Facebook Twitter RSS

Latest News

Monday, September 30, 2013

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்


    உலகில் மனிதர்கள் நேர்வழியிலிருந்து பிறழும் போது அவர்களை தூய்மைப்படுத்துவதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் தூதர் தாம் என்பதற்கு அத்தாட்சியாக சில அதிசயங்களை முன்னறிவிப்பு செய்யக் கூடிய ஆற்றல்களையும் வருங்காலத்தில் நடைபெறவிருக்கின்ற சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்ய கூடிய திறனையும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவ்வாறு இறுதி நபியாக வந்த நமது நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். அவற்றில் சில அவர்களின் வாழ்க்கையிலும் சில இனி வரக்கூடிய காலங்களிலும் நடைபெறவிருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.

Tuesday, September 24, 2013

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் பகுதி 3

புரட்சி - திருக்குர்ஆனின் வழியில்


மக்காவில் அருளப்பட்ட இறைவசனங்களின் மூலம் இறைவன் உலகுக்கு தந்த ஒளி மக்காவில் அருளப்பட்ட திருமறையின் இறைமொழிகள் ஒரு கேள்விக்கு தெளிவாகவும் தீர்க்கமாகவும் விடை தந்து கொண்டே இருந்தன. 13 ஆண்டுகளாக இந்த விடை கொண்டு அந்த மக்கள் அல்லாஹ்வின் வழிநோக்கி அழைக்கப்பட்டார்கள். இந்த 13 ஆண்டுகளிலும் இந்தக் கேள்விக்கு விடைதந்த இறைவசனங்களின் அடிப்படைத் தன்மைகள் மாறவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்கு விடைதந்த பாங்கும் பாணியும் மாறிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் திருக்குர்ஆன் இந்தக் கேள்விக்குப் பதில் தந்த பாங்கில், அந்தக் கேள்வி அன்று தான் புதிதாக எழுப்பப்பட்டது போலும், அன்று தான் அதற்கான பதில் அருளப்பட்டது போலும் இருந்தது. மக்கமா நகர் காலம் முழுவதும் இந்த அடிப்படைக் கேள்விக்கு தெளிவு தருவதில், அதைக் கொண்டு அந்த மக்களை இந்தப் பேரியக்கத்தில் பிணைத்திடுவதில் திருக்குர்ஆன் தன் முழுக் கவனத்தையும் செலுத்திற்று. புதமையும் புரட்சியும் நிறைந்த இந்த மார்க்கத்திற்கு இந்தக் கேள்விக்கான பதில்தான் அடித்தளம். இந்தக் கேள்வி அதன்பதில் இரண்டு முக்கியமான அடிப்படைகளைக் கொண்டது.

Dheenai Nilai Naatungal Athil Pirinthu Vidaatheergal

Saturday, August 24, 2013

மிக மோசமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு

எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தனது வரலாற்றில் மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர். இராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசு கடந்த மூன்று தசாப்தங்களில் ஆட்சியில் இருந்த நிர்வாகம் எடுக்காத நடவடிக்கையாக அந்த அமைப்பின் உயர்மட்டத் தலைவர் மொஹமட் பதீயை கைது செய்து சிறைவைத்துள்ளது.

சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் சொல்லும் செய்திகள்


         
 சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் பசர் அல் அசாத்தின் உண்மை நிலையை  மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது . அத்தோடு மேற்கின் பக்குவமான முதலைக் கண்ணீரும் அதன் மீடியாக்களால் இதன் விடயத்தில் வடிக்கப் பட்ட நிலையில் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இராணுவ அரசியல் பற்றிய பார்வைகள் இதன் மூலம் மறைந்து போகின்றது .

“மெட்ராஸ் கபே” படத்தில் விடுதலைப் புலிகளை எப்படி காட்டுகிறார்கள் தெரியுமா?

Source:viruviruppu.com
ற்போது சர்ச்சைகளில் பலமாக அடிபடும் மெட்ராஸ் கபே படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா என்ற ஆவலை பலருக்கு ஏற்படுத்தியுள்ளன, அந்தப் படம் பற்றி வெளியாகும் செய்திகள். இந்தப் படம் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும. அதன் தலைவர் தலைவர் பிரபாகரனையும் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளது என்று கூறி படத்தை தடை செய்ய கோரியுள்ளன சில அமைப்புகள்.

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 2

திருக்குர்ஆன் உருவாக்கிய ஒப்பற்ற சமுதாயம்
இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும். இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும் என் விழைவோர், ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும் முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் இந்தத் திருத்தூது இஸ்லாம் ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபிகள் பெருமான்(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம் தான். இந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு சமுதாயத்தை வரலாற்றின் பிந்தைய காலக்கட்டத்தில் ஏன் மனித வரலாற்றின் எந்தக் காலக்கட்த்திலும் நாம் சந்திக்கவில்லை.

Sunday, July 07, 2013

அதிபர் முர்ஸி தடுத்து வைக்கப்பட்டுள்ள “குடியரசு காவற் படையினரின்” தலைமையகத்தினுல் துப்பாபக்கி வேட்டு சத்தங்கள் கேட்டுள்ளன!!


The impact of military coup in Egypt, the Muslim Brotherhood Algerian military regime feared repressive attitude


Rabaa வில் பல்லாயிரக்கணக்கான எகிப்திய இஹ்வானிய ஆதரவாளர்கள் திரண்டு எகிப்திய இராணுவத்திற்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரபாவின் ஜாமியா மஸ்ஜித்தில் இந்த எதிர்ப்பார்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி எகிப்திய இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு பதின்மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் இராணுவ நிலையில் முர்ஸியின் படம் பொருந்திய புரட்சிக்கான அழைப்பு போஸ்டரை ஒட்ட முற்பட்ட போதே தலையில் சுடப்பட்டுள்ளார்.
Blogger Wordpress Gadgets