இதை நம்ம ஊரு வயாகரா என்றும் கூறலாம்
இனி கோடை காலம் வந்து விட்டது உடல் சூட்டைத்தணிக்க தர்பூசணி சாப்பிடலாம் என்று அனைவரும் எண்ணுவோம். நம் ஊரின் முக்கிய வீதிகளில் இப்பொழுதே தர்பூசணி கடைகள் முளைக்க ஆரம்பித்து விட்டது. தர்பூசணி வெய்யில் காலத்தில் அதிகம் உண்ணக்கூடிய உணவாகும். இதில் பல பயன்கள் உள்ளன.
நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், 'ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே...!" என்று அங்கலாய்க்கும் தகவல் இது.
அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
தர்பூசணிக்கு என்ன சிறப்பு?
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
வெள்ளை பகுதியில்தான்...
இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
தர்பூசணியின் பயன்கள்:
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த விடமின் ஸீ யும் விடமின் அ (ஒரு துண்டு பழத்தில் 14.59 . ஆஃப் விடமின் ஸீ அண்ட் 556.32 . ஆஃப் விடமின் அ) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு விடமின் ப்6 ம் விடமின் ப்1 ம், கனியுப்புக்களான . அண்ட் . மும் உண்டு.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.
Casino Resort & Spa - Hollywood, FL - JM Hub
ReplyDeleteThe resort offers 포천 출장안마 guests an unparalleled travel 남원 출장안마 experience. Whether you're heading out 포항 출장샵 for a rainy 충청북도 출장샵 afternoon or on your way to the 과천 출장샵 casino, this resort offers