”சிரியா மனித பேரழிவு ஆயுதங்களை கொண்டுள்ளது. அவற்றை அது பயன்படுத்துமானால் சிரியாவினுள் உள் நுழைந்து தாக்குதல் நடாத்துவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்”. House Intelligence Chairman Mike Rogers. ஒபாமாவின் 2012 IISS Manama Security Dialogue நிகழ்வின் போதே இந்த கருத்தை மைக் ரோஜேர்ஸ் வெளியிட்டுள்ளார். சிரயா மீதான அமெரக்க அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் இறுதி அசைவுகளின் ஓரங்கமே இவரது மறைமுக பேச்சாகும்.
Latest News
Sunday, December 09, 2012
சிரியா மனித பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தினால் நாம் சிரியாவை தாக்குவோம்!
”சிரியா மனித பேரழிவு ஆயுதங்களை கொண்டுள்ளது. அவற்றை அது பயன்படுத்துமானால் சிரியாவினுள் உள் நுழைந்து தாக்குதல் நடாத்துவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்”. House Intelligence Chairman Mike Rogers. ஒபாமாவின் 2012 IISS Manama Security Dialogue நிகழ்வின் போதே இந்த கருத்தை மைக் ரோஜேர்ஸ் வெளியிட்டுள்ளார். சிரயா மீதான அமெரக்க அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் இறுதி அசைவுகளின் ஓரங்கமே இவரது மறைமுக பேச்சாகும்.
துருக்கிய எல்லையில் அமெரிக்க படையினர்!! - இரசாயன ஆயுதங்கள் சொல்லும் இரகசியங்கள்!!
“இரசாயன ஆயுதங்கள்”. இந்த வார்த்தை முன்பு ஈராக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்ததத்தின் போது தொடராக செய்யப்பட்ட பிரச்சாரம். அதற்கு முன்னரும் லிபியாவை ஆக்கிரமிக்க இதே “இரசாயன ஆயுதங்கள்” எனும் பூதமே அமெரிக்காவிற்கு துணை நின்றது. இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக மனித பேரழிவு ஆயுதமாக வருணிக்கப்படும் “இரசாயன ஆயுதங்கள்” எனும் பிரச்சார யுத்தத்தை அமெரிக்கா இப்போது சிரியாவைின் மேல் நடாத்த ஆரம்பித்துள்ளது. சட்டவிரோத தேசமான இஸ்ரேல் கூட இதே இரசாயன ஆயுதங்களை வைத்துள்ளது. அண்மைய காஸா மீதான தாக்குதலின் போதும் கூட கொத்து குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் இஸ்ரேல் பலஸ்தீனர்கள் மீது பயன்படுத்தியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை சாஸனத்தில் இவை தடை செய்யப்பட்ட ஆயுதங்கள்.
அமெரிக்க ஆதரவு பெற்ற முஸ்லிம் சகோதரத்துவம் கெய்ரோவில் குருதிகொட்டும் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது
US-backed Muslim Brotherhood unleashes bloody crackdown in Cairo (by:
Johannes Stern ) Thanks:
http://www.wsws.org
எகிப்தின் இஸ்லாமியவாத ஜனாதிபதி மகம்மது முர்சிக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லிம் சகோதரத்துவ (MB) சக்திகள், கெய்ரோவில் குருதிகொட்டும வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக முர்சிக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்லாமியவாதிகள் தங்கள் சக்திகளை திரட்டிவேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்களை நசுக்க முற்படுகின்றனர்.
அப்போதைய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் குண்டர்கள் கடந்த ஆண்டு எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களில் தஹ்ரிர் சதுக்கத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள்மீது தாக்கிய நாட்களை, "ஒட்டகங்களின் போர்" எனப்பட்டதை நினைவுபடுத்தும் காட்சிகளாக, முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள், Salafist Call, al-Gama al-Islamiyyaசக்திகளுடன் கெய்ரோவில் ஹெலியோபொலிஸிலுள்ள ஜனாதிபதி அரண்மனைக்கு முன்பு அமைதியாக அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தி வந்த நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
Sunday, December 02, 2012
“ஷியாக்கள்” என்று ஒன்றும் தெரியாமல் ஒலமிடும் ஓநாய்களிற்கான பதிவு - இஸ்லாத்தின் எதிரிகளான ஷியாக்களை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்!! PART 2
இன்று இலங்கையில் காணப்படும் இயக்கங்கள் அவற்றின் சர்வதேச ஸ்தாபகர்களினதும் தலைவர்களினதும் குறிக்கோள்களையும் திட்டங்களையும் செயற்படுத்தும் நடவடிக்கைகளையே பெரும்பாலும் தீவிரமாக அனுஷ்டிக்கின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலேயே சாத்தியமற்றுப்போன அநியாயமாகப் பெறுமதியான பல உயிர்களைப் பலியெடுத்த கொள்கைகளை முஸ்லிம்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழ்கின்ற இலங்கையில் அமுல்படுத்தி அதே நிலைமைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.
இஸ்லாத்தைப் பற்றியும் அதன் ‘கிலாபத் ஜிஹாத்’ பற்றிய தெளிவான அறிவற்ற உணர்ச்சிக் கோஷங்களுக்கு அடிமைப்பட்ட தூய்மையான ஏகத்துவக் கொள்கையை சிதைத்துவிட்ட அற்பமான அரசியல் நோக்கம் கொண்ட நபி (ஸல்) அவர்களின் தூய்மையான ஸுன்னாவைக் கொச்சைப்படுத்துகின்ற கோமாளிக் கூட்டங்களினால் இன்றுவரை உலகில் எங்கும் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட முடியவில்லை. இவர்களால் நிலைநாட்டவும் முடியாது. ஏனெனில் நபி வழியைப் புறக்கனித்த எந்தக் கூட்டத்திற்கும் அல்லாஹ் தனது உதவியை வழங்கிய வரலாறுகள் இல்லை.
“ஷியாக்கள்” என்று ஒன்றும் தெரியாமல் ஒலமிடும் ஓநாய்களிற்கான பதிவு - இஸ்லாத்தின் எதிரிகளான ஷியாக்களை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்!! PART 1
வழிகேடர்களின் சித்தாந்தமான ஷியாயிஸம் பற்றிய தெளிவை நம் சகோதரர்கள் அறிந்து கொள்வதற்காக அந்த வழி கெட்ட அமைப்பு பற்றிய அறிமுகம்
நபி (ஸல்) அவர்களின் பின்னர் இந்த ஒற்றுமையைக் குலைப்பதை இலட்சியமாகக் கொண்டவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முதலில் பலியானவர்கள் ஷீஆக்களும் காரிஜியாக்களுமாவர். இந்த இரு பிரிவினரும் இஸ்லாத்திற்கு கேடு விளைவித்த அளவுக்கு வேறு எந்தப் பிரிவினரும் கேடு விளைவித்ததில்லை.
இப்பிரிவுகள் தோன்றுவதற்கு தனியொரு நபர் மீது கொண்ட விருப்பு வெறுப்பு என்பனவே காரணங்களாக அமைந்தன. அலி (ரழி) அவர்களின் மீது வெறுப்பு எல்லை மீறிப் போனதால் காரிஜிய்யா என்ற பிரிவு தோன்றியது. அரசியல் காரணங்களுக்காக அலி (ரழி) அவர்களை எதிர்க்க ஆரம்பித்த இந்தக் கும்பல் அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய்களைப் பரப்பி அல்குர்ஆனுக்கு தவறான விளக்கம் கூறி கிளர்ச்சி செய்தனர்.
இதேபோல் இவர்களுக்கு எதிராக அலி (ரழி) அவர்களை ஆதரிக்க முன்வந்த கூட்டமே‘ஷீஆ’ شيعة எனப்படுகின்றனர். இவர்கள் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக ‘ஷீஅத்து அலி’ என்று அழைக்கப்பட்டனர். ‘ஷீஆ’ شيعة என்ற சொல் கட்சி குழு என்ற கருத்தைத் தருகிறது.
அலி (ரழி) அவர்களின் அரசியல் தலைமைக்கு ஆதரவாக வளர்ந்த இப்பிரிவினர் நாளடைவில் அவர்களை அவதார புருஷராகவும் தெய்வீக அம்சம் பொருந்தியவராகவும் நபி (ஸல்) அவர்களை விட உயர்வானவராகவும் கருதலானார்கள். இந்த வெறி முற்றிப்போன போது அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) போன்ற உன்னத ஸஹாபாக்களை இழிவுபடுத்த ஆரம்பித்தனர்.
செச்னிய போராட்டத்தை நிர்மூலம் செய்ய முனையும் ஈரான் - துரோக தேசத்தின் இன்னொரு முகம்!!செ
இப்போது ஆயுதங்களில் நம்பிக்கை அற்று போன நிலையில் அமெரிக்க பாணியில் “முஸ்லிம்களிற்கு இடையிலான மோதல்” எனும் களத்தை திறக்க முற்பட்டுள்ளனர். பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், சிரியாவில் என அமெரிக்கா திறந்துள்ள “ஷியா சுன்னி கொலைக்களம்” இப்போது செச்னியாவில் திறக்கப்பட்டுள்ளது.
