Facebook Twitter RSS

Friday, May 11, 2012

Widgets

வரிக்கு மேல் வரி போட்டு மக்களை கசக்கி பிழிகிறார் ,கருணாநிதி


வரிக்கு மேல் வரி போட்டு மக்களை கசக்கி பிழிகிறார் முதல்வர் ஜெயலலிதா என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி கூறியதாவது, புதுக்கோட்டை இடைத்தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. வழக்கமாக இடைத்தேர்தலில் சம்பந்தப்பட்ட தொகுதி அமைந்துள்ள மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருக்கும்.
தற்போது தொகுதியில் மட்டும் நன்னடத்தை விதிகளை கடைப்பிடித்தால் போதும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இனி அரசின் நலத்திட்டங்களையெல்லாம் சர்வ சாதாரணமாக வழங்குவார்கள் என்றார்.
மேலும், ஜெயலலிதா பதவியேற்ற நாளிலிருந்து தமிழகத்தில் விபத்து மரணங்கள் இல்லாத நாட்கள் இல்லை. அது ஏதோ சாபக்கேடு. சாபக்கேட்டில் நமக்கு நம்பிக்கை இல்லை.
குறிப்பாக ஆரணியில் தேரோட்டத்தின் போது, தேர் அச்சு முறிந்து 5 பக்தர்கள் பலியாயினர். இதே போல் குடியாத்தத்தில் தேர் திருவிழாவில் 5 பக்தர்கள் மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இது போன்ற அசாதாரண மரணங்கள், மாணவர்கள் தற்கொலைகள் என்று சோகமயமான செய்திகள் வருகின்றன என்றும் அவர் கூறினார்.
கட்டண உயர்வு பற்றி பேசும் போது, டாஸ்மாக் மூலமாக அரசுக்கு இந்த ஆண்டு ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கவுள்ள நிலையில், பால் விலை, பேருந்துக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளனர்.
இதை விடக் குறைவாக அரசுக்கு வருவாய் வந்த நிலையிலே கூட திமுக அரசு இந்தக் கட்டண உயர்வுகளையெல்லாம் செய்யவில்லை. மின்வாரியத்திற்கு 50 ஆயிரம் கோடி கடன், தமிழக அரசுக்கு 1 லட்சம் கோடிக்கு மேல் கடன் என்றெல்லாம் முந்தைய அரசு பழி சுமத்தவும் இல்லை என்றார்.
மேலும், மேற்குவங்க அரசுக்கு 2 லட்சம் கோடிக்கு மேல் மத்திய கடன் மட்டும் உள்ளது. அம்மாநில முதல்வர் மம்தா அதற்கு முந்தைய ஆட்சியைக் குறை சொல்லவில்லை. மாறாக பிரதமரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
கடனைத் திருப்பிச்செலுத்த மூன்றாண்டு அவகாசம் கோரியிருக்கிறார். ஆனால் நமது தமிழக அரசு வரிக்கு மேல் வரியை உயர்த்தி மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது எனவும் கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets