரேலியர்களும் முழுமையாய் ஆக்கிரமித்துள்ளனர்
. இது ஆரோக்கியமான சுற்றுலா அல்ல. ஏனென்றால் அப்பகுதி முழுவதையும் அவர்கள் பெரும் பணம் கொடுத்து தங்கள் வயப்படுத்தியுள்ளதோடு நம் நாட்டின் சட்டங்களுக்கு முரணாக பல்வேறு பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்” என்றார் சாந்தாராம் நாயக்.
கோவாவின் விலை மதிப்பில்லா இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிய நாயக் எந்த கோவாவின் கிராமமும் இந்திய கிராமமாக இருக்க வேண்டுமே தவிர இஸ்ரேலிய கிராமம் அல்லது ரஷ்யன் கிராமம் என்று அழைக்கப்படும் நிலை உருவாக கூடாது என்றார்.
thanks to asiananban.blogspot.com
No comments:
Post a Comment