முதுகுவலிக்கு காரணங்கள் ( வரும் முன் காப்பதற்கு )
முதுகுவலிக்கு பல காரணங்கள் உள்ளன. நாம் படுக்கும் முறையும் முதுகுவலிக்கு முக்கிய காரணமாக உள்ளது. போம் மெத்தைகளும் காரணம் என்கிறார்கள். அதனால் போம் மெத்தைகளைத் தவிர்த்து, இலவம் பஞ்சு மெத்தை, பாய், ஜமுக்காளம் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. உயரம் குறைவான தலையணைகள் முதுகுவலியை குறைக்குமாம்.
இருசக்கர வாகனகளில் நீட தூரம் செல்வதை தவிர்க்க வேண்டும். மேடு, பள்ளமான சாலைகளில் வேகமாக செல்லக்கூடாது. வாகனங்களில் முன்புறமாக வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.
அலுவலகத்தில் பணி புரிபவர்கள் எப்போதும் நாற்காலியிலேயே அமர்ந்திருக்காமல் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடந்து பின்னர் மீண்டும் வேலையை தொடர வேண்டும்.
Saturday, December 01, 2012
இஸ்லாம் எனது மார்க்கம்! பிரபல ப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ் அரபு பெண்ணுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்.
அது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சூப்பர் மார்கெட்..
தனக்கு வேண்டிய பொருள்களைத் தள்ளுவண்டியில் நிறைத்துக் கொண்டு, காசாளரிடம் கணக்கைப் பார்த்துப் பணத்தைச் செலுத்துவதற்காக நின்ற வாடிக்கையாளர்களுள் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்த முஸ்லிம் பெண்மணியொருவர்!பிரான்சில் ‘ஹிஜாபு’க்கு இருக்கும் எதிர்ப்பு பற்றித் தெரியுமல்லவா?சில நிமிடங்களில், இந்த முஸ்லிம் பெண்ணின் முறை வந்தது. தான் வாங்கிய பொருள்களை ஒவ்வொன்றாகக் காசாளர் (கேஷியர்) முன்னால் எடுத்து வைக்கத் தொடங்கினார் இந்தப் பெண்மணி.அந்தக் கவுண்டரின் காசாளரும் முஸ்லிம் பெண்தான்! ஓர் அரபு நாட்டிலிருந்து வந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்று வாழ்பவர்!
தன் முன்னால் நிற்கும் வாடிக்கையாளர் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்து ( ‘நிகாப்’ எனும் முகத்திரையுடன்) இருப்பதைப் பொறுக்க முடியாத காசாளப் பெண், அவரை முறைத்துப் பார்த்தாள். “ இந்த நாட்டில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்! எல்லாம் உங்களைப் போன்றவர்களால்தான்! ‘ஹிஜாப்’, ‘நிகாப்’ எனும் தீவிரவாத அடையாளங்கள்! வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் நாம், சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் வந்துள்ளோம்; மாறாக, நமது மார்க்கத்தை அடையாளம் போட்டுக் காட்டவல்ல! நமது வரலாற்றை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல! நீ உன் மார்க்கத்தை நடைமுறைப்படுத்த நாடினால், உனது அரபு நாட்டுக்குப் போக வேண்டியது தானே!? அங்கே போய், நீ விரும்பியபடி நடந்துகொள்!” பொரிந்து தள்ளினார், பொறுமையிழந்த அந்தக் காசாளப் பெண்.இத்தகைய ஏச்சு ஏவுகணையைக் கேட்ட அந்த முஸ்லிம் பெண்மணி, தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பொருள்களை நிறுத்தினார். காசாளரைக் கண்களால் சந்தித்தார்! ஒன்றும் மறுமொழி பேசவில்லை! அமைதியாகத் தனது ‘நிகாபை’ விலக்கினார்.
அரபு நாட்டுக் காசாளப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனாள்!
தனக்கு முன்னால் நின்ற பெண்ணோ, பிரெஞ்சுக்காரி! இதை, அப்பெண்னின் செம்பட்டை முடியும் நீலக் கண்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின!
அடுத்து அமைதியாகச் சொன்னாள் அந்த முஸ்லிம் பெண்மணி:
“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்! இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் மார்க்கத்தை விற்றுவிட்டீர்கள், உலகை தேடுவதற்காக! நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்!”அசடு வழியத் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த காசாளப் பெண்ணைப் பார்த்து அமைதியாகக் கூறினார் அந்தப் பேறு பெற்ற இஸ்லாமிய பெண்மணி:பிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டு சமீபத்தில் ஹிஜாபோடு கண்ணியமான தோற்றத்தில் தொலைக் காட்சியில் பேட்டியளித்து பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார். இந்த பேறு பெற்ற பெண்மணி அழகாக சொன்னார் என்னை யாரும் மிரட்டி இஸ்லாத்திற்கு மாற்றவில்லை... மாற்றவும் முடியாது.
Subscribe to:
Comments (Atom)

