வைகறை வெளிச்சம் ; 2008 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் நமது மும்மை நகரம் மிகவும் மர்மமான முறையில் திடீரென தாக்கப்பட்டது. இதில் இந்தியாவில் 16 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயும் கொலை செய்யப்பட்டார். அவர் அப்போது மராட்டிய மாநில தீவிரவாதத் தடுப்புப்படையின் தலைவராக இருந்தார்.
மும்பைத் தாக்குதலே ஹேமந்த் கர்கரேயைக் கொலை செய்வதற்கான முன்னேற்பாடு என்பதை நிரூபிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘கசாப்’ஐ திடீரென இரகசியமாகத் தூக்கிலே போட்டதாகக் கூறி, உடனேயே புதைத்து விட்டாகவும் செய்திகளைப் பரப்பி விட்டார்கள். கசாப்போடு மொத்த விவகாரத்தையும் புதைத்துவிட்டார்கள். இதில் புதைந்துபோன பல உண்மைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம்.


